Announcement

Collapse
No announcement yet.

Sama Upakarma in Tamil Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sama Upakarma in Tamil Continues

    Continues


    தேவ ரிஷி பித்ரு தர்பணம்.


    தர்பணம் செய்ய வேண்டிய இடத்திற்கு 2 புல் 3 புல் தர்பங்கள், எருக்க இலை
    களைந்த அக்ஷதை, எள், குடத்தில் தீர்த்தம், பஞ்சபாத்ர உத்ரினி முதலியவைகளை எடுத்து சென்று உட்கார்ந்து சங்கல்பம் செய்யவும்.


    தேவ ரிஷி தர்பணங்களுக்கு வலது கையில் இரண்டு எருக்க இலையும் அதன் மீது இரண்டு நுனி தர்பமும் வடக்கு நுனியாக
    வைத்துக்கொண்டு அக்ஷதை வைத்து தேவ தர்பணங்களை நுனி


    விரல்களாலும் ரிஷி தர்பணங்களை சுண்டு விரலுக்கு அடியில் உள்ள நடு கோடு வழியாகவும் , பித்ரு தர்பணங்களுக்கு 3 எருக்க இலையும், 3 நுனி தர்பமும் தெற்கு நுனியாக எள் வைத்துகொண்டு கட்டை விரல் ஆள் காட்டி


    விரல் நடுவாக மறித்தாற்போல் விடவும். இந்த பித்ரு தர்பணம் தந்தை உள்ளவர்களும் செய்ய வேன்டியதே.


    ரிஷிகளுக்கு புனர் பூஜை


    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் அத்ய பூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள தேவ ரிஷி பித்ரூணாம் த்ருப்த்யர்த்தம் புன: பூஜாம் கரிஷ்யே. தீர்த்தம் தொடவும்.


    ஆவாஹிதாப்ய: சர்வ ரிஷி பித்ரு தேவதாப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி, என்பது போல எல்லா உபசாரங்களையும் செய்யவும்.


    கீழ் கண்ட மந்த்ரங்களை சொல்லி ஒவ்வொரு வரிசையாக அக்ஷதை போட்டு யதாஸ்தானம் செய்யவும்.


    ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: விஸ்வாமித்ராதி சப்தரிஷீன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


    ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.


    ஏப்ய: சைகத பிண்டேப்ய: சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் யதா ப்ரதிஷ்டா பயாமி


    ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: கங்காதி நவநதீ தேவதா: யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி


    ஏப்ய: சைகத பிண்டேப்ய: வம்சோக்தான் அஷ்ட ப்ரம்ஹாதீன் யதாஸ்தானம் பரதிஷ்டாபயாமி


    ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: ஸாத்யாதி த்வாதஸ தேவதா; யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி


    பூனல் இடம்; ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: வஸ்வாதி பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. எள் போடவும்.


    பூணல் வலம்: ரிஷிகள் மீது வைத்த பூணல்களை எடுத்துக்கொள்ளவும். ரிஷி பின்டங்களை கையால் கலைத்து அங்கவஸ்த்ரத்தில் எடுத்து கொள்ளவும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.


    ந்யூனாதி ரிக்தானி உபரிஸ்புடானி யாநீஹகர்மாணி மயா க்ருதானி தானிஹ ஸர்வாணி மம க்ஷமத்வம் ப்ரயாந்து துஷ்டா: புனராகமாய.


    அங்கவஸ்த்ரத்தில் எடுத்துக்கொண்ட மணலில் தீர்த்தம் விட்டு அந்த தீர்தத்தை ப்ரோக்ஷித்துக்கொண்டு அவப்ருத ஸ்நானம் செய்யவும். ( ரிஷிகளை கரைத்துவிட்டு செய்யும் ஸ்நானத்திற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர்.


    மணலை ஜலத்தில் அல்லது கால் படாத இடத்தில் போடவும். அவப்ருத ஸாமம் சொல்லவும்.


    உபாகர்ம ஆரம்பம். ஹோமம்..

    சாம வேத உபாகர்மா.2.


    இதுவரை ஜலக்கரையில் செய்துவிட்டு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொன்டு வீட்டிற்கு சென்று மேலுள்ளவைகளை செய்ய வேன்டும். என்பது விதி.


    கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு ஸங்கல்பம் செய்யவும். ஹோமத்திற்கு அக்னிப்ரதிஷ்டைசெய்யுமுன் சுத்தமாக மெழுகப்பட்ட இடத்தில் ஹோம குண்டம் அல்லது செங்கற்கள் வைக்கவும் மணல் பரப்பவும்.


    .பரப்பிய மணல் மீது தெற்கில், மேற்கிலிருந்து கிழக்காக இரண்டு தர்பங்களால் கோடு கிழிக்கவும்.பிறகு மேற்கில் தெற்கு கோட்டு முனையில் ஆரம்பித்து வடக்கு நோக்கி கிழிக்கவும்.


    பிறகு வடக்கில் மேற்கு கோட்டின் முனையில் ஆரம்பித்து கிழக்கு நோக்கி ஒரு கோடு கிழிக்கவும்.பிறகு இந்த மூன்று கோடுகளுக்கு நடுவில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்கில் முடியும்படி 3 கோடுகளை


    முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கிலும் அதற்கு வடக்கிலும் ஒன்றுமாக கிழிக்கவும். கோடு கிழித்த ஸ்தண்டிலத்தை ப்ரோக்ஷித்துவிட்டு அந்த 2 தர்பங்களையும் தென்மேற்கு மூலையில் போடவும்.


    கர்த்தா கிழக்கு முகமாக உட்காரவும். (( ஸ்தண்டிலம் எதிரில் இருக்க வேண்டும்)). ஸ்தண்டிலத்தின் மீது வரட்டி வைத்து அக்னி கொண்டு வரசொல்லி வரட்டியில் கொட்ட சொல்லவும்.


    அந்த தாம்பாலத்தில் தீர்த்தம் விட்டு அக்ஷதை போடவும். அக்னிக்கு கிழக்கில் ஒரு கிண்ணத்தில் தீர்த்தம் வைக்கவும் அக்னியை ஜ்வாலை செய்து கொள்ளவும்.


    பரிஸமூஹனம்: நுனி தர்பங்களை இரண்டு கைகளின் விரல்களாலும் வடக்கு நுனியாக இருக்கும்படி பிடித்துக்கொண்டு புறங்கை மேல் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொண்டு அக்னிக்கு கிழக்கிலும், தெற்கிலும்,


    மேற்கிலும், வடக்கிலும் கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி தரையில் படும்படி தர்பத்தை பிடித்துகொண்டே கையை வைத்து எடுக்கவும்.


    இது சிதறிய அக்னி கணல்களை ஒன்று சேர்ப்பதிற்காக செய்யப்படும் ஸம்ஸ்காரமாகும்.


    இமம் ஸ்தோமம் அர்ஹதே ஜாதவேதஸே ரதமிவ ஸம்மஹேம மனீஷயா பத்ராஹி ந: ப்ரமதிரஸ்ய ஸம்ஸதி அக்னே ஸக்யே மாரிஷாம வயந்தவ


    தீர்த்தம் தொட்டுவிட்டு மறுபடியும் கீழ் காணும் மந்த்ரத்தை சொல்லி முன்போல் கைகளை வைத்து எடுக்கவும்.




    பராமேத்மம் க்ருணவாம ஹவீம்ஷிதே சிதயந்த: பர்வணா பர்வணா வயம் ஜீவாதவே ப்ரதராம் சாதயா திய: அக்னே ஸக்யே மாரிஷாம வயம் தவ.


    தீர்த்தம் தொட்டுவிட்டு மறுபடியும் கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி முன்போல் செய்யவும்.


    சகேமத்வா ஸமிதம் ஸாதயா திய: த்வே தேவா: ஹவிரதந்தி ஆஹுதம் த்வமாதித்யான் ஆவஹதான் ஹ்யுச்மஸி அக்னே ஸக்யே மாரிஷாம வயந்தவ: தீர்த்தம் தொடவும்.


    பூமிக்ரஹணம். அக்னிக்கு மேற்கில் வடக்கு நுனி இருக்கும்படி தர்பங்களை முன் போல் பிடித்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்களை ஜபித்துவிட்டு தர்பங்களை அப்படியே கீழே வைத்து விடவும்.


    இதம் பூமே: பஜாமஹே இதம் பத்ரம் ஸுமங்கலம் பரா ஸபத்னான் பாதஸ்வ அன்யேஷாம் விந்ததே தனம்.


    ப்ரம்மவரணம். செய்யும் கர்மாவில் தவறு ஏற்படாமல் இருக்க நன்கு விஷயமறிந்த ஒருவரை ப்ருஹ்மாவாக வரிக்க வேண்டும். கூர்சத்தை போட்டும் ப்ருஹ்மாவாக வரிக்கலாம். . உபாத்யாயரையே வரிக்கலாம்.


    வரிக்க இருக்கும் ப்ராஹ்மணர் கையில் ஓம் அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மாணம் த்வாம் வ்ருணே என்று தர்பத்தை கொடுக்கவும்.


    ப்ரஹ்மா வ்ருதோஸ்மி கரிஷ்யாமி நிரஸ்த: பராவஸூ: என்று தென்மேற்கில் தர்பத்தை போடவும். கர்த்த ப்ரம்மாவின் கையில் தீர்த்தம் விடவும்.


    ப்ரம்மா ஆவஸோ: ஸதனே ஸீதாமி என்று உட்காரவும். ப்ரஹ்மா அக்னிக்கு தெற்கில் வடக்கு முகமாக உட்கார வேண்டும். பிறகு அவர் பூர்புவஸ்ஸுவ: ப்ருஹஸ்பதி: ப்ரம்மாஹம் மானுஷ ஓம் என்று ஜபிக்கவும்.


    கட பூஜை:


    குடத்தை சந்தன குங்குமங்களால் அலங்கரித்து அக்னிக்கு வடக்கில் இலைமீது அக்ஷதை போட்டு அதன் மேல் குடத்தை வைக்கவும்.
    அதில் தீர்த்தம் நிரப்பி மாவிலை கொத்து வைத்து தேங்காயும்


    வைக்கவும்.ஏழு ஏழு தர்பங்களாலான ஏழு கூர்ச்சங்களையும் 50, 50 தர்பங்களாலான நான்கு கூர்சங்களையும் அதில் வைக்கவும்.


    அஸ்மின் கும்பே வருணம் ஆவாஹயாமி என்று குடத்தின் மீது அக்ஷதை போடவும்.


    ஏஷு கூர்சேஷு விஸ்வாமித்ராதி சப்தரிஷீன் சதுரோ வேதாம் ச ஆவாஹயாமி கூர்சங்கள் மீது அக்ஷதை போடவும்.


    வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி.

    அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.




    சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.


    .ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி


    கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான் ஸமர்பயாமி .ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி;.


    கட பூஜை ஆனதும் அக்னிக்கு பரிஸ்தரணம் போடவும்.


    அக்னிக்கு கிழக்கில் வடக்கு நுனியாகவும், தெற்கில் கிழக்கு நுனியாகவும் வடக்கில் கிழக்கு நுனியாகவும் மேற்கில் வடக்கு நுனியாகவும் தர்பங்களை 3 முறை போடவும். நுனி பாகம் அடிபாகத்தை மறைதிருக்கும்படி போடவும்.


    பரிஸ்தனத்திற்கு வடக்கில் கிழக்கு நுனியாக சில தர்பங்களை போட்டு அதன் மீது தர்வீ, நெய் பாத்ரம் சமித்துக்கட்டு ஆகியவற்றை வைக்கவும்.


    ஆஜ்ய ஸம்ஸ்காரம்: நான்கு அங்குல அளவுள்ள 2 நுனி தர்பங்களை பவித்ரேஸ்தோ வைஷ்ணவ்யெள என்று நகம் படாமல் நறுக்கவும்.


    விஷ்ணோர் மனஸா பூதேஸ்த: என்று அந்த 2 தர்பங்களையும் நுனியை மேல் நோக்கி வைத்துக்கொண்டு உருவவும்.


    நெய் பாத்திரத்தை அக்னிக்கு மேற்கில் வைதுக்கொண்டு அதில் நெய்யை விடவும். இரண்டு கட்டை விரல்கலாலும் மோதிர விரல்களாலும் ந்றுக்கி உறுவிய தர்பங்களை வடக்கு நுனியாக பிடித்துக்கொண்டு பாத்திரதிலிள்ள நெய்யை கீழ் கண்ட மூன்று தடவையும் மந்திரம் சொல்லி மூன்று தடவை மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும்.


    மந்திரம்: தேவஸ்த்வா ஸவிதா உத்புனாது அச்சித்ரேண பவித்ரேண வஸோ ஸூர்யஸ்ய ரச்மிபி: அந்த 2 தர்பங்களையும் ப்ரோக்ஷித்து வடக்கு நுனியாக அக்னியில் வைத்து விடவும்.


    அக்னியிலிருந்து தணலை பரிஸ்தரணத்திற்கு வடக்கில் எடுத்து வைத்து அதன் மீது நெய் பாத்ரத்தை வைக்கவும்.


    தர்பத்தை அக்னியில் கொளுத்தி , அந்த நெய் மீது காட்டி தர்பத்தை வடக்கில் போடவும்.இன்னொரு முறை அதே மாதிரி செய்யவும்


    பிறகு நான்கு அங்குல நீளமுள்ள 2 நுனி தர்பங்களை நெய் பாத்திரத்தில் போடவும். மறுபடியும் தர்பத்தை கொளுத்தி ஜ்வாலையுடன் 3 தடவை நெய் பாத்ரத்தை ப்ரதக்ஷிணமாக சுற்றி ,


    தர்பத்தை வடக்கில் போடவும்.நெய் பாத்ரத்தை தணலுக்கு வடக்கில் இறக்கவும். தணலை அக்னியுடன் சேர்க்கவும்.நெய் பாத்ரத்தை அக்னிக்கு மேற்கில் வைத்து கொள்ளவும்.


    பரிஷேசனம்; அதிதேனுமன்யஸ்வ என்று அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும். அனுமதேனுமன்யஸ்வ என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும்


    ஸரஸ்வத்யனுமன்யஸ்வ என்று வடக்கில் ; மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும். பிறகு தேவஸவித: ப்ரஸுவ: யஜ்ஞம் ப்ரஸுவ யஜ்ஞபதிம்
    பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன:


    புநாதுவாச்சபதி: வாசன்ன: ஸ்வதது என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து ஆரம்பித்த இடத்தில் முடியும்படியாக ப்ரதக்ஷிணமாய் பரிசேஷனம் செய்யவும்.


    ஸமித்துக்களை அக்னியில் ஆதானம் செய்தல் ((வைத்தல் ))


    கட்டி வைத்திருக்கும் 17 சமித்துக்களை எடுத்துக்கொண்டு நெய்யில் தோய்த்து ஒரு ஸமித்தை பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைக்கவும்.


    ஒரு சமித்தை பஞ்ச பாத்ரத்தின் மேல் வைக்கவும். மீதி 15 ஸமித்துக்களை கையில் வைஹ்துக்கொண்டு ப்ரம்மாவை பார்த்து ஓம் அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே. என்று சொல்லி அக்னியில் வைக்கவும்.


    ப்ரம்ஹா ஓம் ஆதாஸ்வ என்பர்.


    அக்ஷதையால் அர்சனை. பாவகம் அக்னிம் அப்யர்சயாமி ( அக்னியில்)


    ஒளபாஸனாக்னியில் செய்தால் சோபனம் அக்னிம் என்று சொல்லவும்.
    ப்ரம்ஹாணம் அப்யர்ச்சயாமி (ப்ருஹ்மாவின் மீது)


    ஆத்மானம் அப்யர்ச்சயாமி (தன் தலை மீது)
    ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: ( ப்ராஹ்மணாள் மீது).


    ப்ரபதாதமம ஹாமந்த்ர ஜபம்.


    புஷ்பம், அக்ஷதை, பஞ்சபாத்ரத்தின் மீது வைத்திருந்த ஸமித், தர்பம், உதரணியில் தீர்த்தம் சந்தனம், பூமி( தரையை கிள்ளிகொள்ளவும்).
    இவைகளை கையில் எடுத்துக்கொண்டு அக்னியை ப்ரதக்ஷிண்மாக சுற்றி வலது தொடை மேல் ஸங்கல்பம் செய்வது போல் கையை வைத்துக்கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜபிக்கவும்.


    ஓம் தப:ச தேஜ:ச ச்ரத்தாச ஹ்ரீ:ச ஸத்யம்ச அக்ரோத: ச த்யாக: ச த்ருதி: ச தர்ம: ச ஸத்வம்ச வாக்ச மனஸ் ச ஆத்மா ச ப்ரம்ஹச தானி ப்ரபத்யே தானி மாமவந்து பூர்புவசுவரோம்.


    மஹாந்தம் ஆத்மானம் ப்ரபத்தயே விரூபா க்ஷோஸி தந்தாஞ்ஜி; தஸ்யதே சய்யாபர்ணே க்ருஹா: அந்தரிக்ஷே விமிதம் ஹிரண்மயம் தத் தேவானாம்
    ஹ்ருதயானி அயஸ்மயே கும்பே அந்த: ஸந்நிதானி தானி, பலப்ருச்ச


    பலஸாச்ச ரக்ஷத: அப்ரமனீ: அனிமிஷத: ஸத்யம் யத்தே த்வாதஸ புத்ரா: தே த்வா ஸம்வத்ஸரே ஸம்வத்ஸரே காமப்ரேண யஜ்ஞேன யாஜயித்வா புனர்ப்ரஹ்மசர்யம் உபயந்தி த்வம் தேவேஷு ப்ராம்ஹணோஸி அஹம்


    மனுஷ்யேஷு ப்ராம்ஹணோவை ப்ராம்ஹணம் உபதாவதி உபத்வா தாவாமி ஜபந்தம்மா மாப்ரதிஜாபீ: ஜுஹவந்தம் மாமாப்ரதி ஹெளஷீ: குர்வந்தம்மா மாப்ரதிகார்ஷீ: த்வாம் ப்ரபத்யே த்வயா ப்ரஸுத: இதம் கர்ம கரிஷ்யாமி


    தன்மேராத்யதாம் தன்மே ஸம்ருத்யதாம் தன்மே உபபத்ய தாம் ஸமுத்ரோமா விச்வவ்யசா: ப்ரம்ஹா அனுஜானாது துதோமா விச்வவேதா: ப்ரம்ஹண:புத்ர:
    அனுஜானாது ச்வாத்ரோமா ப்ரசேதா: மைத்ரா வருண: அனுஜானாது தஸ்மை விரூபாக்ஷாய தந்தாஞ்ஜயே ஸமுத்ராய விச்வவ்ய சஸே துதாய விச்வவேதஸே ச்வாத்ராய ப்ரசேதஸே ஸஹஸ்ராக்ஷாய ப்ரம்ஹண: புத்ராய நம:


    என்று ஜபித்து கையில் உள்ளவற்றை வடக்கில் கீழே போட்டுவிட்டு அதிலிருந்து ஸமித்தை மட்டும் எடுத்து ப்ரோக்ஷித்து அக்னியில் வைக்கவும்.


    அங்காஹுதய:


    பூராதி வ்யாஹ்ருதி த்ரயஸ்ய அத்ரி, ப்ருகு குத்ஸா: ரிஷய: என்று சிரஸில் கை வைக்கவும். காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப: சந்தாம்ஸி என்று மூக்கில் கை வைக்கவும்.


    அக்னி வாயு ஸூர்யா: தேவதா: என்று மார்பில் கை வைக்கவும்.தர்வியால் நெய் எடுத்து ஹோமம் செய்யவும்.:


    பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
    புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
    ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
    இதுவறை புரஸ்தாத் தந்த்ரம் என்று பெயர்.


    ப்ரதானாஹூதி
    பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
    புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
    ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
    ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம


    உபரிஷ்டாத் தந்திரம் ஆன பிறகு பூணல் கிரஹஸ்தர், ப்ரம்ஹசாரி எல்லோரும் பூணல் போட்டு கொள்ள வேண்டுமென்பதே
    அக்னி முகம் வைதீக முறை

    ஹோமம் செய்முறை. முன் பகுதி—ஹோமம் வைதீக முறை மற்றும் தாந்த்ரீக முறையிலும் செய்யலாம். இங்கு இப்போது வைதீக முறை ஹோமம் செய்வது பற்றி பார்ப்போம்..


    ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம் செய்ய மண்ணினால் செய்யப்பட்ட ஹோம குண்டம் போதும்.. சிமெண்ட் காங்க்ரீடினால் சிறிதாக செய்ய பட்டிருந்தாலும் போதும். செங்கல் 21 வைத்தும் ஹோம குண்டம் தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் செங்கல்லை அலம்பி உபயோகி.


    அரை மீட்டர் அகலம் அரை மீட்டர் நீளம் கால் மீட்டர் உயரத்திற்கு 21 செங்கல் தேவை. ஒரு பக்கத்திற்கு இரண்டு செங்கல் வீதம் நான்கு புறமும் வைக்கவும். அதன் மேல் மறுபடி ஒரு வரிசை வைக்கவும்.


    இந்த குண்டத்தின் நடுவில் மீதி உள்ள செங்கல்லை வைக்கவும். மணலை கொட்டவும் குண்ட நடுவில்.. கால் மீட்டர் உயர குண்ட செங்கல் மேல் கோலம் போட்டு சந்தனம், குங்குமம் வைக்கவும்.


    சிராய் தூள் மூண்று கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும்..விராட்டி 25; .ஒரு கை முஷ்டி தர்ப்பை கட்டு ;. நெய் ஒரு கிலோ.; ஹவிஸ் அரை லிட்டர் தேவை.


    அரசு அல்லது புரசு சமித்து 100;. புரசு இலை அல்லது மாவிலை 6 . விசிறி, கோலப்பொடி ; கற்புரம், தீப்பெட்டி தேவை.ப்படுகிறது. நவகிரக சமித்து 10; 20; 38; என்ற முறையில் தயார் செய்து கொள்ளவும்.


    சூரியனுக்கு எருக்கு; சந்திரனுக்கு புரசு; செவ்வாய்க்கு கருங்காலி; புதனுக்கு நாயுருவி; குருவுக்கு அரசு; சுக்கிரனுக்கு அத்தி;


    சனிக்கு வன்னி; ராகுவுக்கு அருகம்பில்; கேதுவிற்கு தர்ப்பை;--இவையே நவகிரக சமித்துகள்.. ஜலத்தால் ப்ரோக்ஷித்து பின் உபயோகிக்க வெண்டும்.


    அக்னி முகம்( முகாந்தம் அல்லது ஆஜ்ய பாகாந்தம்)


    தேவர்களுக்கு அக்னியே முகம். அவர் மூலமாக மந்திரங்களை கூறி ஹோமம் செய்தால் தான் அது தேவர்களிடம் செல்லும். அந்த அக்னியும் ஸாதாரண தீயாக இல்லாமல் , விதிப்படி ப்ரதிஷ்டை செய்தால் தான் தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்க முடியும்.


    அதனால் முதலில் யாக பூமியை உழுவது போல் “”ப்ராசீ: பூர்வம், உதக்,ஸக்குஸ்தம், தக்ஷிணாரம்பம் ஆலிகேத், அத உதீசி: புரஸ் ஸக்குஸ்த்தம், பஸ்சிமாரம்பம் ஆலிகேத்””.என ஸமித்தால் கிழக்கு மேற்காக


    மூன்று கோடுகளும்,தெற்கு வடக்காக மூன்று கோடுகளும் குண்டதிற்குள் போட வேண்டும்.. இது குறுக்கு நெடுக்காக உழுவது போலாகும். இம்மாதிரி குறுக்கு நெடுக்காக கோடு கிழிப்பதற்கு உல்லேகனம் என்று பெயர்/


    உல்லேகனம் அக்னிக்கு ஆசனம் அளிப்பது போல் சொல்லப் பட்டிருக்கிறது.


    ஆதலால் அக்னியை குறுக்கு நெடுக்கு கோடு கிழித்த இடத்தில் உமியை அல்லது அரிசி மாவைப்போட்டு வைக்க வேண்டும்.


    உடனே அதன் மேல் சமித்து , வரட்டி சிராய் தூள் வைத்து அக்னியை பலபடுத்த வேண்டும்.
    குறுக்கு நெடுக்கு கோட்டின் மேல் வரட்டி வைத்து அதன் மேல் அக்னி வைக்க கூடாது.


    ஜலத்தால் தெளித்து ஸமித்தை தென் கிழக்கில் போட்டு


    ஜலத்தால் கையை அலம்பி பூர்புவஸ்ஸுவரோம் என்ற மூன்று வ்யாஹ்ருதிகளைக்கூறி அக்னியை குண்டத்தில் வளர்க்க வேண்டும்.
    வ்ராட்டி, சிராய்தூள் கற்பூரம் வைத்து தீக்குச்சியால் அக்னி பற்ற வைக்கலாம்.


    அல்லது பித்தளை தாம்பாளத்தில் அக்னி கொண்டு வந்தால் அக்னி கொண்டு வந்த தாம்பாளத்தில் அக்ஷதையுடன் தீர்த்தம் விட வேண்டும். .எவர்சில்வர் தாம்பாளத்தில் அக்னி கொண்டு வரக்கூடாது .வரட்டியில் வைத்து அக்னி கொண்டு வரக்கூடாது.


    கிழக்கே ஒரு பாத்ரத்தில் தீர்தத்தை வைக்க வேண்டும். இது அசுரர் வராமல் தேவர் மாத்ரம் வர வழி வகுக்கும். மற்ற மூன்று பக்கங்களிலும் சமித்து வைக்க வேண்டும்.. இந்த மூன்று சமித்துகளுக்கும் பரிதி என்று பெயர்.


    அக்னிக்கு மேற்கு பக்கத்தில் சற்று பருமனான சமித்தும் மெல்லியதாக தீர்க்கமாக இருப்பதை தென் புறத்திலும், அதை விட மெல்லியதும் சிறியதுமான சமித்து வட புரத்திலும் வைக்க வேண்டும்.


    பரிஸ்தரணம்=:ஹோம குண்டத்திற்கு நான்கு புறமும் தர்பைகள்; ஒவ்வொரு பக்கமும் 16 தர்ப்பைகள் வீதம் வைக்க வேண்டும். தர்ப்பங்களை கிழக்கு நுனியாகவும் வடக்கு நுனியாகவும் போட வேண்டும்.


    தெற்கிலிருந்து வடக்கே போடும் தர்பமானது , தென்புறமாக போடும் கிழக்கு நுனியான தர்பத்தின் மேலும் வடக்கு புறமுள்ளது கீழாகவும் இருக்க வேண்டும்.


    இது தவிற அக்னிக்கு வட புறமாக பாத்ரங்கள் வைப்பதற்காக கிழக்கு நுனியாக 12 தர்பங்கள் போட்டு இந்த தர்பத்தின் அடிப்பக்கத்தில் ப்ரதான தர்வீ, ஆஜ்ய ஸ்தாலி, தர்ப்ப நடுவில் ப்ரோக்ஷணீ, பாத்ரம்


    தர்பை நுனியில் இத்மம், இதர தர்வி என்ற வரிசையில் கவிழ்த்து வைக்க வேண்டும். இந்த 12 தர்பங்களுக்கு பாத்ர ஸாதனம் என்று பெயர்..


    நமக்கும் அக்னிக்கும் நடுவில் மற்றும் 12 தர்ப்பை வடக்கு நுனியாக போடவும். ஹோமத்திற்குறிய பாத்ரங்களை தரையில் வைக்காமல் ஆசனத்தில் வைக்க வேண்டும்..அதற்காக இந்த தர்பைகள்.


    இங்கு வைத்து ஸம்ஸ்காரம் செய்யாததை ஹோமத்தில் உபயோகிக்ககூடாது.


    ஸ்தாலி பாகம் முதலியவைகளில் ப்ரதான தர்வீ, ஆஜ்ய ஸ்தாலி, ப்ரோக்ஷணி பாத்ரம், இதர தர்வீ, இத்மம் இவைகளை மேற்கிலிருந்து கிழக்கு வறை வைக்க வேண்டும்.


    சிராத்தம், ஸீமந்தம் முதலியவைகளில் அதற்கு உபயோகமாகும் சரு பாத்ரம், பன்னிமுள் முதலியவைகளையும் அங்கு வைக்க வேண்டும்.


    இத்மம்=ஸமித்து கட்டு; இதர தர்வீ= மற்றொரு பலாச இலை அல்லது மாவிலை அல்லது மரக்கரண்டி.; ப்ராதன தர்வீ=பலாச இலை, அல்லது மாவிலை அல்லது மரக்கரண்டி.


    ப்ரோக்ஷணி பாத்ரம்= ஜலம் ப்ரோக்ஷிப்பதற்காக உள்ள பாத்ரம்..;சரு= கஞ்சி வடிக்காத அன்னம். ஆஜ்ய ஸ்தாலீ=நெய் வைக்கும் பாத்ரம்..


    ஆயாமிதம்=: ஒட்டை அளவிற்கு ஸமமான முறியாத இரு தர்பங்களை பவித்ரம் செய்து (கையலம்பி) அதை ஜலத்தில் நனைத்து அப்பவித்ரத்தால் பாத்திரங்களை தொட வேண்டும்..


    ஹோமம் செய்யும் போது பேசினால் அக்னி பகவான் செல்வத்தை குறைப்பார். வைதீக கர்மாக்களில் ஸங்கல்பம் முதல் ப்ருஹ்மார்பணமஸ்து என்று முடிக்கும் வரையில் லெளகீக பாஷையில் பேசக்கூடாது. ஸம்ஸ்க்ருதத்தில் பேசலாம் என்பது பெரியோர்களின் சித்தாந்தம்…


    ஹோம சமித்துக்களின் லக்ஷணம்.: புரசு=பலாசம்; அஸ்வத்தம்= அரசு; அத்தி இவைகள் ஆறு அங்குல நீளமும் , முழுவதும் தோலோடு கூடியதாகவும் பூச்சி அறிக்காததும் நேராகவும் உள்ளதும்,


    ஆள் காட்டி விரல் பருமனுக்கு குறையாததும், அதிகமாகவும் இல்லாததும் , இரண்டு கிளைகள், கணுக்கள் இல்லாததும் இருப்பது நல்லது. பரிதி ஸமித் பத்து அங்குலத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்
    To be Continued
Working...
X