Announcement

Collapse
No announcement yet.

மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்

    ஸ்வாமின்,
    மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள் செய்ய வேண்டுமென்று கூறப்படுகிறதே.இவ்வருடம் கஜச்சாயையன்று ஸக்ருத் மஹாளயம் செய்தவ்ர்கள் அமாவாசையன்று 2 தர்பணங்கள் அதாவது 2 புக்ளங்களுடன் அமாவாசை தர்பணமும் 3புக்ளங்களுடன் இரண்டாவது தர்பணமும் செய்யவேண்டுமா?

  • #2
    Re: மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்

    ஶ்ரீ:

    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்

      மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் தர்பணம் செய்பவர்கள் அந்த பக்ஷத்தின் நடுவில் வரும் ஷண்ணவதி தர்பணங்களை தனி தனியாக செய்ய வேண்டும்.

      ஆப்தீகம் ப்ரதமம் குர்யாத் மாஸிகம் து தத: பரம் தர்ச ஸ்ராத்தம் த்ருதீயம் ஸ்யாத் சதுர்தஸ்து மஹாளய: என்னும் வசனப்படி முதலில் அமாவாசை முதலிய ஷண்ணவதி தர்பணத்தை செய்துவிட்டு

      பிறகு மஹாளய தர்பணத்தை செய்ய வேண்டும். இதைப்போல் நடுவில் மாஸிகம் வந்தாலும் முதலில் மாஸிகத்தை செய்துவிட்டு பிறகு மஹாளய தர்பணம் செய்ய வேண்டும்.

      ஷண்ணவதி தர்பணம் செய்பவர்களுக்கு ஒரே நாளில் இரு தர்ப்பணம் செய்யும் படி நேரும். அப்போது முதல் தர்பணத்தை கடைசி வரை செய்து முடித்து விட்டு , தர்பணம் செய்த பாத்திரங்களை அலம்பி விட்டு புதிதாக

      ஜலம் எடுத்து வந்து அடுத்த தர்பணத்தை ஸங்கல்பம் முதல் ஆரம்பித்து கடைசி வரை செய்ய வேண்டும். இதற்காக மறுபடியும் ஸ்நானம் செய்ய வேண்டாம்.

      ஒரே நாளில் ஒரே பித்ருக்களை குறித்து இரு முறை தர்பணம் செய்ய நேரிட்டால் அத்ற்கு பதிலாக் ஒரு முறை தர்ப்பணம் செய்தாலும் போதும் ((போனால் போகிறது என்பதைபோல்) என்று அனுமதிக்கிறது சாஸ்திரம்

      .இதற்கு அப்யனுக்ஞா விதி என்று பெயர்.. இரண்டு முறை தர்பணம் செய்வதை சாஸ்திரம் தடுக்க வில்லை. இரண்டு முறை செய்வதவால் தோஷம் என்றும் குறிப்பிட படவில்லை.

      மீமாம்ச சாஸ்திரத்தில் இவ்வாறு இரண்டு செயல்களை ஒன்றாக சேர்த்து செய்வதற்கு தந்திரானுஷ்டானம் என்று பெயர். அதாவது இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றாக இணைத்து செய்யலாம்.

      இங்கு ஒரே மாதிரியாக இருந்தால் என்பதற்கு என்ன பொருள். தேச கால கர்த்ரைக்யே தந்திரம் என்பதாக செய்ய வேண்டிய இடம், செய்ய வேண்டிய காலம், செய்ய வேண்டிய கர்த்தா ஆகிய மூன்றும் இரண்டு செயல்களுக்கும் ஒன்றாக இருந்தால் தான் தந்திரானுஷ்டானம் வரும்.

      தர்ம சாஸ்திரகாரர்களின் அபிப்ராயம் :--கிரஹண தர்பண காலம் மாலை ஐந்து மணிக்கு செய்ய வேண்டி வருகிறது. / அமாவாசை தர்பணம் மூன்று மணிக்குள் செய்யபட வேண்டும். ஆதலால் ஒரே நாளில் இரு தர்ப்பணம் செய்ய பட வேண்டும்.

      அமாவாசை தர்பணத்தை முதலில் செய்து விட்டு காருண்ய பித்ருக்களுக்கு மஹாளய தர்பணம் பிறகு செய்ய வேண்டும்.
      காருண்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம் மஹாளயத்தில் இருப்பதால் பதினாறு நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள் இரு முறை தர்பணம் செய்ய வேண்டும்.

      மஹாளய பக்ஷத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் தர்பணம் செய்பவர்கள் அமாவாசை அன்று அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதும்.

      கஜ சாயை அன்று மட்டும் மஹாளய தர்ப்பணம் செய்தால் அமாவாசை அன்று அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதும்.
      பதினாறு நாட்கள் தினமும் மஹாளய பக்ஷத்தின் போது தர்பணம் செய்பவர்கள் அமாவாசை அன்று இரு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்..

      Comment


      • #4
        Re: மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்


        கஜ சாயை அன்று மட்டும் மஹாளய தர்ப்பணம் செய்தால் அமாவாசை அன்று அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதும்.
        பதினாறு நாட்கள் தினமும் மஹாளய பக்ஷத்தின் போது தர்பணம் செய்பவர்கள் அமாவாசை அன்று இரு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்..
        ஶ்ரீ:
        வெளிச்சம் தந்து விளக்கிய ஶ்ரீமான் கோபாலன் அவர்களுக்கு அனந்தமான தெண்டன் ஸமர்ப்பித்த நமஸ்காரங்கள்.

        நகைச்சுவை என்று எண்ணி, குதர்க்கமாக பதில் அளித்தமைக்காக ஶ்ரீமான் சௌந்தரராஜன் ஸ்வாமியிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

        தாஸன்,
        என்.வி.எஸ்




        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்

          Dear Sri Gopalan Sir,
          My question refers to the post id https://www.brahminsnet.com/forums/node/25762/2 dt 04/10/2013 of Sri Mageshiyer. I am highly thankful to you for the detailed reply.This post would be highly helpful to all our members especially to Sri.Cheenu Sir who had taken part in the conversation last year. I once again thank you on behalf of all our members Sir.


          Note:- Dear Sri.Soundararajan sir,
          I edited this your post to include the post bbcode.
          Use the following bbcode to give automatic link to any particular post like this:
          Usage: post id (number only) should be written between [post] bbcode.

          [post]8955[/post]

          NVS
          Last edited by bmbcAdmin; 18-09-14, 18:42.

          Comment


          • #6
            Re: மஹாளய அமாவாசையன்று 2 தர்பணங்கள்

            Dear Srimaan NVS Sir,
            I never misunderstood your question. I thought that either you would have missed to go through the post 8955/2 dt 4/10/2013 of Sri Mageshiyer or you would have forgotten the contents of it.Actually i thought of refering it as a reply to your question.But asking apology for,sorry Sir i am hurt. Please don't use such big words

            Comment

            Working...
            X