ஸ்ரீ உ வே என் வி எஸ் ஸ்வாமின் அவர்களுக்கு அடியேன் அநேக தெண்டன் சமர்ப்பித்து விஞ்ஞாபனம் . தாங்கள் ஸ்ரீ பிரியா அம்மையார் அவர்களுக்கு எழுதிய நூல் பார்த்து பரவசம் அடைந்தேன். நாம் இப்போது நமது சமுதாயத்தின் குறைபாடுகளையும் அவலங்களையும் கை கட்டி பார்த்து கொண்டு தான் இருக்கவேண்டுமா . அந்த குறைபாடுகளை எடுத்து சொல்ல கூடாதா அது தவறா ? இந்த சமயத்தில் அடியேனுடைய சதாபிஷேகம் பற்றி எதற்கு பிரஸ்தாபம் . ஏதோ வயதானவன் பிதற்றிக்கொண்டு போகிறான் விடுங்கள் என்று தான் சொல்கிரேர்களே தவிர என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்றுதான் சொல்கிறீர்கள் . இது ஞாயமா ,தர்மமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் . ஏனோ என் நூல் திரிகல் எல்லாம் எதிர்பை சந்திக்கிறதே ஏன் என்று தெரியவில்லை ஸ்வாமின். ஆகையால் அடியேன் விலகி விட முடிவு செய்து அங்கத்தினர் பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்கிவிட தங்களை பிரார்த்திக்கின்றேன் .இது நாள் வரை அடியேனை தங்கள் சபையில் அனுமதித்த தங்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துகொள்ளும் அடியேன் ...பி.எஸ்.நரசிம்ஹன்.
Announcement
Collapse
No announcement yet.
Modern brahmins.
Collapse
X
-
-
Re: Modern brahmins.
ஶ்ரீ:
ஶ்ரீ.உப.வே.நரஸிம்ஹாச்சார் ஸ்வாமின்,
சதாபிஷேகம் கண்ட தங்களை நம் தந்தை ஸ்தானத்தில் வைத்து மதிக்கவேண்டும் என்று எழுதியுள்ளேன்
மீண்டும் வாசித்துப் பார்க்கவும். அனுபவத்திற்கு அதிகம் மதிப்பளிக்கவேண்டும் என்பதற்காக அப்படி எழுதினேன்.
தங்கள் அனைத்து இடுகைகளையும் தாங்கள் ஒரு முறை மீண்டும் வாசிக்கவும்.
ஆனால் தாங்கள் தாங்களாக இல்லாமல், வேறொரு புதிய உறுப்பினர் வாசிப்பதுபோல வாசிக்கவும்.
இந்த மன்றத்தில் 5000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விண்ணப்பித்ததில் 4423பேர் உறுப்பினர்களாக
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
குறுகிய காலத்தில் அதிகமான இடுகைகள் தாங்கள்தான் செய்துள்ளீர்கள்.
தங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அடியேன் பதில் கூறியுள்ளேன் - "தங்கள் பதிவுகளை
அடியேன் வெளியிடாமல் தடுக்கிறேன்" என்ற குற்றச்சாட்டு உட்பட.
மற்ற உறுப்பினர்களுக்கு இல்லாத அளவுக்கு தீவிரமாக உறுப்பினர்களிடம் சந்தா வசூல் செய்யவேண்டும்
என்று யோசனை தெரிவித்ததும் தாங்கள்தான்.
ஸ்ட்ரெயிட் பார்வேர்டாக இருப்பவர்கள் "நம் கருத்துக்கு எப்படிப்பட்ட எதிரான கருத்துக்கள் வந்தாலும்
அதை எதிர்கொண்டு தங்கள் வாதத்தை நிலை நிறுத்துவார்கள்".
தங்கள் கருத்தில் உண்மையும் நன்மையும் இருப்பதாக தாங்கள் நம்பினால்,
அதை எங்களைப்போன்ற சிறியவர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை வலியுறுத்தவேண்டாமா?
மாற்றுக் கருத்து தெரிவித்தவுடன்,
நான் இந்த மன்றத்தைவிட்டு விலகிவிடுகிறேன் என்று கூறுவது நியாயமா?
இந்த மன்றத்தை நடத்துபவர் அவ்வாறு நடுவில் விட்டுவிட்டு போய்விடமுடியுமா?
நல்ல பல விஷயங்கள் இந்த மன்றத்தில் வெளியிடுகிறீர்கள்
நான் அடிக்கடி உங்களுக்கு டொனேஷன் அனுப்புகிறேன் என்று கூறிப் பாராட்டியவர்
தாங்கள் அல்லவா?
தற்போது அதை வாபஸ் பெற்றுக்கொள்கிறீர்களா?
தேவரீர் அனுப்பி வைத்த ரூ 501க்கான காசோலையை அடியேன் இதுவரை
பேங்கில் போடவில்லை, தங்களுக்கே திருப்பி அனுப்பிவிடவா?
18-09-2012ல் தேவரீர் பதிவு செய்தது:
comments
This site is really very good and praiseworthy. This is the first time I am entering this site. I will definitely follow this site. keep it up. Congratulations. Narasimhan.
27-09-2012ல் தேவரீர் பதிவு செய்தது:
filtering messages
It appears u r filttering a number of messages to help some vested interests. Could u kindly enlighten me what are all the messages or threads u do not want to be posted. This will guide us to a great extent. Being a public forum all threads are to be posted whether u like it or not. It is for the public to decide. Hope u will appreciate my views. P.S.Naras
Being a public forum all threads are to be posted whether u like it or not.
இது தேவரீருக்குப் பொருந்தாதா?
வீட்டில் தங்கள் பிள்ளைகள் பேரன்கள் மாற்றுக் கருத்துத் தெரிவித்தால் அவர்களை வீட்டைவிட்டு
விலக்கிவிடுவீர்களா?
தயவுசெய்து மறுபரிசீலனை செய்யவும்.
குறிப்பு:- எப்படித் தாங்களாக தேடிவந்து இந்த மன்றத்தில் இணைந்தீர்களோ, அப்படித் தாங்களாகவே
விலகிக்கொள்ளலாம். இது ஒரு பட்டிமன்றம், விரும்பிய அன்று தாங்கள் வரலாம்,
விரும்பாதபோது வராமல் இருக்கலாம் அவ்வளவுதான். விலக்குவதற்கு எதுவுமில்லை.
பாலியல் போன்ற விரும்பத்தகாத தகவல்களை பதிவுசெய்யும் இணைய தீவிரவாதிகள் மற்றும் அரக்கர்களிடம் இருந்து தப்புவதற்காகத்தான் உறுப்பினர் உள்நுழைய பெயரும் கடவுச்சொல்லும் பயன்படுத்தப்படுகிறதேயன்றி,
வேறு எதற்காகவும் அல்ல.
தாஸன்.
என்.வி.எஸ்
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 17:09.
Comment