ஏதோ ஒன்று ,இரண்டு வருடங்கள் தவிர மற்ற வருடங்களில் தீபாவளி அன்று தான் அமாவாசைவும் சம்பவிக்கிறது. அன்றைத்தினம் தர்ப்பணம் செய்பவர்கள் புதிய ஆடை அணியலாமா, எண்ணைகுளியல்வுண்டா? போஜனத்தில் வடை, பாயசம் சேர்த்து கொள்ளலாமா , பண்டிகை சமையலா ,புண்ய திதி சமையலா.தெரிவிக்கவும் ..பி. எஸ். நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
deepaavaliyum amaavasayum
Collapse
X
-
-
Re: deepaavaliyum amaavasayum
ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,
நரக சதுர்தசி ஸநாநம் அவசியம் என்று சாஸ்த்ரம்.
அதனால் 4.30 மணிக்கு ப்ரஹ்ம முஹூர்த்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பே
அப்யங்க (எண்ணை) ஸ்நாநம் செய்துவிட்டு. புதிது உடுத்திக்கொண்டு,
பட்டாசு வெடிப்பதானால் வெடிக்கலாம்.
ஆத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் டிரஸ் ஆசீர்வாதம் பண்ணிக்கொடுக்கும் வரை புதிதுடன்
இருக்கலாம்.
ஆனால் எதுவும் சாப்பிடக் கூடாது.
பிறகு 11 மணியளவில் அல்லது பசி தாங்கும் நேரம்வரை பொறுத்திருந்து
பின்னர் மீண்டும் ஸ்நாநம் செய்து, மடி வேஷ்டியை உடுத்திக்கொண்டு,
மாத்யாஹ்நிகம், பெருமாள் ஆராதனங்களை முடித்து,
பின்னர் தர்பணம் பண்ணவேண்டும்.
போக்தாக்கள் யாருக்கும் போஜனம் செய்விக்காததால்,
விலக்கப்படாத வஸ்துக்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட எந்த இனிப்பு,
மற்றும் பலகாரங்களையும் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
தர்பண நாட்களில் செய்யப்படும் தளிகையுடன் சில விசேஷ பலகாரங்களையும்
செய்துகொண்டு, சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
தர்பணம் செய்யாத மற்றவர்கள் சாப்பிடக்கூடிய சில விஷயங்களையும் சமைத்து
அவரகளுக்கு வழங்கலாம்.
Re: deepaavaliyum amaavasayum
My mother passed away on Thula masa krishna paksha chaturdasi. Please telll me can we do deepavali snanam & wear noothana dress as given above?. After the second snanam can matru sraddham be performed? Please clarify.
dasan.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 18:02.
Working...
X
Comment