Announcement

Collapse
No announcement yet.

த்யானம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • த்யானம்

    த்யானம்:சூன்ய த்யானம் ஆழ்நிலை த்யானம் என்று இன்னும் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் வெகு சீக்கிரத்தில் நல்ல பயன் தரக்கூடிய த்யானம் செய்யும் முறை கூற இயலுமா

  • #2
    Re: த்யானம்

    sounderarajan SIR
    There is no short cut easy way to achieve the results in any discipline; it all depends upon the hard work, sincerity and mental attitude of the person who practice them. You need a Guru to preach the type of meditation suitable for you. So search for a suitable Guru recommended by your known well wishers and approach him for proper guidance in this matter.

    Comment


    • #3
      Re: த்யானம்

      Thank you for the reply sir as suggested by you searching for a suitable guru is only the problem any how let me try

      Comment


      • #4
        Re: த்யானம்

        Sir
        Meditation methods needs guidance and if done wrongly , it may even affect Brain; Hence it is suggested to undergo training under a suitable Guru.

        Comment


        • #5
          Re: த்யானம்

          Sri:

          ஸ்ரீ வசன பூடனத்தில் பின் வரும் இரண்டு வாக்யங்களின் அர்த்தம் என்ன வென்று அடியேனுக்கு புரியவில்லை..
          தெரிந்தவர்கள் அதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. அடியேன்

          16. இரண்டும் இரண்டும் குலையவேணும் என்றிருக்கில்
          இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றதாம்

          17. இரண்டும் குலைந்தது என்று இருக்கில் இத்தலைக்கு இரண்டும் உண்டாயிற்றதாம்

          Comment


          • #6
            Re: த்யானம்

            ஶ்ரீ:
            ஶ்ரீவசன பூஷணம் என்பது ஒரு மஹத்தான ஶ்ரீவைஷ்ணவ கமண்டரி லிட்ரச்சர்.
            அதில் இடையில் இருந்து இரண்டு வரியை மட்டும் எடுத்து அர்த்தம் கேட்டால்
            அதை அவ்வளவு எளிதில் விள்க இயலாது.
            ஏனென்றால் இதை அறிந்து கொள்ள ஶ்ரீவைஷ்ணவம் பற்றிய அடிப்படை ஜ்ஞானம் நிறைய வேணும்.
            உதாரணமாக: முமுக்ஷு என்றால் என்ன? சேதனன் என்றால் என்ன? என பல விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்.

            இருந்தாலும் அடியேனுடைய சிற்றறிவிற்கு எட்டிய வரையில் சொல்கிறேன்:
            இந்த சூர்ணிகையில் பேசப்படும் விஷயங்கள் ஆவன: புருஷகாரம், உபாயம், தோஷம், குணஹானி
            என்கிற நான்கு விஷயங்கள்.
            இவற்றில் உபாயமாவது எம்பெருமானை அடைய உதவும் சாதனம்.
            புருகாரமாவது, மோக்ஷத்தை வேண்டும் ஜீவனுக்காக பிராட்டி எம்பெருமானிடத்தில் செய்யும் சிபாரிசு.
            இவை இரண்டும் ரக்ஷிக்கின்ற (எம்பெருமான் பிராட்டி)வர்களிடம் இருக்கவேண்டியவை.

            தோஷம் என்பது ஜீவன் சம்பாதித்து வைத்துள்ள பாபங்கள் எனக் கொள்ளலாம்.
            குணஹானி என்பது, உபாயத்ததை அநுஷ்டிக்கும் தன்மை இல்லாமை எனலாம்.

            ஜீவனிடத்தில் தோஷம் பாராது ரக்ஷிக்கவேண்டியது ஈச்வரனின் ஸ்வபாவம்
            தோஷமற்றவனாக விளங்கவேண்டியது ஜீவனின் ஸ்வபாவம்.

            இதுப்றியே இவ்விரு சூர்ணிகைகளில் வழங்கப்பட்டுள்ளது.

            குறிப்பு:- இந்த விஷயத்தை இணைய தளத்தில் விவாதிப்பது அவ்வளவு ச்லாக்யமல்ல.
            ஏனென்றால், இவை அப்படிப்பட்ட ஒரு மேன்மையான விஷயம் என்பதனால்தான், பூர்வாசார்யர்கள்,
            ஓராண்வழியாகவே இவற்றை உபதேசித்து வந்தார்கள். அதாவது ஒரு ஆசார்யன் - ஒரு சிஷ்யனுக்கு
            மட்டுமே உபதேசிப்பார். அதுவும் அந்த சிஷ்யனுக்கு உண்மையிலேயே இந்த விஷயத்தை அறிவதிலும்
            பாதுகாப்பதிலும் எந்த அளவிற்கு ஆசை உள்ளது என்பதை நன்கு சோதித்தபிறகே உபதேசிப்பர்.

            ஶ்ரீமத் ராமாநுஜர் 18 முறை திருக்கோட்டியூருக்கு படையெடுத்து அறிந்துகொண்ட உயர்வான
            விஷயங்கள் இவையே. எனவே இவற்றை ஒரு தகுந்த ஆசார்யனிடம் பணிந்து உபதேசமாக அல்லது
            காலட்சேபமாக அறிந்துகொள்வது உத்தமம்.


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: த்யானம்

              தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.

              எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.


              நமக்கு சௌகரியமான முறையில்.
              அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.

              தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.

              வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

              கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.

              இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.

              கண்களை மேதுவாக மூடுங்கள்.

              அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.

              உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

              மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

              கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.

              கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

              மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

              ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.

              நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.

              மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
              மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.

              மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.

              நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.

              மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.

              கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.

              இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.

              மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.

              காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.

              மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும்தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.

              நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.

              இதுதான் முக்கியம்.
              இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.

              எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.

              கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.

              எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.

              இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

              சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.

              அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.

              இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.

              இந்நிலையில்
              ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.

              எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.

              இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.

              இதுதான் தியான நிலை.

              இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.

              தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.

              பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.

              இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

              முயன்று பார்க்கலாமே

              Comment

              Working...
              X