என் வி எஸ் சார், கோபாலன் சார்,வரும் அமாவாசை பற்றி மிக சிறப்பாகவும் இரண்டு தர்பணங்கள் செய்யவேண்டும் என்றும் கூறுகிறார்களே கொஞ்சம் விளக்கவும்.
Announcement
Collapse
No announcement yet.
வரும் தை அமாவாசை பற்றி
Collapse
X
-
Re: வரும் தை அமாவாசை பற்றி
ஶ்ரீ:
திரு.சௌந்தரராஜன் அவர்களுக்கு,
செய்யச்சொன்னதை செய்வது 50 விழுக்காடு
செய்யாதே என்றதை செய்யாமல் விலக்குவது 50 விழுக்காடு
என தர்மம் 100 விழுக்காட்டை இரண்டாகப் பிரிக்கலாம்.
இந்த மஹோதய புண்யகால தர்பணம் என்பது அதிகப்படியான புண்ணியம் வேண்டுவோர் செய்யவேண்டியது எனத் தெரிகிறது.
புண்ணியம் தேடிக்கொள்ள நன்கு தெரிந்த ஆயிரம் வழி இருக்கும்போது
கொஞ்சம் சிரமமான இந்த வழியைத் தவிர்க்கலாம் என்பதே அடியேன் அபிப்ராயம்.
விஷயம் தெரிந்தவர்களாக யாராவது பண்ணிவைக்கக்கூடிய இடங்களில் சென்று
சேர்ந்துகொள்ள வாய்ப்புள்ளவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பு:- இதை நன்றாகப் புரிந்துகொள்ள உதவியாகப் புத்தகம் எதுவும் இதுவரை அடியேனுக்குக்
கிடைக்கவில்லை. கிடைத்தால் அதுபற்றி எழுதுகிறேன்.
திரு.கோபாலன் அவர்கள் என்ன எழுதுகிறார் என்று பார்ப்போம்.
தாஸன்,
என்.வி.எஸ்
Re: வரும் தை அமாவாசை பற்றி
அர்தோதயம்—மஹோதயம் லக்ஷணம்.
புஷ்யம் அல்லது மாக மாதத்தில் வ்யதீபாதத்தின் நான்காம் பாதம், அமாவாசையின் முதல் பாதம் திருவோணம் எனும் சிரவண நக்ஷத்திரத்தின் மத்ய பாகம் இவை ஞாயிற்று கிழமை காலையில் சேர்ந்தால் அர்தோதய புண்ய காலம். இவை திங்கட் கிழமை காலை சேர்ந்தால் இது மஹோதய புண்யகாலம் எனப்படும்.
மஹோதய புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே என்று சொல்லி ஒரே தர்பணம் செய்தால் போதும்.
வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் மாத்திரம் ( ஷண்ணவதி தர்பணம்)
வ்யதீபாத சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே என்று அமாவாசை தர்பணம் செய்த பிறகு இரண்டாவது தர்பணம் செய்ய வேண்டும்.
இன்று நதியில் ஸங்கல்ப ஸ்நானம் செய்யலாம். தான தர்மங்கள் செய்யலாம்.
Comment
Re: வரும் தை அமாவாசை பற்றி
sri
The information is very much useful to everyone. The details of Ardhodaya Mahodaya Punyakalam is also available on page No.323 of Panchanga gananam by Sriman Moonampannai Krishna Josyar in his book published in 1897. I remember having sent this to Sri NVS .
Namaskaram.
VENKATESWARA PURUSHOTHAMAN, COIMBATORE 9487603632 purush.biksha@gmail.com
07/02/2016
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 01:13.
Comment