பஞ்சாங்கத்தில் கடைசி(column) காலத்தில் ஸ்ராத்த திதி கொடுக்கப்பட்டுள்ளது.உதாரணமாக கிருஷ்ண பஞ்சமி என்றால் அன்றைய காலையில் திதி சதுர்த்தி என இருக்கிறது. அப்படி என்றால் எப்படி ஸ்ராத்த திதி பஞ்சமி ஆகும்.இந்த ஸ்ராத்த திதி எந்த முறையில் எப்படி கணக்கிடபடுகிறது என்று விவரிக்கவும்.
Announcement
Collapse
No announcement yet.
ஸ்ராத்த திதி
Collapse
X
-
Re: ஸ்ராத்த திதி
ஶ்ரீ:
ச்ராத்த திதி மற்றும் ச்ராத்த நியமங்கள் பற்றி திரு.கோபாலன் அவர்களின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது:
ச்ராத்த திதி நிர்ணயம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன், தேடிப்பார்த்து பின்னர் மறுவெளியீடு செய்கிறேன்.
என்.வி.எஸ்
ச்ராத்த நியமங்கள்.
நான்கு நாட்கள் முன்னதாகவாவது ஒளபாஸானம் துவக்க வேண்டும்
.
ஒளபாஸன அக்னியில் தான் ஹோமம் நடக்கிறது. ப்ரஹ்மசாரிகள் ஸமிதாதான அக்னியில் ஸ்ராத்தம் செய்ய வேன்டும். பெற்றோர் இறந்த மாதம், பக்ஷம் திதியில் ச்ராத்தம் வரும்..
திதி இரு நாட்களும் இருந்தால் மத்தியானம் 2 மணி க்குமேல் திதி உள்ள நாளில் செய்யவும். இரு தினமும் சமமாக இருந்தால் முதல் நாள் செய்க.
ஒரு மாதத்தில் இரு திதிகள் வந்தால் பிந்திய திதியில் செய்க. பிந்திய திதியில் மாதப்பிறப்பு தோஷம் இருந்தால் முதல் திதியில் செய்க. காலை 6 மணிக்கு ஸுர்ய உதயம் என்றால் 12 மணிக்கு மேல் குதப காலம் என்று பெயர்.
பகல் 1 ½ மணிக்கு மேல் அபரான்னம் காலம் என்று பெயர். ஒரு மாதத்தில் வரும் இரு திதிகளும் தோஷம் என்றால் பின்னால் வரும் திதியில் ச்ராத்தம் செய்க..ஒரு மாதத்தில் ஒரே திதியானால் தோஷமில்லை
.
ஒரு மாதத்தில் திதியே இல்லாவிட்டால் முந்திய மாதம் சாந்த்ரமான சுத்த திதியில் செய்க. அதுவும் சுத்தமாக இல்லாவிட்டால் பிந்திய மாதம் செய்க.
எக்காரணத்திலாவது திதியில் செய்ய முடியாவிடில் அன்று உபவாஸம் இருந்து மறு நாள் செய்யலாம்.. திதி மறந்தால் க்ருஷ்ணாஷ்டமி, ஏகாதசி அல்லது அமாவாசையில் செய். .
.
ஒரு நாள் என்பது அறுபது நாழிகை கொண்டது.பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை. இந்த பகல் 30 நாழிகையை 5 ஆக பிரித்தால் ஒவ்வொண்றும் 6 நாழிகை. அதாவது 2 மணி 24 நிமிடங்கள்
.
அதாவது 6 மணிக்கு சூர்ய உதயம் என்றால் 6 மணியிலிருந்து 8 மணி 24 நிமிடம் வரை ப்ராதஹ் காலம் என்று பெயர். 8மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்று பெயர்.
10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி 12 நிமிடம் வரை மாத்யானிக காலம் என்று பெயர். இந்த பகல் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்னம் காலம் என்று பெயர். 3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்கால காலம் என்று பெயர்.
மாத்யானிக காலமான 10 மணி 48 நிமிடத்திலிருந்து 11 மணி 36 நிமிடம் வரை கந்தர்வ காலம் என்றும், 11 மணி 36 நிமித்திலிருந்து 12. மணி 24 நிமிடம் வரை குதப காலம் என்றும் 12 மணி 24 ந்மிட்த்திலிருந்து 1 மணி 12 நிமிடம் வரை ரெளஹிண காலம் என்றும் பெயர்.
சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை ,. கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.
வராஹ மூர்த்தியிடமிருந்து தர்ப்பமும் கருப்பு எள்ளும் வந்தது இவை ராக்ஷச எண்ணங்கள் வராமல் தடுக்கும்.
தீட்டு வந்தால் தீட்டு போகும் நாளில் செய்க. வேதம் அறியாதவரை, நோயாளியை ச்ராத்ததிற்கு வரிக்காதே. அண்ணன் தம்பி இருவரையும் ஒரு சிராத்தத்தில் வரிக்காதே.;
சிராதத்திற்கு முன் மூன்று நாட்களாவது நியமமாக இருக்கவும். நமது பாபங்களை அகற்றி கொள்வதற்காக சிராதத்திற்கு முன் கூஷ்மாண்ட ஹோமம் செய்யலாம்.
கூஷ்மாண்டம் என்பது பூஷணிக்காய் அல்ல. சில மந்திரங்கள்.
.
மாதவிடாயாக இருப்பவளின் கணவன் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது. ச்ராத்தம் பண்ணி வைக்கலாம்.. மனைவி, புத்ரன் இல்லாதவரும் ச்ராத்தம் சாப்பிட கூடாது. பத்னி இல்லாவிட்டாலும் புத்திரன் உள்ளவரை கூப்பிடலாம்
.மூன்று நாட்களுக்குள் ச்ராத்தம் சாபிட்டவரும் ச்ராத்தம் சாப்பிட கூப்பிட கூடாது. என்னை சாப்பிட கூப்பிடு என்று கேட்பவரையும் ச்ராத்தம் சாப்பிட கூப்பிடக்கூடாது..
நான் உன் வீட்டில் ச்ராத்தம் சாப்பிடுகிறேன் நீ என் வீட்டில் ச்ராத்தம் சாப்பிடு என்றும் ஏற்பாடு செய்ய கூடாது, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்பிணியின் கணவனும் ச்ராத்தம் சாப்பிட கூடாது .
.பெற்றோருக்கு ஆப்தீகம் முடிக்காதவரும் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது
.
அன்று காலை க்ஷவரம் செய்து கொண்டவரும் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது.
குஷ்டம் சொத்தை பல், சொத்தை நகம் உள்ளவர் சிராத்தம் சாப்பிடக்கூடாது.
இளையவரை பித்ருக்களாக வரிக்க வேண்டும். வயதில் பெரியவரை விசுவேதேவராக வரிக்க வேண்டும். நாம் உடுத்துவது போல் நல்ல வேஷ்டி வாங்கி தர வேண்டும். சக்தி உள்ளவர் வென் பட்டு வாங்கி தரலாம். வசதி இல்லாதவர்கள் வஸ்திரத்திற்கு பதிலாக பூணூலாவது தருக. கர்த்தா புதுபூணல் அணிந்தே ஆரம்பிக்க வேண்டும். மந்திரங்களை நன்கு ஸ்வரத்துடன் உச்சரிக்க வேண்டும்,
அவசரமே கூடாது. நிறைய தக்ஷிணை கொடுக்கவும். கோபமே கூடாது. வரித்தவர்களை தெய்வம் போல் நடத்துக.
முன்பு நான்கு நாட்களாவது பரான்னம் சாப்பிடக்கூடாது. சகோதரி; மாமனார்; குரு; மாமன் இவர்களது அன்னம் பரான்னமல்ல .முன்னே ஏழு நாட்கள் எண்ணைய் தேய்த்து கொள்ளகூடாது. உடலுரவு கூடாது.மெத்தை படுக்கை கூடாது.
ச்ராத்தம் அன்று பகலில் தூங்க கூடாது. புஜித்த பின் வேறு ஒன்றும் புஜிக்ககூடாது. வரிக்க பட்ட பின் வரிக்கப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது… கர்த்தா தாம்பூலம் போட்டுக் கொள்ளக் கூடாது.
பவித்திரத்துடன் ப்ராமனர் காலை அலம்பாதே. வலது காதில் பவித்ரத்.தை கழட்டி வை. கால் அலம்பும் இடத்தில் விச்வேதேவருக்கு சதுரமாகவும் பித்ருக்களுக்கு வட்டமாகவும் பசுஞ்சாணியால் கீழே இடம் செய்யவும்.
இருவர்களது பாத ஜலமும் ஒன்றாக சேரக்கூடாது. மணலோ துணியோ நடுவில் போடவும். பிராமனர் குனுக்காலை மாத்ரம் அலம்புக கனுக்காலுக்கு மேலும் உள்ளங்காலும் அலம்பக்கூடாது… ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ராமணர் காலை, இலையை, அன்னத்தை, அபிகாரம் செய்யாதே.
அன்று காலை நனைத்து உலர்த்திய மடியையே அணிக. எல்லா சாமான்களையும் அலம்பியே சேர்க்க வேண்டும். உப்பு, வெல்லம் போன்றவற்றை ப்ரோக்ஷிக்க வேண்டும் .சிலர் கடுகு தாளிப்பதில்லை. சிலர் தாளிப்பர்,, சிலர் தேங்காய் சேர்ப்பர். சிலர் சேர்ப்பதில்லை. அவரவர் முன்னோர் செய்த படி செய்ய வேண்டும்..
பஞ்சாக்ஷரி ,அஷ்டாக்ஷரி உபதேசம், மந்த்ர ஜபம் இல்லாதவர் சமைக்ககூடாது. உறவு அல்லாதவரோ வேலைக்காரியோ சமைக்ககூடாது.
மாதவிடாயிக்கு காலமான ஸ்த்ரீ சமைக்ககூடாது. மாதவிடாய் குளித்த அன்றும் சமைக்ககூடாது. ஈர வஸ்திரத்துடன் சமைக்க்கூடாது. சமையல் செய்யும் போது மல ஜலம் கழிக்க நேர்ந்தால் ஸ்நானம் செய்து விட்டு சமையல் செய்ய வேண்டும்.
கர்பிணியும் நோயாளியும் சமையல் செய்யக்கூடாது கச்சமில்லாமலும் சிகையுள்ள விதவையும் சமையல் செய்ய கூடாது.
பேசிக்கொண்டோ,அழுதுக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ தலை மயிரை அவிழ்த்துக்கொண்டோ சமையல் செய்ய கூடாது. காபி முதலியன அருந்தியவர் சமையல் செய்ய கூடாது.
சொந்த வீட்டில் ஸ்ராத்தம் செய்வதே உசிதம்..அன்யர் வீடு ஆனால் வாடகை தந்து செய்யவும். நன்கு சுத்தம் செய்த பாத்ரத்தில் சமைக்கவும். இரும்பு பாத்ரம் வேண்டாம்.. மணி ஒசை, திலகம்,, இரும்பு வேண்டாம்;
அன்னத்தை கடைசியில் வடிக்க வேண்டும். இலையில் வைக்கும் போது புகை கிளம்ப வேண்டும்.
ச்ராத்தத்திற்கு ஏற்றவைகள்;உளுந்து, கருப்பு எள்ளு; கோதுமை; பயறு. பாகற்காய்; பலாக்காய்; மாங்காய்; வாழைக்காய். புடலங்காய்.; அவரைக்காய்; வாழைத்தண்டு,; சேப்பங்கிழங்கு; கருணை கிழங்கு; சேனை கிழங்கு பிரண்டை; தூதுவளை, கருவேப்பிலை; எலுமிச்சம்பழம்.,வாழைப்பழம்., கண்டங்கத்திரி, மின்னல் கீரை, தேன், நெய்., வெல்லம், பசுந்தயிர், நெல்லி.
மாதுலம் பழம், இலந்தை பழம். ;பசும்பால்; உப்பு, ஜீரகம்;;மிளகு .,;
சிலர் கடுகு; தேங்காய்; பூஷணிக்காய், வள்ளிக் கிழங்கு, விளாம்பழம், மிளகாய். கடலை சேர்ப்பர். அவரவர் குலாசாரப்படி செய்க.
சேர்க்ககூடாத பொருள்கள்; காராமணி, கொள்ளு;துவரம் பருப்பு, பெருங்காயம்; முருங்கை காய், கத்ரிக்காய்; சுரைக்காய்,.
வாழை இலை அடி ,நுனி நறுக்ககூடாது. நரம்பையும் கிழிக்க்கூடாது .இடது புறம் நுனி அமைந்து இருக்க வேண்டும்.
பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலையை பூமியில் புதைக்க வேன்டும். அதை நாயோ இதரர்களோ தொடக்கூடாது. பாழுங் கிணற்றிலும் போடலாம்.
.
வசதி இல்லாத இடத்தில் பசு மாட்டிற்கு கொடுக்கிறார்கள். அதுவும் சரியில்லை;.அன்றெல்லாம் வைத்திருந்து மறு நாள் காலையில் அப்படி செய்கின்றனர். பசுவிற்கு எச்சில் இலை கொடுக்க கூடாது என்பது விதி. வேறு வழியில்லை..
Re: ஸ்ராத்த திதி
ஸ்ரீ bmbc அவர்களுக்கு நன்றி.தாங்கள் திரு கோபாலன் ஸ்ஸ்வாமி அவர்களுடையவிளக்கத்தை மறுவெளியீடு செய்தமைக்கு நன்றி. அவர்கள் ஸ்ராத்த திதி பற்றி விளக்கும்பொது ஒரு பகலை 5 பாகமாக பிறித்தால் 4வது பாகமாகிய அப்பரான்னம் காலத்தில் வரும் திதி தான் அன்றைய ஸ்ராத்த திதி என்று எதொ ஒரு வைதீக புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். இதை ப்பற்றி திரு கோபாலன் ஸ்வாமி தான் விளக்கவேண்டும்.அடியேனுக்கு தேவையான மற்ற விவரங்கள் மறுவெளியீட்டில் கிடைத்துவிட்டன. மிக்க நன்றி.PSNLast edited by P.S.NARASIMHAN; 20-02-15, 10:12.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 14:12.
Comment