Announcement

Collapse
No announcement yet.

புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

    श्री: स्वमिन्

    கன்னிகைகளை மட்டுமே பெற்றவற்கோ அல்லது புத்ர பாக்யம் இல்லாதவர்களோ, இவர்களின் கதி என்ன? அபர கார்யங்கள் தவிர்த்து வேறு வைதீக கார்யங்களிற்கோ அனுஷ்டானங்களிற்கோ புத்ரனின் அவஸ்யம் உண்டா? புத்ர பாக்யம் அற்றவன் எதை இழக்கிறான்?

    விளக்கி அருளும்படி பிரார்த்தித்துகொள்கிறேன்

    - அடியேன்

  • #2
    Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

    ஶ்ரீ:
    புத்ர பாக்யம் இல்லாதவனின் கதி என்று பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் ஒரே விதியாகப் பேசமுடியாது.
    காரணம்:
    ஜீவர்கள் "புநரபி ஜனனம் புநரபி மரணம்" என்பதற்கிணங்க பிறவியை எடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.
    இந்த ஜன்மத்தில் மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் அடுத்த ஜன்மத்தில் மனிதனாகத்தான் பிறக்கவேண்டும்
    என்ற கட்டாயமில்லை.
    இந்த ஜன்மத்தில் கிடைத்த கர்ண களேபரங்களை(கர்மேந்த்ரியங்கள், ஜ்ஞானேந்திரியங்களைக்) கொண்டு
    எதைச் சம்பாதித்தான் என்பதைப்பொறுத்தே அடுத்த பிறவி அமையும்.

    சாதாரணமான புண்ணியம், சாதாரணமான பாபம் இப்படி இரண்டையும் கலந்து செய்து
    மறுபிறவி எடுப்பவர்கள் (நடுத்தர வர்கத்தினரைப்போல) பாடு ஓரளவிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக
    இருக்கும்.
    அதாவது,
    இந்த வகையில் இருப்பவர்களே அதிகம் என்பதால், இப்படிப்பட்டவர்கள் பிறப்பதற்கான யோனி
    சுலபமாகக் கிட்டும், அதனால் அவர்கள் மரணத்திற்குப்பின் ஏற்படும் அவஸ்தை -
    அவஸ்தை என்றால் நிலை என்று பொருள் -
    (ஆனால் இங்கு சிரமம் என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்)
    அந்த அவஸ்தையிலிருந்து சுலபமாக விடுபட்டு மீண்டும் பிறவியடைவார்கள்.

    தசரதனைப்போல, தேவகியைப்போல, புண்டரீகனைப் போல,
    மிக அதிகமாகப் புண்ணியம் செய்தவர்கள், அந்த அளவிற்குப் புண்ணியம் செய்த பெற்றோரை
    அடைந்த பிறகே பிறவி எடுக்க முடியும்.

    அதேபோல,
    மிக அதிகமாகப் பாபம் செய்தவர்களுக்கும் உரிய பெற்றோர் கிடைத்தபிறகே பிறவி ஏற்படும்.

    அதுவரை உள்ள நிலையில் மிகுந்த புண்ணியம் உள்ளவர்களாகில்
    புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மேல் லோகங்களிலும்,

    பாவம் செய்தவர்களாகில் அதல, விதல, சுதலாதி பாதாள லோகத்திலும் சஞ்சரித்து
    அந்தந்த லோகத்திற்குண்டான சுக துக்காதிகளை அநுபவித்துககொண்டிருப்பர்.
    இவர்களுக்கு பிறவி எப்படி ஏற்படுகிறது என்பதை வேதம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
    மேலே உள்ள ஆன்மாக்கள் மழை பொழியும்போது பூமிக்கு இறங்கி
    உணவில் கலந்து, ஜனன சுக்கிலத்தில் ப்ரவேசிக்கிறார்கள்.
    ஒரு ஆணின் சுக்கிலத்தில் உள்ள மில்லியன் கணக்கான ஆன்மாக்களில் ஏதோ
    ஒன்றிரண்டு மட்டுமே பிறவி அடைகிறது.

    அதே போல், பூமிக்கடியில், கீழ் லோகத்தில் உள்ள ஆன்மாக்கள்,
    நீரூற்றுகள், எரிமலைகள், பூகம்பங்கள், சுனாமிகள் ஏற்படும்போது சில வெளியேறுவதும்,
    சில உள்ளே புகுவதும் செய்கின்றன.

    இப்படியாகத்தானே, ஆன்மாவின் பயணத்தில் சரீரம் என்பது ஒவ்வொரு நிறுத்தம்
    அல்லது ஸ்டேஷன் ஆகும். முன்குறிப்பிட்டதுபோல் பாவ புண்ணியத்திற்கேற்ற
    சரீரம் கிடைக்கும்,
    நல்லவர்களின் - ஸத் ஸங்கம் ஏற்பட்டால், மேன்மேலும் உயர்ந்த பிறவியை அடைந்து,
    கடைசியாக வேதத்தை அநுஷ்டிக்கும் பிறவி ஏற்படுகிறது.

    வேதத்தால் குறிப்பிடப்படும் ஏதாவது ஒரு மார்கத்தை அடைந்து
    அந்த ஆன்மா முக்தியடையவேண்டும்.

    இந்த விளக்கத்தை அறிந்தால்தான் புத்ர பாக்யத்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதை
    ஓரளவிற்குப் புரிந்துகொள்ள இயலும்.

    ஒரு ஆன்மா புத்ரனாக பிறவி எடுக்கக் காரணமாக இருப்பவன் பிதா.
    கோடிக்கணக்கான ஆன்மாவில் ஒரு ஆன்மாவாக இவன் பிறக்கக் காரணமானவன்
    காரண புருஷன்.
    எனவே, ஒரு புத்ரன்தான் பிதாவுக்குக் கடமைப்பட்டவனே தவிர,
    பிதா தன் பிதாவுக்குத்தான் கடமைப்பட்டவனே ஒழிய தன் புத்ரனுக்கு அல்ல.
    (புத்ரனுக்குத் தேவையான சமூக, பொருளாதார, கல்விக் கடமைகளை இங்கே குறிப்பிடவில்லை)
    எனவேதான்,
    தன் பிறவிக்குக் காரணமானவர்களை தெய்வத்திற்குச் சமமாகக் கருதி
    பல கடமைகளை (கர்மாக்களை) புத்ரனுக்கு விதித்துள்ளது.
    அந்தக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றினால்தான் பாபமற்றவனாகி
    மேலும் நற்பிறவியை ஒருவன் அடைய இயலும்.

    தன் காலத்தில் சாஸ்த்ரப்படி அனைத்துக் கடமைகளையும் செய்த ஒருவனுக்கு
    மரணத்திற்குப்பின் புத்ரன் இல்லாமல் போனாலோ, புத்ரன் இருந்தும் செய்யாமல் போனாலோ
    அதனால் எந்த நஷ்டமும் இல்லை.

    புத்ரன் இல்லாமல் போனால் அத்துடன் சந்ததி முடிவடைந்தது
    அந்த வம்சத்தில் அனைவரும் கரையேறிவிட்டார்கள் என்றே அர்த்தம்.

    புத்ரன் இருந்தும் செய்யாமல் போனால், அவர்கள் கரையேறுவதற்கு
    சாஸ்த்ரம் பல்வேறு வழிமுறைகளை வைத்துள்ளது.

    ஒவ்வொருவரும் ச்ராத்தம் செய்யும்போது,
    அன்ன ஹோமம், ஹோமசேஷம், பித்ரு போஜனம் ஆகிய மூன்று விஷயங்கள் மட்டுமே
    நேரடியான மூன்று தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்களுக்காகச் செய்யப்படுகிறது.

    இலை எதிரில் சாதம் உதிர்ப்பது, காக்காய்க்கு பிண்டம் வைப்பது போன்றவை
    தன் வம்சத்தைச் சேர்ந்த இதுபோன்ற பித்ருக்களுக்குத்தான் போகிறது.

    மூன்று தலைமுறையில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு ச்ராத்தம் செய்பவர்
    உயிருடன் இருந்து ச்ராத்தம் செய்யும்வரை, அதே இடத்தில் இருந்து அவற்றைப்
    பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
    ஒரு வேளை அவர் தன் புண்ணிய காரியங்களாலோ,
    பெருமாள் க்ருபையினாலோ,
    ஆசார்யாளின் அநுக்ரஹத்தாலோ,
    பாகவதர்களின் அருள்வாக்கினாலோ
    நல்ல கதியை மோக்ஷத்தை அடைந்திருக்கக்கூடும்
    ஆனால், விதிக்கப்பட்ட சாஸ்த்ரம் எந்தப் பழுதும் இன்றி நடக்கவேண்டும்
    என்பதற்காக, வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதுபோல,
    பகவான் தானே பித்ரு ஸ்வரூபியான நின்று அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறான்.
    எனவேதான், ச்ராத்தங்களில், ச்ராத்த பலனை தத்தம் செய்யும்போது,
    விச்வேதேவா:, பித்ருபிதாமஹப்ரபிதாமஹா: என்று கூறாமல்
    "விச்வேதேவ ஸ்வரூபி, பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி,
    ப்ரத்யக்ஷ விஷ்ணு ஸ்வரூபி 'ஸர்வாகார: பகவான்' (எல்லா ரூபமாகவும் இருப்பவன்)
    ஶ்ரீஜனார்தன: ப்ரியதாம்" என்றே தத்தம் செய்யப்படுகிறது.
    எனவே,
    ஒரு யோக்யமான ச்ரேஷ்டமான புத்ரனை உடையவன்
    இருக்கும்போதும், இறந்த பிறகும் (ஸபிண்டீகரணத்தன்றுவரை) சில புண்ணியங்களை அடைகிறான்.

    ஒரு அயோக்ய சிகாமணிணைப் புத்திரனாகப் பெற்றவன்
    இருக்கும்போது பாபங்களை அடைந்தாலும், இறந்தபிறகு அவனால்
    அவனுக்கு பாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை.

    புத்ர பாக்யத்தால், தள்ளாத காலத்தில் அநுஷ்டானத்திற்கு உதவி இருக்கலாம்,
    புத்ர பாக்யமின்றி அநுஷ்டிக்கப்படாததால் அவனுக்கு பாபம் நேராது.
    புத்ர பாக்யத்தால் பலன் அடைபவன் புத்ரனே அன்றி
    பிதாவுக்கு எந்த பெரிய நஷ்டமும் இல்லை என்பதே அடியேன் துணிபு.
    மிக நல்ல கேள்வி கேட்டீர்கள், நன்றி!
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

      If one person is having two daughters only his apara karyam may be done by his brother,/brother's son and also his yearly sratham will be done by his brother/ brother's son. His son-in-law is also eligible to do apara karyams and sratham. One person can give money to somebody and that person who got the money is also eligible.

      Any dayadhis and same gothram people are eligible to do apara karyam and sratham. One person can take sweekaara puthran and then he is eligible to do aparams and sratham.

      There is no loss for this person if he is having more money. For doing all other subha karyams there is no need to have children.


      If the son-in law is having aged mother then he may refuse to do apara karyams. because he will not be fit to do apara karyams for his mother if she dies within a year. If the son-in-law is having brother-elder/younger then he can do for his father-in-law and if it happens that his mother's he can request his brother to do karyams for his mother. after one year he can do sratham for his mother and father-in law.

      Comment


      • #4
        Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

        ரொம்ப நல்ல விளக்கம் மாமா ரொம்ப நன்றி
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

          Originally posted by krishnaamma View Post
          ரொம்ப நல்ல விளக்கம் மாமா ரொம்ப நன்றி
          திரு.கோபாலன் அவர்கள்,
          இரு பெண்கள் இருந்தால் - ஸஹோதரனின் பிள்ளைகள்தான் கர்த்தா என்று கூறியுள்ளார்கள்.
          ஸஹோதரனின் பிள்ளைகள் 17வது இடத்தில்தான் வருகிறார்கள்.
          ஸஹோதரன் 16வது இடத்திற்கு வருகிறான். (கீழுள்ள பட்டியலைப் பார்க்கவும்)



          எனவே,
          கர்த்தாவுக்காக கர்மாவே ஒழிய, கர்மாவுக்காக கர்த்தா அல்ல!
          அதாவது கர்த்தாவை முன்னிட்டு கர்மா விதிக்கப்படுகிறது.
          உதாரணமாக:
          ஒரு கம்பெனியில்
          மேனேஜருக்கு என்ன வேலை
          கிளார்க்குக்கு என்ன வேலை
          உதவியாளருக்கு என்ன வேலை
          என்பது அந்த பதவிக்கு பொருப்பேற்றுள்ள மனிதருக்கான பொறுப்பு!
          மேனேஜர் வேலைக்கு நிர்ணயித்தவர்:
          ரிடையர் ஆகிவிட்டாலோ, பணியில் இல்லாதபோதோ, திடீரென்று தவறிவிட்டாலோ,
          பொறுப்பு அடுத்தடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்களுக்குத் தன்னடைவே செல்கிறது.

          இங்கு, இறந்தவரைப் பொறுத்தவரை,
          ரிடையர் ஆகிவிட்டவர் எனக் கொள்ளலாம்.
          தன் காலத்தில் செவ்வனே பணியாற்றி ஓய்வுபெற்ற அவருக்குக் கிடைக்கவேண்டிய பயன்கள் யாவும்
          அவருக்குப் பின் அவரின் பொறுப்பை யார் ஏற்றாலும்,
          பொறுப்பின்றி அப்படியே விட்டுவிட்டாலும்,
          அவருக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான எந்தப் பயனும் கிட்டாமல் போகாது!



          The person in the next order must do the karma if the previous person in the order is not available or not eligible or not applicable or not willing to do etc.


          The order is:
          1. Elder son
          2. If Twins, second born is considered as elder.
          3. If sons for more than one wife, elder by age to be considered.
          4. If get a male child after having a boy as sweekaram, own child should be the kartha.
          5. Son's son - Powthran
          6. Powthran's son
          7. A son who given up as sweekaram - Dhattan.
          8. His (Dhattan's) son
          9. Daughter's son (Tauhitran) having right in property.
          10. Tauhitran (even if there is no property).
          11. Brother if joint family continues.
          12. Wife (Pathni)
          13. If demised is a lady, if there is no issues, son of the co-wife if any.
          14. Husband (Bhartha)
          In the case of a lady, for all mentioned relations should add "Husband's" as prefix.
          15. Dhuhita - Daughter
          16. Brother (Braatha )
          17. Brother's sons
          18. Asotara bhraatha - Sitappa, periyappa sons and their sons.
          19. Pita - Father
          20. Matha - Mother
          21. Snusha - Daughter in law.
          22. Powthri - Son's daughter
          23. Dhowhitri - Daughter' daughter
          24. Powthrasya pathni - Son's son's wife.
          25. Their (24) daughter.
          26. Sweekaram given (dhattan) son's wife.
          27. Bhagini (elder or younger sister)
          28. Bhagineyan (Marumaan, sister's son)
          29. Sapindan (any one of our 7 generation pangali)
          30. Samanodhagan (three generation from mother side)
          31. Matru Sapindan (Mother's 7 generation pangali)
          32. Mother's mother side three generation.
          33. Jaamatha (Son in law) ?? !!
          [This is called Dharma shastra ?!]
          34. Sakha - any friend.
          35. Dhanahaari - Any person who gets the property.
          If many persons availble in the same category then elder by age should gets preference without checking the mother's side or father's side.
          nvs


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

            ஶ்ரீ:
            மேலும் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.
            மேற்படி கர்த்தா க்ரமத்தில் உள்ளவர்கள் (ஆண்கள்)- தனக்கு முன் உள்ளவர் பண்ணாத பட்சத்தில்,
            யாரிடமும் பில் வாங்காமல் தானே ஸ்வயமாகத்தான் பண்ணவேண்டும்.

            9வது இடத்தில் பெண்ணின் பிள்ளை (தௌஹித்ரன்) வருகிறான்
            12வது இடத்தில்தான் பத்னி (இறந்தவரின் மனைவி) வருகிறார்.
            பலர் தௌஹித்ரன் இருக்கும்போது, பத்னியிடம் பில் வாங்கி தௌஹித்ரனையோ
            அல்லது, வேறு ஒருவரையோ செய்யச் சொல்கிறார்கள். இதனால் அந்த தௌஹித்ரனுக்கு
            நிச்சயம் கர்ம ப்ரஷ்ட தோஷம் உண்டாகும்.

            கல்யாணமாகாத பெண்களுக்கு எந்த கர்மாவும் கிடையாதாகையால்,
            பெற்ற பெண் எந்த இடத்திலும் வரவில்லை. பெற்ற பெண், மணமாகி பிள்ளை பெற்றிருந்தால்,
            தன் பிள்ளையை வைத்துத் தன் தந்தையின் கர்மாவைப் பண்ணுவதே ஏற்றமாகும்.

            மேலுள்ள கர்த்தாக் கிரமத்தில் "மாப்பிள்ளைக்கு 33வது இடத்தான்" கொடுக்கப்பட்டுள்ளது?!
            (இதுதான் தர்ம சாஸ்த்ரமா?)
            மேலுள்ள 32 பேர் பண்ணாமல் விட்டபோதுதான் மாப்பிள்ளைக்கு பொறுப்பு வருகிறது.
            ஆனால், பெரும்பாலான க்ருஹங்களில் பிள்ளையில்லாமல் பெண் உள்ளவர்கள்,
            மாப்பிள்ளையை வைத்துப் பண்ணுகிறார்கள்.
            ஆனால் எந்த மாப்பிள்ளையும் பில் வாங்காமல் தானாகப் பண்ணியதாகச் சரித்திரம் இல்லை.


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              15. Dhuhita - Daughter என்றும் In the case of a lady, for all mentioned relations should add "Husband's" as prefix. என்றும் கொடுத்துள்ளிர்களே மாமா, அப்போ அது மாப்பிள்ளை தானே?
              அப்படி மாப்பிள்ளை செய்வதானால் , அவருக்கு அப்பா அம்மா உயிருடன் இருக்கும் பக்ஷத்தில் என்ன செய்ய வேண்டும்? மேலும் அந்த மாப்பிள்ளை ஒரே பிள்ளை யாக இருக்கும் பக்ஷத்தில் என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் சொல்லுங்கோ. எங்களுக்கு ஒரே பிள்ளை தான், இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. மாட்டுப்பெண் ஆத்தில் இரண்டும் பெண்கள். என் மாட்டுப்பெண் மூத்தவள். இந்த தலைப்பை பார்த்ததும் இந்த காரணத்தால் தான் படிக்க ஆரம்பித்தேன். சற்று விளக்குங்கள்
              Last edited by bmbcAdmin; 06-09-12, 14:02.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

                Originally posted by krishnaamma View Post
                15. Dhuhita - Daughter என்றும் In the case of a lady, for all mentioned relations should add "Husband's" as prefix. என்றும் கொடுத்துள்ளிர்களே மாமா, அப்போ அது மாப்பிள்ளை தானே?
                இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை போலும்?!
                மாப்பிள்ளைக்குத்தான் 33வது இடம் கொடுத்துள்ளார்களே.
                Please Read like this "In the case of the demised person is a lady"

                16வது இடத்தில் 'ப்ராதா' என்று உள்ளது,
                இறந்தவர் பெண்ணானால் - 'ப்ராதா' என்பது இறந்தவரின் ஸஹோதரன் என்று ஆகிவிடக்கூடாது
                என்பதற்காக - கவணவரின் ஸஹோதரன் என்று பொருள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
                அவ்வாறு ஒரு ஹிண்ட் கொடுத்தேன், அதுவே குழப்பத்திற்குக் காரணமாகிவிட்டது.

                அது கிடக்கட்டும் - மீண்டும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கேட்டுள்ளீர்கள்.

                "அது என்ன இந்த அபர கர்மா, கொள்ளி வைப்பது என்ன ஒட்டுவார் ஒட்டியா, தொற்று நோயா"?
                "பேய் பிசாசு, பில்லி சூன்ய சமாசாரமா"?
                ஏன் இப்படி இத்தனை பயம் பயப்படுகிறார்கள்?

                கர்த்தா க்ரமத்தைக் கவனிக்கும்போது,
                பொதுவாக, ஒருவன் கர்த்தாவாக வருவதற்கு
                அவனுடைய பெற்றோர் காலமாகும்போதுதான் சாத்தியமாகும்
                ஒருவேளை தன் தாயாருக்கு உடன் பிறந்த ஸஹோதரர்கள் இல்லாதபோது,
                அதாவது தனக்கு முந்தைய ஸ்தானத்தில் உள்ள எட்டு பேரும் இல்லாதபோது,
                ஒன்பதாவது இடத்தில் உள்ள தௌஹித்ரன் கர்த்தாவாகிறான்,
                அப்போது, அவனைப் பெற்றோர் உயிருடன் இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
                அப்படி பெற்றோர் உயிருடன் இருக்கும்போது, தன் கடமையை அவன் ஆற்றவேண்டாமா?

                "பெற்றோருக்கு கொள்ளி வைப்பதற்கு முன் - மற்றோருக்கு கொள்ளி வைக்கக் கூடாது"
                என்று ஏதேனும் சாஸ்த்ரம் உள்ளதா?

                ஒரு ஸம்பவம்:
                ஒரு முறை அடியேன் திருவல்லிக்கேணியில் ஒருவருக்கு தஹன ஸம்ஸ்காரம் செய்து
                கொண்டிருந்தேன், அப்போது, அந்தக் காரியம் செய்வதற்கு ஒரு சொம்பு வைத்திருப்பார்கள்,
                அது சற்று தொலைவில் இருந்தது, அதை எடுத்துக்கொடுக்கும்படி ஒரு பையனிடம் கேட்டேன்,
                அவனும் எடுத்துக்கொடுத்தான் - அவ்வளவுதான், அவன் தகப்பனார், பிடி பிடியென்று பிடித்தார்.
                "அது எப்படி நான் உயிருடன் இருக்கும்போது, கர்மா பண்ணும் சொம்பை என் பிள்ளையை
                எடுக்கச் சொல்லலாம் என்று".
                "எனக்கு அவன் தகப்பனார் உடையவனா, அற்றவனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது,
                நீங்கள் அதில் அவ்வளவு குறிப்பாகப் பார்க்கக்கூடியவர் என்றால், நீ இருப்பா நான் எடுத்துத்
                தருகிறேன் என்றோ, கர்தாவையே வந்து எடுத்துச் செல்லச் சொல்லுங்கள் என்றோ
                கூறியிருக்கலாம்" என கூறி ஒரு வழியாக சமாதானம் செய்தோம்.

                "கர்மா செய்யும் சொம்பு என்ன டைம் பாமா"?
                அதுவும் அதைத் தொட்டால், தொட்டவனை விட்டு விட்டு
                தொட்டவனுடைய தகப்பனை தாக்கிவிடுமா?

                தானோ, மற்றவர்களோ செய்யும் செயல்களால் தலையெழுத்தையே
                மாற்றிவிட முடியும் என்று நம்புவது எவ்வளவு அறிவீனம்?!


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

                  KARTHRU KRAMAMS: PERSONS WHO CAN DO PITHRU KARMAS.

                  Sastras have indicated the following relationships for the persons who could perform the Aparakarmas. It is important to determine the kartha as per the order in the list on the day of death itself.

                  (1) Eldest son Who is eldest? The boy who among other boys was born first. If there are twins the person born second is the eldest.

                  If there are sons through each of his several wives the one who is eldest is the eldest.

                  If after taking a boy on adoption, a son is born, the biological son is the eldest.

                  (2) POUTHRAS Grand son The son of the deceased person's son.

                  (3) PRAPOUTHRAS: The son's of the pouthras.

                  (4) DHATTAN) Datthans means The son who has been adopted Sons of the individual who had been adopted.

                  The puthran who has been given for adoption.( meaning the person does the karma for his own biological father) All these come undr the category Datthans.

                  (5) DATTHA PUTHRA; The sons of the Datthans.

                  (6) DANAHARI DAUHITRA: The son of the daughter who will be getting the properties of the deceased.

                  (7) DANA GRAHANA ABHAVEPI: Even if no properties are got by a daughter, that daughter's son.

                  (8) PATHNEE: The wife who had married him as per proper proceedures. For WOMEN : if the deceased is a female member and if there are no karthas as per items (1) to (7) shown aove then HUSBAND; The person who has married her as per proceedures laid out in the scriptures... SAPATHNI PUTHRAN; The son of the second or another wife of the husband who has married her.

                  (9)PUTHRI : Daughter of the deceased.

                  (10) JYESTHA BRATHA: The elder brother of the deceased born to the same mother.

                  (11) BRATHA: The other brothers of the deceased.

                  (12) BRATHRU PUTHRA: The sons of his brothers.

                  (13) PITHRUVYA PUTHRA: Sons of the deceased's paternal uncles.

                  (14) PITHRUVYA PUTHRASYA PUTHRAN: The sons of the uncle's sons mentioned in (13).

                  (15) pitha : The father of the deceased.

                  (16) MATHA: The mother of the deceased.

                  (17) SNUSHA: Daughter in law; The person whom his son has married as per traditional custom.

                  (18) POUTHRI: The daughter of the deceased son.

                  (19) DOUHITRI: The daughter of the deceased daughter (who has been properly married).

                  (20) POUTHRASYA PATHNI: The wife of the deceased grandson viz of the son's son.

                  (21)POUTHRASYA PUTHRI: The daughter of the grand son mentioned in (20).

                  To be continued

                  Comment


                  • #10
                    Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

                    (22) DHATHASYA PATHNI: The wife of the adopted son.

                    (23) BHAGINI: The sister( elder or younger) born to the same mother.

                    (24), BAGINEYA: The son of the sister's who had been properly married.

                    (25) SAPINDA: The person of the same family (creed) commensing fro deceased paternal gran father till seven generations before.

                    (26) SAMANODAKA: The person from the same family (Paternal side and creed) who is an older member commencing from 7th to 14 th generations.

                    (27) MATHRU SAPINDA: Any one upto seven generations on the mother"s side.

                    (28). MATHRU SAMANODAKA: Any one from the 7th to 14 th generation on the mother's side.

                    (29) SAGOTHRA: Some one beloning to the same gothram.

                    (30) SISHYA: The person who has studied vedas , satras from the deceased , or the one who has learnt manthras from the deceased.

                    (31), RUTHVIK: Some one from the same gothra who is given fee for the karma (dakahina) When, then are no relatives any brahmin can be asked to do the apara karma on payment of a dakshina fee.

                    (32) BRUTHYA: The person who has worked under thge deceased on emplyment basis.

                    (33), GURU: The guru who has given Manthra Deeksha.

                    (34) ACHARYA: The teacher who has educated the deceased.

                    (35) SAHAAHDHYAYA; The person who studied along with the deceased.

                    (36) JAMATHA: The son in law, The husband of the deceased 's daughter who is married in a traditional fashion.

                    (37) SAKHA: A close friend of the deceased.

                    (38) DANAHAAREE: Person who is getting the properties of the deceased. Any person given a share of the properties can be asked to do the karma.

                    (39). RAJA: The king of the country where the deceased was living. The king should be informed to get the rites got done by his government.

                    This is given by Nannilam Brahmasri. V. RAJAGOPALA GANAPADIGAL in his book PITHRU POOJANAM.

                    These are all olden days rule. Now a days people are breathing their last at the age of 60 to 70. Their children are yet to be married. because of diabetus and other diseases.

                    One person hale and healthy died at the age of forty because of unknown virus attack all of a sudden. he had only daughter studying in school. His wife is only a home maker. he is the only son to his parents. His father expired. In this case his fasther's brother's son has to do all the karmas. Cases are there like this . and in these cases the kartha must be determined by others.and not by the deceased.

                    There is no king now a days or guru or sishyan or nobody studied vedas with him as he has not studied vedas. Now a days each person is having two children only maximum. On those days because of lack of hospital facilities each person had many wives and after each delivery the mother of that child had expired.

                    So he has to marry another wife. Now a days it is not there. Medicine and surgery is far advanced now. In future there will be no periappa or sithappa.

                    Comment


                    • #11
                      Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

                      ஸ்ரீ மாமா. நன்கு விஸ்தாரமாக விளக்கியுள்ளீர்கள், மிக்க நன்றி
                      -அடியேன்

                      Comment


                      • #12
                        Re: புத்ர பாக்யம் இல்லாதவர்கள் கதி என்ன?

                        ரொம்ப நன்றி மாமா ரொம்ப நுணுக்கமான விஷயங்களை ரொம்ப நல்லா தெளிவாய் சொல்லி இருக்கீங்க
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment

                        Working...
                        X