பெண் பிள்ளைகள் பார்த்து கல்யாணம் நிச்சயமானவுடன் விவாஹத்திற்கு முன் தினம் ஜனுவாசம் வுடன் வைதீக நிச்சயதார்த்தம் செய்கிறார்களே அப்படி இருக்கும்போது எதற்காக 2 . 3மா தத்திற்கு முன் கல்யாணம் போல மிக பெரிய அளவில் நிச்சயதார்த்தம் செய்கிறார்களே தேவைதானா, முக்கியமா ? பி. எஸ். நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
nichayathaartham
Collapse
X
-
Re: nichayathaartham
ஶ்ரீ:
திரு.கோபாலன் அவர்கள் சொல்வதிலும் பொருள் உள்ளது.
ஆனால் முதல் முறை செய்யும் நிச்சயதர்ர்த்தம் பிள்ளை வீட்டார் அனைத்துச் சீர்களுடன் பெண்ணுக்குப் புடவை வாங்கிக்கொடுத்து நிச்சயம் செய்துகொள்வது இதில் பிள்ளை உட்காரக் கூடாது.
கல்யாணத்திற்கு முதல்நாள் செய்வது பெண் ஆத்து நிச்சயதார்த்தம்.
பிள்ளையாத்துவாளுக்கு கல்யாணம் நடக்கும் ஊரில் ஒரு வீடு கொடுத்து அங்கு தங்க வைத்து, மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த ஊரிலுள்ள கோயிலுக்கு வரச்செய்து, பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு
கோயிலிலேயே ஜமக்காளத்தை விரித்துப்போட்டு மாப்பிள்ளையை உட்கார வைத்து, இப்போதுதான் பிள்ளைக்கு சூட், கோட் ஓதியிட்டுக்கொடுத்து கோவிலிலிருந்து திறந்த காரில் மாப்பிள்ளையை உட்கார வைத்து மண்டபத்துக்கு அழைத்து வந்து, பெண்ணை எதிர்கொண்டு அழைக்கச் செய்து பெண்ணையும் பிள்ளையும் இப்போதுதான் முதல்முறையாக ஒன்றாக உட்கார வைத்து அக்ஷதை போட்டு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவிட்டு, பிள்ளைக்கு அடுத்தநாளைக்கு வேண்டிய எண்ணைக்குட வகையறாக்களை ஓதியிட்டுக் கொடுப்பார்கள்.
முதல் நிச்சயதார்த்தத்தை மண்டபம் பாத்து அமர்க்களம் பண்ணுவதெல்லாம் பணக்காரர்கள் விஷயம்.
இன்னமும் பழம்பாக்கு வெத்திலை பத்தே பேருடன் மாற்றிக்கொள்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 02:51.
Comment