தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.
விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.
மற்ற சில கவனிக்கத் தக்கவை
ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு
கீழே - ஶ்ரீ மேல்பாக்கம் ந்ருஸிம்ஹாச்சார் ஸ்வாமியின் ஆசௌச சதகம் என்ற புத்தகத்திலிருந்து இரு பக்கங்களை ஸ்கேன் செய்து
இணைத்துள்ளேன்.
இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவெனில், தீட்டு என்பது பிறப்பானாலும், இறப்பானாலும் சமமாகவே பாவிக்கவேண்டும்
என்பது அடியேன் தீர்மானம். காரணம் கீழுள்ள 68ம் எண்ணுடைய சூத்திரத்தில் வ்யாக்யான ஆரம்பத்தில் "ஜனன மரண நிமித்தமான சௌசம் உள்ளவன் ...." என்று ஜனனம் மற்றும் மரணம் இரண்டையும் ஒன்றாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். ஜனன தீட்டிற்கு ஏதேனும் விதிவிலக்கு இருக்குமானால் இவ்விரண்டையும் ஒன்றாக எழுதாமல் தனித் தனியாக விதிகளைக் கொடுத்திருப்பார்கள் அல்லவா?
ஜனன(வ்ருத்தி) தீட்டில் திருமண் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளலாம் என்பதும், அனைத்து சுப வைபவங்களிலும் கலந்துகொள்ளலாம் என்பதும்
பல மஹா வித்வான்களுடைய அபிப்ராயம்.
ஆனால் அடியேன் ஆத்தில் ஜனன தீட்டு நேர்ந்தால் மரணத் தீட்டைப்போலவே வெறும் திருமண் மட்டும்தான் இட்டுக்கொள்வேன் ஶ்ரீசூர்ணத்தைத் தொடுவதில்லை. காரணம் ஶ்ரீசூர்ணம் என்பது பூஜா த்ரவ்யங்களில் ஒன்று.
ரொம்ப நன்றி மாமா எவ்வளவு விளக்கமாய் எழுதி இருக்கீங்க , அருமை அருமை எங்க வாத்தியார் மாமா ஜனன தீட்டின் போது கல்யாண விசேஷங்களில் கலந்து கொள்ளலாம் என்று தான் சொன்னார். எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது, அது தான் உங்களிடம் கேட்டேன். ஸோ, நாம் பெருமாள் விளக்கு ஏற்றுவது கூட செய்யாமல் இருக்கணும் தானே ? ( பிள்ளை பெற்ற தீட்டுக்கு)
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
ஶ்ரீ:
ரொம்ப சந்தோஷம்.
ஆனாலும் சந்தேஹம் தீர்ந்து தெளிவடைந்ததுபோல் தெரியவில்லை.
கடைசீயில் கேள்விக்குறியில் முடித்துள்ளீர்களே?
ஆமாம் மாமா , கொஞ்சம் சந்தேகம் இன்னும் இருக்கு ஆனால் இப்ப நீங்க இன்னும் சந்தேகமா என்றதும் இருந்த கொஞ்ச சந்தேகமும் விலகிவிட்டது. ஸோ, தீட்டு எதுவானாலும் தீட்டு போகும் வரை பெருமாள் உள்ளில் விளக்கேட்ராமல், கல்யாணம் கட்சிகளில் கலக்காமல் தீட்டு காக்கணும் என்று தெளிவாகி விட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
Comment