தனது சகோதரர் பரமபதிவிட்டது தெரிந்து வெளி வூரில்இரிந்து நேராக அவர்வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு இரவு தங்க மற்ற ஒருவர் வீட்டிற்கு சென்று ஸ்நானம் செய்து அங்கேயே தங்கலாமா.? இல்லை வந்த ஊருக்கே நேராக திரும்பி சென்றுவிட வேண்டுமா? இதில் பலர் பலவித கருத்துக்களை சொல்கிரார்களே . அவசரம் பதில் சொல்லவும் அடியேனின் மைத்துனி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாள் .உடனடி உங்கள் advice தேவை...நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
இரவு தங்குதல்
Collapse
X
-
Re: இரவு தங்குதல்
ஸ்ரீ:
இதனால் யாருக்கும் எந்த தீங்கும் நேராது. தோஷம், பாபம் எதுவுமில்லை.
ஆனால் ஏனோ (அறியாமை, அச்சம் காரணமாக) பலர் இதை அனுமதிக்க பயப்படுகிறார்கள்.
ஒருவரின் இதுபோன்ற செயல்களால் மற்றவருக்கு தீங்கை உண்டாக்க முடியும் என்பது அறியாமை அன்றி வேறில்லை.
அவர்கள் நிம்மதிக்காக, முடிந்தால் வீட்டுக்கு வெளியிலேயே ஸ்நானம் செய்துவிட்டுச் செல்லலாம்.
Re: இரவு தங்குதல்
ஸ்வாமின் தங்களுடைய உடனடி கருத்தையும் அதை கொண்டு மற்றவர்களின் அறியாமையையும் பயத்தையும் நீக்கி உம்முடைய உபதேசத்தையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .உமக்கு அடியேன் எம்மாதிரி என் நன்றியை தெரிவிப்பது என்று தெரியவில்லை. எனது மனப்பூர்வமான நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.இந்த 82 வயதில் அடியேன் மைத்துனி மற்றவர்களுக்கு பயந்துகொண்டு சோளிங்கபுரம் 6 மணிக்கு மேல் புறப்பட்டு சென்றுவிட்டார்.என்ன சிரமப்படுகிராரோ தெரியவில்லை. புத்தி வந்தது ஸ்வாமின்...என்றும் தங்கள் அடியேன் நரசிம்ஹன் .
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 03:44.
Comment