ஶ்ரீ:
சுக்குமி ளகுதி பிலி
என்பதுபோல உள்ளது தங்கள் கேள்வி.
ஆயினும் விளக்கமாக பிறகு எழுதுகிறேன் தற்போதைக்கு சிறு விளக்கம்
- பிறகு. தற்போது நேரமில்லை.
1.வ்யசி, வ்யசிரா எல்லாம் ஒன்றுதான் - வ்யதீபாதம் யோகம் வரும் தினத்திலெல்லாம்
ஷண்ணவதி ச்ராத்தம் எனப்படும் தர்பண தினம் - வ்யதீபாத ச்ராத்தம் என்பதை சுருக்கமாக வ்யசிரா
என குறிப்பிடுகிறோம்.
2. அதுபோலவே வைத்ருதிக்கு - வைசிரா
4. ஷடசீதி என்பது ஒரு வகை மாதப்பிறப்பு (சங்க்ரமண) புண்யகாலத்தின் பெயர்
5. ரவி, ஓரவி, பிரவி எல்லாம் ஒன்றுதான் ஆனால் பஞ்சாங்கத்தில ஓரவி எங்கே இருக்கிறது
என்று குறிப்பிடவும். சூரியனுக்கு ரவி என்று ஒரு பெயர் உண்டு.
ஒரு (மேஷ) ராசியிலிருந்து அடுத்த (ரிஷப) ராசிக்கு சூரியன் மாறும் நேரமே (ரிஷப ரவி) என்பதால் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொறு மாத்தின் மாதம் பிறக்கும் நேரத்தை அந்த மாதத்தின் பெயருடன் ரவி என்கிற வார்த்தை சேர்த்து எழுதப்பட்டிருக்கும்.
மேஷ ரவி
ரிஷப ரவி
மிதுன ரவி
கடக ரவி
சிம்ம ரவி
கன்னி ரவி
துலா ரவி
வ்ருச்சிக ரவி
தனுர் ரவி
மகர ரவி
கும்ப ரவி
மீன ரவி
ஶ்ரீ:
ஒரவி
தப்புத்தான்,
கைத் தவறுதலாக 'ஒ' என்கிற எழுத்து அதிகப்படியாக பதிவாகியிருக்கிற விஷயம் தற்போதுதான் தெரிகிறது. அங்கே துலா-ரவி என்றிருந்திருந்தால் சரியாக இருக்கும் ஆனால் இடம் இல்லாதபோது
இப்படித்தான் ஏதாவது நிகழ்ந்துவிடுகிறது.
ஷடசீதியையும் ரவியையும் ஒன்றாகச் சேர்காதீர்கள், ஷடசீதி என்பது விஷ்ணுபதியைப்போல
ஒரு தர்ப்பண புண்யகாலத்தின் பெயர். சில சமயம் அதை விஷ்பதி என்றுகூட போட்டிருப்போம்
இடப்பற்றாக்குறையினால்.
குழப்பம்தான், ஒத்துக்கொள்கிறேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
த்ங்களது இந்த பதில் எனக்கு ந்ல்லதெளிவையளித்துள்ளது இப்படியெல்லாம் கேட்டிருப்பது விஷயங்களைத்தெரிந்துகொள்ளும் ஆர்வக்கோளாறு தான் விள்க்கமானபதிலுக்கு நன்றி
Comment