ஒரு வயோதிக மணமாகாத பெண்மணி பரமபதித்துவிட்டால் அவருக்கு யார் அந்திம கிரியைகளை செய்யவேண்டும் அவருக்கு மற்றவர்களை போல் எல்லா அபர கிரியைகளையும் செய்யவேண்டுமா?.அவருக்கு யார்யார் சட்டப்படி வாரிசு ஆவார்கள்.அவர் தமது சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்காமல் இருந்தால் அந்த சொத்துக்கள் யாரை சேரும்.
Announcement
Collapse
No announcement yet.
தெரிந்துகொள்வோம்
Collapse
X
-
Tags: அடியேன், அடை, உடல், கோவிந்த, பலி, ராம, ஸ்வாமி, about, all, but, children, death, female, font, from, govinda, has, hinduism, his, his holiness, http, last rites, law, life, male, means, narasimha, narasimhan, nvs, peace, persons, question, rites, rituals, sir, sree, that, the, there, vai, village, was, who, with
-
Re: தெரிந்துகொள்வோம்
மேற்படி அடியேனால் எழுப்பபட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இது வரை யாருமே கருத்துக்களையோ, ஆலோசனையையோ கூறவில்லை.வேண்டுமானால் சட்ட வாரிசு பற்றி கூறவேண்டாம். ஆனால் மற்ற அந்திமகிரியைபற்றி கூறலாமே. அடியேன் யாரையும் பதில் கூறுமாரு நிர்பந்தப்படுத்தமுடியாது என்று தெரியும் . இருந்தாலும் ஒரு நப்பாசை. யாராவது சாஸ்திரம் தெரிந்தவர்கள் அவசியம் உதவுவார்கள் என்றுதான் நம்பிக்கொண்டு இருக்கிரேன். பார்க்கலாம்.
-
Re: தெரிந்துகொள்வோம்
Originally posted by P.S.NARASIMHAN View Postஒரு வயோதிக மணமாகாத பெண்மணி பரமபதித்துவிட்டால் அவருக்கு யார் அந்திம கிரியைகளை செய்யவேண்டும் அவருக்கு மற்றவர்களை போல் எல்லா அபர கிரியைகளையும் செய்யவேண்டுமா?.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அல்லது நெருக்கமான உறவினர்கள் அல்லது நண்பர்கள்,
அல்லது அந்தப் பெண்மணியால் இன்னார் செய்யட்டும் என்று அறிவிக்கப்பட்ட நபர் என யாராவது ஒருவர் செய்யலாம்.
பத்தாம் நாள் அன்றே கல் ஊன்றி, ப்ரபூத பலி சேர்த்துவிட்டு
11ம் நாள் ஆத்ய மாஸிகம் என்ற கர்மாவை மட்டும் செய்துவிட்டு
12ம் நாள் அன்று நாராயண பலி கர்மாவை செய்து முடித்துவிடவேண்டும்.
நாராயணபலி செய்தபின் மாஸிகம், ஆப்தீகம் போன்ற கர்மா எதுவும் தொடராது.
சொத்திலிருந்து ஒரு பகுதியை இந்த கர்மாக்களுக்கான செலவிற்காக ஸ்வீகரித்துக்கொள்ளலாம்.
இந்தக் கர்மாவைச் செய்தாலும், செய்யாவிட்டாலும், சட்டப்படி சொத்து அவர்கள் நாமினியாக யாரை நியமித்துள்ளார்களோ அவர்களைத்தான் சேரும்.
அசையாச் சொத்துக்கு நாமினியை நியமிக்காவிட்டாலும்,
எல் ஐ சி போன்றவற்றிற்கு நாமினியாக நியமிக்கப்பட்டு, வேறு எதற்கும் எவரையும் நாமினியாக நியமிக்கப்படாமல் இருந்தால் அந்த ஒருவருக்கே சென்றடையும்.
ஒன்றுக்கு மேற்பட்டவர் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தால்
பஞ்சாயத்து செட்டில்மென்ட் அல்லது கோர்ட் மூலமாகத்தான் நிவாரணம் பெறமுடியும்.
என்.வி.எஸ்
Comment
Re: தெரிந்துகொள்வோம்
ஸ்வாமின்,
தாங்கள் இந்த அடியேனை பெரிய இக்கட்டுலிரிந்து காப்பாற்றிவிட்டீர்கள். தங்களுடைய ஆலோசனையும் பரிந்துரையும் அடியேனுக்கு பெரிய வரப்ரசாதமாகும். நன்றி என்று சாதாரனமாக சொல்லிவிட்டால் நான் நன்றி கெட்டவனாக இருப்பேன். ஆகையால் எனது மனம் நிறைந்த நன்றியை தாளும் தடக்கையும் கூப்பி தெரிவித்துக்கொள்கிறேன். தாசன் psn.
Comment
Re: தெரிந்துகொள்வோம்
இந்த தேசத்தில் எவ்வளவோ மணமாகாத ஆண்களும்,பெண்களும் தங்கள் உடல்,பொருள்,ஆவி எல்லாவற்றையும் ஈந்து மேலானவர்களை காட்டிலும் மேலானவர்களாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களை மிக்க நன்றியுடன் ,அவர்கள் பரமபதித்தவுடன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய எதோ ஒரு சிலராவது nvs ஸ்வாமின் சொன்னபடி கிரியைகளை செய்வார்கள் என்பது திண்ணம். அது சரி அது என்ன 'கோவிந்தா கொள்ளி' விளக்கவும். யாரும் அதைப்பற்றி ப்ரஸ்தாபிக்கவில்லையே.
Comment
Re: தெரிந்துகொள்வோம்
Dear Sir
Govinda Kolli is the lost rites done by person in any way related to the dead
some details from namadvar - Chaitanya Mahaprabhu Nama Bhiksha Kendra is
If a person does not have any children, who will perform his last rites? If someone related to him does the last rites, will his soul get liberated? Who will, for him, do the monthly and yearly rituals?
Sri Sri Swamiji:
If one does not have a male child but has a female child, then getting the holy grass (‘dharbai’) from the daughter, some one else can do his last rites. His son-in-law or his brother’s son can do the last rites, as also someone whom the person might have adopted during his lifetime, or someone that the deceased considered ‘abhimana putra’.
The person who does the last rites also should perform all the subsequent rituals.
However, anyone can perform his last rites by chanting the name of Govinda thrice (this is called ‘Govinda Kolli’). If this is done, there is no necessity to perform any subsequent rites or rituals.
"Nama Dwaar" is an initiative undertaken by the devotees of Chaitanya Mahaprabhu Nama Bhiksha Kendra, with the blessings of His Holiness Sri Sri Muralidhara Swamiji, aimed at propagation of Nama Sankirtan of the Maha Mantra as the universal means of bringing about peace, prosperity and the feeling of universal brotherhood and providing material and spiritual upliftment to humanity at large.
http://www.namadwaar.org/aboutnamadwaar.html
Comment
Re: தெரிந்துகொள்வோம்
If you go through this site, you may get answers to many questions with
regard to last rites. In fact, Garuda Purnam gives ample explanation.
http://www.hinduism.co.za/funerals.htm
http://www.buzzle.com/articles/hindu-death-rituals.html
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 04:04.
Comment