எண்ணை தேய்த்துக் கொள்வதற்கு

அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி, த்வாதசீ, அஷ்டமீ, ஸப்தமீ, ஷஷ்டி, ஸங்க்ரமணம் இவைகளில் தைலத்தைத் தொடவுங் கூடாது, எண்ணை சாப்பிடவும் கூடாது.
ஞாயிறன்று எண்ணை தேய்த்துக்கொண்டால்டி வருத்தமுண்டாகும், திங்களில் காந்தி, செவ்வாயில் - அற்பாயுசு, புதனில் ஸம்பத்து, வியாழனில் - தாரித்ரியம், வெள்ளியில்- வ்யாதி, சனியில் ஸர்வ கார்ய ஜயமும் உண்டாகும்.
சித்திரை, ஹஸ்தம், திருஓணம் இவைகளில் எண்ணை தேய்த்துக்கொள்வதும், விசாகம், சதயம் இவைகளில் க்ஷவரம் பண்ணிக்கொள்வதும், மகம், உத்திரம், கார்;த்திகை இவைகளில் ஸ்த்ரீ ஸம்போகமும் கூடாது.