Announcement

Collapse
No announcement yet.

Info on Tarpanam & sraadham part 1

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Info on Tarpanam & sraadham part 1

    Courtesy:Sri.GS.Dattatreyan
    தர்ப்பணம் - விதிமுறைகள் சில (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்)
    தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள்(Part-1)
    1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
    2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
    3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.


    4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.


    5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.


    6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.


    7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.


    8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்துஅவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.


    9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.


    10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.


    11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.


    12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.


    13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.


    14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.


    15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.


    16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.


    17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்சிவனும் கூறியுள்ளனர்.


    18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.


    19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.


    20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.


    21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.


    22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.


    23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.


    24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.


    25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

  • #2
    Re: Info on Tarpanam & sraadham part 1

    ஶ்ரீ:
    குறிப்பு:- இந்த இடுகையில் உள்ள பல விஷயங்கள் நல்ல நோக்கத்திற்காக, பித்ருக்களை பூஜிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை அனைவரும் உணரச்செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதாயினும், சில விஷயங்கள் லாஜிக்கலாகவும், சாஸ்த்ர ஸம்ப்ரதாய ரீதியாகவும்
    ஏற்புடையனவாக இல்லை.
    உதாரணமாக:
    4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
    ஒவ்வொருமாதமும் அமாவாசை, மாதப்பிறப்பு என இரு தர்பணங்கள் வருகின்றன, ஒரு வீட்டில் யாராவது ஒருவர் அவரது பித்ருக்களுக்கு ச்ராத்தம் தர்பணம் செய்யாமல் இருக்க வாய்ப்பே இல்லை, அப்படியானால்
    எந்த மாதத்தில், எந்த நிகழ்ச்சியில் யாரால் பங்கேற்க இயலும்?

    அதுபோல், ச்ராத்தம் என்பது குதபகாலம் எனப்படும் மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு செய்யவேண்டியது என்றும்,
    தெய்வ சம்பந்தமான பூஜைகள், அபிகமனம், இஜ்யை எனப்படும் மாத்யாஹ்நிகத்திற்கு உட்பட்ட நேரத்தில் செய்யப்படவேண்டியவை
    என்றும் சாஸ்த்ரம் வலியுறுத்துகிறது. எனவே 5ம் எண் தலைப்பிட்ட பத்தியில் குறிப்பிட்டுள்ளதுபோல் ச்ராத்தம் முடிந்தபிறகு
    தெய்வ பூஜைகள் செய்வது ச்லாக்யம் இல்லை.

    பெரியவர்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தவேண்டாம்.
    மேலும், ஒரு குறிப்பிட்ட விஷயம் குறிப்பாக சாஸ்த்ர, ஸம்ப்ரதாய விஷயம் நூறு சதவீதம் நமக்கு நன்றாகத் தெரிந்தால்மட்டும்,
    அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தால்மட்டும் பகிரவும்.
    ஏற்கனவே நன்கு குழம்பியுள்ள வைதீக உலகம் இதுபோன்ற பகிர்வுகளால் மேலும், மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே உதவும்.
    எனவே, சாஸ்த்ர விஷயங்களை, சாஸ்த்ர விற்பன்னர்கள் வாயிலாக அந்தந்த சந்தர்பத்தில் நேரடியாக கேட்டு அறிவதே
    சாலச்சிறந்தது.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Info on Tarpanam & sraadham part 1

      ஸ்வாமின் தங்களது கருத்து 100% ஏற்புடையதே இதைப் பகிரும்போது எனக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டது
      நமது ஃபோரத்தில் விஷயம் நன்கு அறிந்த பலர் இருப்பதால் தவறுகள் ஆணித்தரமாக திருத்தப்படும் என்ற நம்பிக்கையும் இருந்தது ஆயினும் பகிர்வின் இறுதியில் எனது சந்தேகத்தை வெளியிடாத என் தவறுக்கு வருந்துகிறேன்

      Comment


      • #4
        Re: Info on Tarpanam & sraadham part 1

        Sri:
        Thanks Sri.Soundararajan Swamin.
        கொஞ்சம் சிரமமானதாக இருந்தாலும்,
        அப்படியே வழங்குவதற்கு பதிலாக,
        ஐயம் உள்ள விஷயங்களை விட்டுவிட்டு பொதுவான நன்மை அளிக்கக்கூடிய பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
        தகவல் தொகுப்பாக வழங்கினால்
        அப்படியே காப்பி அடித்தோம் என்ற அபவாதத்திற்கும் இடமின்றி அமையும்.
        நட்புமுறை வேண்டுகோள்தான், முடிந்தால் முயற்சிக்கவும்.
        தாஸன்,
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X