Can I perform Maalaya tharpan on 3-10-12 Mahabarani day though it falls before Panchami, as our Vadyar says maalaya tharpan must be performed only after Panchami. But it is said to be Uththamum to perform tharpan on Mahabarani day. I am confused. Please guide me... P.S.Narasimahan
Announcement
Collapse
No announcement yet.
Mahabarani
Collapse
X
-
Re: Mahabarani
ஶ்ரீ:
ஶ்ரீ.உ.வே.நரசிம்மாச்சார் ஸ்வாமின்.
எப்போதுமே, சாஸ்த்திரமும், சாஸ்த்ர வல்லுனர்களும் சாஸ்த்ரப்படியான
உத்தமமான விஷயத்தை, நடைமுறையையே வலியுறுத்துவார்கள்.
16 நாட்களும் மஹாளய பக்ஷம் தர்பணம் பண்ணுகிறவர்களுக்கு இதுபற்றிய கவலையில்லை.
16 நாளில் ஒரு நாள் மட்டும் பண்ணினால் போதும் என்ற ஸக்ருன் மஹாளயம் என்ற முறையைப்
பயன்படுத்தும்போது, பித்ருக்களுக்கு உகந்தது க்ருஷ்ண பக்ஷம் என்பதால்,
க்ருஷ்ண பக்ஷத்தின் உச்சகட்டம் என்பது பஞ்சமிக்குப் பிறகுதான் ஆரம்பம் ஆகிறது.
அதாவது க்ரஹண தர்பணம் பண்ணும்போது, க்ரஹண காலம் முழுவதும் புண்ய காலமாக இருந்தபோதும்,
ஒரு குறிப்பிட்ட நேரத்தை மோக்ஷ காலம் என்று கூறி க்ரஹணம் விடுவதற்கு சிறிது நேரம் முன்னதாக
தர்பணம் செய்யச் சொல்வதுபோல்,
இந்த க்ருஷ்ண பக்ஷத்தில் பஞ்சமிக்குப் பிறகு மோக்ஷ காலம் ஆரம்பமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு குழப்பம் இருக்காது.
ஆயினும்,
எப்படி வளர்பிறையில் குறிப்பிட்ட சில திதிகள், சில கிழமைகள், சில நக்ஷத்திரங்களில்தான்
சுப காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதி இருந்தபோதும்,
நமது சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த விதிகளை சற்று தள்ளி வைத்துவிட்டு,
நமக்கு ஒத்து வரும் நாட்களில் முஹூர்த்தங்களைச் செய்வதுபோல
இதிலும் செய்யலாம்.
ஆனால் அப்படிச் செய்ய நேரிடும்போது, அந்த முடிவை நாமாக எடுக்கவேண்டுமே தவிர
நாம் எடுக்கும் சில சாஸ்த்ர சம்மதமில்லாத முடிவுக்கு அடுத்தவர்கள் அங்கீகாரம்
அதுவும் வெளிப்படையாகக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்க்க்கூடாது.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 12:32.
Comment