4 அல்லது 5 குமாரர்கள் இருக்கும் ஆத்தில், பெரியவர் மட்டும் அவர்களுடைய அப்பா அம்மாக்கு சிரார்தம் செய்தால் போறுமா அல்லது ஒவ்வொருவரும் தனித்தனியே செய்யனுமா? மேலும் காசிக்கு சென்று ஒருமுறை பெற்றவர்களுக்கு சிரார்தம் செய்து விட்டால் போறும் அப்புறம் வருடாந்திர சிரார்தம் செய்ய தேவை இல்லை என்று சொல்கிறார்களே ? அது சரியா ?
Announcement
Collapse
No announcement yet.
ஒரு சந்தேகம்
Collapse
X
-
ஒரு சந்தேகம்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smartTags: அடை, ஆசை, இந்தியா, இல்லை, எப்படி, காசி, காரணம், சாப்பிட, ச்ராத்த, தர்மம், பாக்யம், பாட்டி, ராம, வாழ்க்கை, விஷ்ணு, all, brahmins, doing, duties, duty, every, for, forums, give, given, hat, have, his, kasi, member, must, one, part, sacred, swami, that, the, this, towards, way, what, which, world, would, your
-
Re: ஒரு சந்தேகம்
ஶ்ரீ:
அடியேனுடைய முந்தைய புத்ர பாக்யம் பதிவில் உள்ள விஷயங்களைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அந்தக் கேள்விக்கு அடியேனின் பதில் இந்தக்கேள்விக்கான பதிலால் மேலும் ஊர்ஜிதமாகும்.
அதாவது அங்கு எழுதியதை சுருக்கமாக மீண்டும் இங்கே தருகிறேன்.
கர்த்தாவுக்காக கர்மாவே தவிர,
கர்மாவுக்காக கர்த்தா இல்லை!
அதாவது, தர்மம் என்ற சொல்லுக்கு ஸ்வபாவம் அல்லது எப்படிஇருக்க வேண்டுமோ அப்படிஇருப்பது என்று பொருள்.
அதாவது,
பால் வெள்ளையாக இருப்பதும்,
நீர் நிறமற்றதாக இருப்பதும் அதன் ஸ்வபாவம் அதுதான் அதன் தர்மம்.
நீலமாக இருக்கும் பாலைப் பார்த்தவுடன் "ஹே! இதென்ன இப்படி இருக்கு"! என்று கூச்சலிடுவோம்.
ஏனென்றால் பால் தன் தர்மத்தில் இல்லை.
அதுபோல் மனிதன் - அதிலும் ப்ராஹ்மணன் என்றால் அவன் இப்படி இப்படி இருக்கவேண்டும்
இன்னின்னதைச் செய்யவேண்டும், இன்னின்னதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் விதித்துள்ளது.
அதற்கு மாறி நடக்கும்போது அது அதர்மம் ஆகிவிடுகிறது.
தான் யாருக்கு உபயோகமாக இருக்கிறோம் என்பதைப் பாராமல்
எப்போதும் யாருக்காகவும் வெள்ளையாகவும், சத்தானதாகவும்,
ருசியுள்ளதாகவும் இருக்கவேண்டியது பாலின் தர்மம்.
அதுபோல்,
தன்னை மனிதனாக - அதுவும் ப்ராஹ்மணனாகப் பிறக்க ஹேதுவாக இருந்தவனைக் குறித்து
ச்ராத்தம் தர்பணங்கள் செய்யவேண்டியது ப்ராஹ்மணனின் தர்மம்.
ப்ராஹ்மண வர்ணத்தைச் சேர்ந்தவன், க்ருஹஸ்த ஆச்ரமத்தை அடைந்தவன்
இன்னின்ன கடமைகளை ஆற்ற வேண்டும் என்று விதி உள்ளபடியால் அதை அனைவரும்
செய்தேயாகவேண்டும்.
ஒருவனுடைய வயிற்றுப் பசிக்கு சோறு போடுவதாக இருந்தால் அதை ஒருவன் செய்தால் போதும்
மேலும் அந்த ஒருவன் பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை,
எவனாவது ஒரு மூன்றாவது மனிதனாகக் கூட இருக்கலாம்.
இதைச் செய்யவேண்டியது இவன் கடமை, தர்மம் என்பதால் அவன் எந்தக் கேள்வியும்
கேட்காமல் அனைவரும் செய்யவேண்டியதே உசிதம்.
சுலபமாக உள்ள தர்பணத்தை மட்டும் கேள்வி கேட்காமல், எத்தனை பிள்ளைகள்
உள்ளனரோ அத்தனைபேரும் செய்கிறேன் என்கிறார்கள்.
ச்ராத்தம் தனித் தனியாக செய்வது, செலவு கடினம் என்பதால் இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன.
வைணவர் ஆயினும், ஸ்மார்த்தர் ஆயினும் எந்தச் சங்கல்பம் செய்யும்போதும்
ஶ்ரீபகவத் ப்ரீத்யர்த்தம் - நாராயண ப்ரீத்யர்த்தம், பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
என்று பகவானை - கடவுளை முன்னிட்டுக்கொண்டுதான் வைதீக காரியம் செய்கின்றனர்.
எங்கப்பா ப்ரீதிக்காக என்று சொல்லுவதில்லை.
ஒருவேளை அப்பா ப்ரீதிக்காகப் பண்ணுவதென்றால் ஒருவன் பண்ணினால் போறும்.
பகவத் ப்ரீதி அனைத்துப் பிள்ளைகளுக்கும் வேண்டுமல்லவா?
பெண்களுக்கு ஏன் இதுமாதிரி கடமைகள் கொடுக்கப்படவில்லை என்று கேட்பார்கள்.
"எனக்கு முன் பத்து தலைமுறை, பின் பத்துத் தலைமுறை மற்றும் என்னையும் சேர்த்து
21 தலைமுறையினர் செய்த பாபங்கள் எல்லாம் தீர்ந்து எங்களுக்கு நல்ல கதி ஏற்படவேண்டும்"
என்று சங்கல்பம் செய்துகொண்டு, கன்னியாக இருக்கும்போதே, பெண்ணை ஒரு ஆணுக்குத்
தானமாக கொடுத்து, அவளால் அடையவேண்டிய சுக்ருதங்களை ஒரேவழியாக ஒரு தகப்பன்
அடைந்துவிடுகிறான், எனவே, அந்தத் தகப்பனுக்காக எந்தக் கடமையையும் பெண்கள்
செய்யத் தேவையில்லை என்பது சாஸ்த்ரத்தின் நோக்கம்.
எனவே ஒருமுறைக்கு ஆயிரம் முறை சொல்கிறேன்,
எந்த வைதீக கர்மாவையும் - யாருக்காகச் செய்கிறோம் என்ற நோக்கில்
பார்க்காமல், நம்மைப் படைத்த பகவான் நம்மிடம் இதை எதிர்பார்க்கிறான்
இது நம் கடமை என்ற நோக்கில் அனைத்தையும் விடாமல் பண்ணவேண்டும்.
மேலும் காசி, காயவுக்குச் சென்று ச்ராத்தம் செய்து வந்தால் நம் கடமை முடிந்துவிடுமா?
கங்கையில போய் ஒருதரம் முழுகிட்டு வந்தா அதுக்கப்பறம் ஆயுசுக்கும் குளிக்கவேண்டாம்
என்று சொன்னால் எவ்வளவு பொருத்தமாக இருக்குமோ, அப்படிப்பட்டதே மேற்படி வாதமும்.
சாப்பிட்டு சாப்பிட்டு எந்த வேலையையும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால்
உடம்பு பருமனாகி எதற்கும் ப்ரயோசம் அற்றதாகிவிடும்.
டாக்டரிடம் போனால் தினமும் வாக்கிங் போங்கோ, எச்சர்சைஸ் பண்ணுங்கோன்னு
எந்தளவுக்கு பெருக்க வச்சிருக்கமோ அந்தளவுக்கு ட்ரில் வாங்கிடுவார்.
அதுபோல் நடைமுறை வாழ்க்கையில், சரீர இச்சைக்கு உட்பட்டோ,
பொருள் ஆசையினாலோ தினசரி அதர்மமான காரியங்களில் ஈடுபட்டு
பாபங்களைச் சேர்த்து வருகிறோம் (சாப்பிட்டு உடம்பில் கொழுப்பை சேர்ப்பதுபோல்)
அந்தப் பாபங்களை அவ்வப்போது போக்கிக்கொண்டு, சுகமான, ஆரோக்யமான
வாழ்க்கை வாழ வழியாகத்தான், சந்தியாவந்தனம், தர்பணாதிகள், ச்ராத்தங்கள்
போன்ற வைதீக கடமைகளை பகவான் கொடுத்திருக்கிறான்.
இந்த எக்சர்சைஸ் எல்லாப்பிள்ளைகளும் பண்ணவேண்டும்,
காசி-கயாவுக்கு போனாலும், போகாட்டாலும் நிறுத்தக்கூடாது.
Re: ஒரு சந்தேகம்
Swamin
No one else could have elucidated in a clearer way the indepth and underlying essence of the duties
ordained on brahmins than your dearself. I am sure that every brahmin member already follows your advice
and would continue doing so uninterruptedly. We must regard all duties as sacred and they are part of our religious
life.We are not in this world to do what we wish; we must be willing to do that which it is our duty to do. The span
of life is given to us for lofty duties which include duties towards the pithrus.
PC RAMABADRAN
Comment
Re: ஒரு சந்தேகம்
ஶ்ரீ:
இங்கு முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் மற்றொன்று:
வைதீக கர்மாக்களை நம்பிக்கையுடன் செய்பவர்கள்,
அக்னி, வருணன், குபேரன், நவக்ரஹங்கள் போன்ற தேவதைகளை
ஆவாஹனம் செய்து, அந்தந்த தேவதைக்குரிய மந்த்ரம், வஸ்த்ரம், நைவேத்யம்
போன்றவற்றால் ஹோமம் செய்து ஆராதிக்கிறோம்,
இதனால் அந்த தேவதைகளின் பசியைப் போக்குவதற்காக
நாம் உழைத்துச் சம்பாதித்த பொருளையும், பொன்னான நேரத்தையும்
செலவிட்டோம் என்று ஒருவன் கருதுவானேயாகில், அது எவ்வளவு
அறிவுடைமையோ, அதேபோன்றே
பித்ருக்களின் பசியைத் தீர்ப்பதற்காக நாம் ச்ராத்தம் செய்கிறோம் என்று எண்ணுவதும்.
இந்த்ர, வருணாதி தேவதைகள் உலகினர் அனைவர்க்கும் பொதுவாக விளங்கி,
மக்களின் தேவைகளையும், வேண்டுகோளையும், ச்ரத்தையையும் கருதி
சில விஷயங்களை அநுக்ரஹிப்பதற்காக இருப்பதுபோல்,
பித்ருக்கள் என்பவர்களும் தேவதைகளே,
ஆனால் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குமான ப்ரத்யேகமான தேவதைகள்!!
அவர்களை ஆராதிப்பதின் மூலம்தான் ஒருவன் சரியான இல்லற வாழ்க்கையையும்
நல்ல சந்ததிகளயும் பெறமுடியும்!
இதனால்தான், ஒவ்வொரு சுப காரியத்திலும் நாந்தி என்ற பெயரில்
பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ, மாத்ரு வர்க பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ,
விச்வே தேவர்கள் இருவர், விஷ்ணு ஒருவர் என 9 பேராக பித்ருக்களை
வரவழைத்து நாந்தி ச்ராத்தம் பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரத்தில் விதித்துள்ளார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் நாந்தியை வாத்யார் ஸம்பாவனையோடு சேர்த்துவிட்டார்கள்,
வாத்யார் ஏதோ அதிகப்படி பணம் வாங்குவதற்கா நாந்தி செய்யவேண்டும் என்று சொல்கிறார்
என்று அந்தக் கர்மா செய்வதையே "எங்காத்தில் வழக்கமில்லை" என்று பலர் ஒதுக்கி
எண்ணிறந்த பாப மூட்டைய அதிகரித்துக்கெர்ள்கிறார்கள்.
(வாத்யார்களும் - இதைக் காரணம் காட்டி பணம் வசூலிக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாது.)
இதைத்தான் ஜோதிடர்கள், திருமணத் தடை, புத்ரபாக்யம் இன்மை போன்றவற்றுக்காக
அணுகும்போது, உங்களுக்கு பித்ரு தோஷம் உள்ளது, காசிக்குப்போ, ராமேஸ்வரம் போ
என பல ப்ராயச்சித்தங்களைக் கூறுவார்கள்.
எனவே ச்ராத்தம் செய்வது, நாந்தி செய்வது இவை பித்ருக்களாகிய ப்ரத்யேகமான
தேவதைகளை ஆராதித்து ஆசீர்வாதம் பெறுவதற்காகவேயன்றி அவர்கள் நன்மைக்காக
அல்ல என்பதைப் புரிந்துகொண்டு அனைவரும் கர்மாக்களைச் செய்யவேண்டும்
என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
காசி - கயா செல்வதன் நோக்கம் பற்றி தனியாக ஒரு பதிவைப் படிக்கவும்.
கீழ்க்கண்ட சில காரணங்களால் காசி - கயாவுக்கு ஒருவன் அவசியம் போகவேண்டும் :
http://www.brahminsnet.com/forums/sh...gM454f7w.gmail
Comment
Re: ஒரு சந்தேகம்
ரொம்ப நன்றி மாமா, நாங்க எங்க தாத்தா, பாட்டி ( என் மாமானாரும் மாமியாரும் அவர்களே ) போனபிறகு இது வரை தனியாக ஸ்ரார்தம் செய்தது இல்லை. எங்க பெரிய மாமா தான் செய்வார் நாங்க சௌதி இல் இருந்ததால் இங்கு வரும்போது மட்டும் அவருடன் சேர்ந்து கொள்வோம். மற்ற படி அன்று எங்க மாமா ஸ்ரார்தம் ஆகிவிட்டது என்று சொன்ன பிறகு சாப்பிடுவோம் அங்கு. அவ்வளவுதான். இப்ப பர்மணன்டாக இந்தியா வந்து விட்டோம். இப்ப செய்ய ஆரம்பிக்கலாம் என்று நினைத்தே உங்களை கேட்டேன். ரொம்ப விரிவாக புரிந்துக்கொள்ள எளிமையாக விளக்கி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி, கண்டிப்பாக செய்ய ஆரம்பிக்கிறோம்.Last edited by krishnaamma; 06-09-12, 13:07.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 21:38.
Working...
X
Comment