Announcement

Collapse
No announcement yet.

உபநயனம்--தேவையான பொருட்கள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உபநயனம்--தேவையான பொருட்கள்.

    உபநயனத்திற்கு தேவையான பொருட்கள்.

    முதல் நாள். உபநயன பூர்வாங்கம்:--உதக சாந்தி, ப்ரதிசரபந்தம், பாலிகை.,நாந்தி----ஹோமத்துடன்.

    மஞ்சள் தூள். 100 கிராம்; குங்குமம் 50 கிராம்.;; சந்தனம்பொடி 10 கிராம்;
    தொடுத்த புஷ்பம் 10 மீட்டர்; தேங்காய்-20 எண்ணிகை; வாழை பழம் (பூவன்)
    60 நம்பர்; வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ;சீவல்;50 கிராம்; பாக்கு பொட்டலம் 100; மட்டை தேங்காய் 10;

    மாவிலை கொத்து 8 நம்பர்; பையனுக்கு மாலை 1; கும்பத்திற்கு மாலை 1;
    கோதுமை 2 கிலோ; பச்சரிசி 10 கிலோ;; கருப்பு உளுந்து 500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; தலை வாழை இலை 20 நம்பர்; .; 10.ம் நம்பர் நூல்கண்டு 1.

    பாலிகை 5 நம்பர்; பாலிகை தெளிக்க நெல்; எள், உளுந்து, பயறு. கடுகு ஒவ்வொன்றும் 20 கிராம்; ; பசும் பால் 250 மில்லி; உதக சாஃந்தி குட்த்துக்குள் போட ஏலக்காய் பவுடர், க்ராம்பு; பச்சை கல்பூரம்; வெட்டி வேர், விலாமிச்சை வேர்; ;

    பித்தளை குடம் 1: பித்தளை சொம்பு ( ஒரு லிட்ட்ர் கொள்ளலவு) 2.நம்பர்;
    பஞ்சபாத்திர உத்திரிணி 1: தாம்பாளம் 4; கிண்ணங்கள் 4; பாக்குமட்டை கின்னம் 10 நம்பர்; ;ஹோமத்திற்கு நெய் 500 கிராம்; ஹவிஸ் 100 கிராம்; விசிறி 1. சிராய் தூள் 5 கிலோ; விராட்டி 20 நம்பர்; கற்பூரம் 1 பாக்கெட்; தீப்பெட்டி 1; கத்தி-1;; அரிசி மாவு;. பிக்ஷா தாம்பாளம் 2; டபரா-1.

    தீபம் 1: நல்லெண்ணய் தீபத்திற்கு; திரி; தூபக்கால்; தீபக்கால்;; கற்பூர கரண்டி; ஊதுபத்தி 1 பாக்கெட்; ; உட்கார தடுக்கு 12 நம்பர்; ஒன்பது ஐந்து முழ வேட்டி 12 நம்பர்; ; 4 முழ வேட்டி 4 நம்பர்; செம்பு பஞ்சபாத்ர உத்திரிணி 10.

    வெள்ளி பூணல், தங்க பூணல் ; அம்மி-1; ப்ரும்மோபதேச பட்டு; 1; சுண்டல். , அப்பம் நைவேத்தியத்திற்கு..; மாந்தோல் கொஞ்சம். தர்ப்பை; ஹோம குச்சி;
    பொரசம்குச்சி -100;.

    உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு; பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,.கை முறுக்கு;
    அதிரசம், லட்டு, .அல்லது சோமாசி.. கை முறுக்கு அதிரஸம் லட்டு எவர்சில்வர் டப்பிகளில் வைக்க வேண்டும்.

    அம்பட்டனை வரசொல்லி க்ஷவரம் செய்ய சொன்னால் அவனுக்கு வேட்டி, தக்ஷிணை கொடுக்க வேண்டும். முன்னாலேயே வர சொல்லி சொல்ல வேண்டும். சலூனுக்கு வண்டியில் சென்றும் தலை முடி வெட்டிக்கொன்டும் வரலாம்.

    பிக்ஷை அரிசி முதலில் தாயார் தான் போட வேண்டும். பிக்ஷை போடும் ஸ்த்ரீகள் மடிசார் புடவையுடன் பிக்ஷை போட வேண்டும். அவர்களுக்கு தக்ஷிணை , தாம்பூலம், புஷ்பம், சந்தனம், கும்குமம், கை முறுக்கு, லட்டு கொடுக்க வேண்டும்.

    பிக்ஷை அரிசியை உங்கள் வீட்டு சமையல் செய்யும் அரிசியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்கவும்.

    ஸந்தியாவந்தனம் தினமும் செய்வதற்கு தினமும் ஒரு வாத்யாரை வரச்சொல்லி பையனுக்கு மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். தலை ஆவணி அவிட்டம் ஆன பிறகு தான் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம்

    சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது சந்தியா வந்த்னம், ப்ருஹ்ம யக்ஞம்
    ஸமிதா தானம் மட்டும் வாத்தியார் ஸ்வரத்துடன் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..

    பிரும்மோபதேசம் செய்பவர் சந்தியா வந்தன காயத்ரீ ஜபம் தவிர பத்தாயிரம் காயத்ரீ ஜபம் தனியாக தினமும் ஆயிரம் வீதம் காலை 8-30 மணி முதல் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.

    நாந்தி ரித்விக்குகளுக்கு அரிசி வழைக்காய் கொடுப்பதாக இருப்பவற்களுக்கு: 12 வாழைக்கய், ஆறு கிலொ பச்சரிசியும், பாசி பருப்பு 500 கிராம் தேவை.

    புகைபடம் எடுப்பதானால் அதற்குள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளவும். குல தெய்வத்திற்கு அபிஷேகம், வேண்டுதல், ப்ரார்த்தனை , கோயிலுக்கு அன்பளிப்பு செய்ய வேண்டும்.

    சங்கராசாரியாரிடம் சென்று பத்ரிக்கை வைத்து அநுக்கிரஹம் பெற்றுக்கொண்டு வர வேண்டும். சுமங்கலி ப்ரார்தனை, சமாராதனை செய்ய வேண்டும்..

    சிறிய சைஸ் கை முறுக்கு, லட்டு பாக்கெட் வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து ஆர்டர்செய்யவும். வீட்டில் செய்வதாக இருந்தால் ஷாமியானா, டைனிங் டேபிள், நாற்காலி, பென்ச், குடிக்கும் தண்ணிருக்கான கப்
    ,அன்பளிப்பு,

    பொருட்கள், அன்பளிப்பு பைகள் , முதலியவைகள் தேவைக் கேற்றார் போல் வாங்கவும்.//ஆர்டெர் கொடுக்கவும்.

  • #2
    Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

    Dear Mama,

    Whatever seer they had mentioned in the above post is it everything or is there anything to be added for iyengars? Please tell me about the seer bhakshanam and also about the amman seer.

    thanks,
    Raje

    Comment


    • #3
      Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

      Originally posted by santro View Post
      Dear Mama,

      Whatever seer they had mentioned in the above post is it everything or is there anything to be added for iyengars? Please tell me about the seer bhakshanam and also about the amman seer.

      thanks,
      Raje
      Sri:
      The following things are enough.உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு; பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,.கை முறுக்கு;
      லட்டு.
      And about 5 kg raw rice in a eversilver drum like container as "bhikshai arisi ".
      Nvs


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

        உபநயனம் அம்மான் சீர்வரிசை

        ஸ்வாமின் நீரும் ஸ்ரீமான் கோபாலன் அவர்களும் பணக்கார அம்மான் செய்யக்கூடிய சீர் வரிசைகளை பற்றி சொல்லிஇருக்கிறீர்கள். ஆனால் பெரியவாள் இருந்தபோது உபநயனம் ஒரு மிக்க முக்கியமான வைதீக த்தை சார்ந்தது என்றும் படாடோபம் வேண்டியது இல்லை என்றும் பலமுறை சொல்லிருக்கிறார்கள்.அதற்காகத்தான் சமஷ்டி உபநயம் இப்போது பல மடங்களிலும் ஆச்ரமங்களிலும் செய்து வைக்கிறார்கள்.ஒரு ஏழை பிராமணன் நீர் சொல்லியபடி எப்படி அவ்வளவு செலவில் சீர் செய்ய முடியும் என்பதை யோசித்து பார்க்கவேண்டாமா ஸ்வாமின்.செய்ய முடிந்தவர்கள் மாத்திரம் அப்படி செய்யலாம் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்து மற்றவர்கள் செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று சொல்லிருந்தால் ஏழை பிராமணர்கள் சந்தோஷித்து இருப்பார்களே.அடியேன் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் க்ஷமிக்கவும்

        Comment


        • #5
          Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

          ஶ்ரீ:
          "பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தால் போதும்" என்பது எல்லா இடத்திற்கும் பொருந்தும்
          அதை ஒவ்வொரு முறையும் சொல்லத் தேவையில்லை.
          இங்கு வழங்கப்பட்டுள்ளவை 80 சதவீதம்பேருக்கு சாத்தியமானவைதான்.
          மேற்கண்ட பொருட்கள் சீராகச் செய்ய பெரிய பணக்காரராக இருக்கத் தேவையில்லை
          (கீழே உள்ள வீடியோவில் கண்டுள்ளபடி நாகேஷ் போல) பெரிய மனம் இருந்தால் போறும்.



          முடியாதவர்கள், என்னால் அவ்வளவு செய்ய முடியாது, இதில் முக்கியமானதாகச் சொல்லுங்கள் செய்கிறோம் என்று கேட்பார்கள்.

          குறிப்பு:- பெரும்பாலும் வாத்யார், வைதீக ஸம்பாவனை செய்யும்போதுதான் பலபேர் தங்களை ஏழைகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
          தாஸன்,
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.








            அடேயப்பா அப்படிஎன்றால் நமது பிராமணசமூகத்தில் உள்ள 80% பிராமணர்கள் நல்ல நிலையில் பணக்கார வர்க்கத்தை சேந்தவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் போல இருக்கிறது.மிக்க மகிழ்ச்சியான செய்தி .மீதி உள்ள 20% பிராமணர்களும் பணக்கார வர்க்கத்தை சேர பிராத்திப்போமாக .அப்போது வெள்ளி என்ன தங்கத்தினாலேயே சீர் செய்யலாமே.

            Comment


            • #7
              Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

              Thank you so much mama for your explanation still i have a small doubt whether thiratti paal should be given in veli pathiram and should any gold ornaments should be bought

              Comment


              • #8
                Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

                Originally posted by santro View Post
                Thank you so much mama for your explanation still i have a small doubt whether thiratti paal should be given in veli pathiram and should any gold ornaments should be bought
                ஶ்ரீ:
                "வயித்தெறிச்சல் பெண்ணுக்கு மாலைக்கண்ணு ஆம்படையானாம்" ... என்று எங்க அம்மா சொல்லும் பழமொழி ஞாபகம் வருது.

                நடைமுறையில் பொதுவாக பெரும்பான்மையோரால் சீர் (சாஸ்த்ர விஷயமல்ல) என்று வழங்கப்படும் பொருட்கள் சிலவற்றை
                பழக்க வழக்கம் (ஸம்ப்ரதாயம்) தெரிந்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிட்டோம்.
                இதற்கே சில சீர்திருத்தவாதிகளிடமிருந்து கண்டனம் எழும் நிலையில்,
                தாங்கள் தங்கம் வாங்கவேண்டுமா, ப்ளாட்டினம் வாங்கவேண்டுமா என்று கேட்பது எந்த ரகம் என்று தெரியவில்லை.

                அதுபோகட்டும்,

                முதலில் "திரட்டுப்பால்" எதற்காக, எதற்கெல்லாம் கொடுக்கவேண்டும் என்பதும் அதன் பின்புலம் குறித்து யாருக்காவது தெரியுமா?

                முன்பொருகால் திரளாத (பூப்பெய்தாத) பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார்கள், அதனால் அந்தப் பெண் திருமணம் தொடங்கி
                பும்ஸவனம் வரையில் சீக்கிரம் அவள் திரளவேண்டும் என்பதற்காக திரட்டுப்பாலை சீராகக் கொடுத்து வந்தனர்.

                எனவே மற்ற விசேஷங்களில் திரட்டுப்பால் வைப்பது பொறுத்தமில்லை.

                இங்கே மற்றொரு குட்டிக்கதை ஞாபகம் வருகிறது (சம்பந்தமில்லாமல் இருக்காது, சம்பந்தம் என்ன என்பதை வெளிப்படையாக அடியேனால் விளக்க இயலாது).

                தெலுங்கு தெரியாமல் ஆந்திரா சென்ற தமிழன் ஒருவனுக்கு அவன் நண்பன் ஒரு யுக்தி சொல்லி அனுப்பினான்.

                யார் எது கேட்டாலும் தெரியவில்லை என்னும் பொருள் கொண்ட "தெலீதண்டி நாகு சுப்ரங்கா ஏமி தெலிதண்டி" என்கிற ஒரு வாக்கியத்தை மட்டும் தெலுங்கில் சொல்லிவிடு
                மேலும் யாரும் உன்னை எதுவும் தொந்திரவு செய்யமாட்டார்கள் என்று சொல்லியனுப்பினானாம்.

                ஆந்திராவில் ஒரு பஸ்சில் ஏறிய தமிழனைப் பார்த்து அந்த கண்டக்டர் கேட்டாராம்
                "ஏமண்டீ ஈ பஸ்சுலோ எக்குதீரு, மீரு ஏமி ஆடதியா, அசல் மொகுடேனா"? என்று

                நம்ம தமிழன் படாரென்று தனக்குத்தெரிந்த பதிலைச் சொல்ல .......

                அடியேனுக்கும் ஹாஸ்யம் வரும் என்பதை தெரியப்படுத்த கொஞ்சம் தரம் தாழ்ந்து பதிவுசெய்துவிட்டேன்
                சிரித்து, மன்னித்து, மறந்துவிடவேண்டுமாய் பணிவன்புடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

                தாஸன்,
                என்.வி.எஸ்


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

                  Thanks for the information mama its really useful for us.

                  Comment


                  • #10
                    Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

                    எதற்கு க்ஷமிக்கணும் சுவாமி? அப்பப்போ கொஞ்சம் சிரித்தாள் நல்லதுதான். இந்த ஜோக் கன்னடத்திலும் உண்டு. நீங்கள் சொல்வது சரிதான்,வாத்யார்கள் சம்பாவனை விஷயத்தில். ஆனால் இப்போதெல்லாம் அநேக வாத்யார்கள் மிகவும் உயர்த்தி சொல்கிறார்கள். கணபதி ஹோமம் நவக்ராஹா ஹோமம் செய்ய பதினைந்தாயிரம் கொடுங்கள்,சாமான்கள் நீங்களே வாங்கித்தரவேண்டும் என்கிறார்கள். Is it reasonable?
                    வரதராஜன்

                    Comment


                    • #11
                      Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

                      ஸ்ரீ வரதராஜன் ஸ்வாமின் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே post செய்யுங்கள் .அப்புறம் நீங்களும் சீர்திருத்தவாதியாக முத்திரை குத்தப்படுவீர்கள்.சீர்திருத்தமாவது வெங்காயமாவது அவனவன் பிழைக்கும் வழியை பாருங்கோ ஸ்வாமின்..இப்போது வெள்ளியிலிருந்து தங்கத்திற்கு சென்றுவிட்டது தற்காலம்..நான் சொல்லவில்லை ஒரு ஸ்வாமின் மேலே சொல்லிருக்கிறார்.தங்கத்தில் ஏதாவது செய்ய வேண்டுமா என்று..என்ன சரிதானே.இவர்கள் எல்லாம் வயித்தெரிச்சல் ஆசாமிகள் என்றும் முத்திரை குத்தப்படுவீர்கள் .ஜாக்கிரதை

                      Comment


                      • #12
                        Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

                        Originally posted by R.Varadarajan View Post
                        எதற்கு க்ஷமிக்கணும் சுவாமி? அப்பப்போ கொஞ்சம் சிரித்தாள் நல்லதுதான். இந்த ஜோக் கன்னடத்திலும் உண்டு. நீங்கள் சொல்வது சரிதான்,வாத்யார்கள் சம்பாவனை விஷயத்தில். ஆனால் இப்போதெல்லாம் அநேக வாத்யார்கள் மிகவும் உயர்த்தி சொல்கிறார்கள். கணபதி ஹோமம் நவக்ராஹா ஹோமம் செய்ய பதினைந்தாயிரம் கொடுங்கள்,சாமான்கள் நீங்களே வாங்கித்தரவேண்டும் என்கிறார்கள். Is it reasonable?
                        வரதராஜன்
                        அடியேன் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்கிறேன் அதற்க்கு நமது பெரு மதிப்பிற்கு உரிய ஸ்ரீ nvs ஸ்வாமின் அவர்களால்தான் நமக்கு சிறப்பாக வழி காட்ட முடியும்.வழி காட்ட வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் .தாங்களும் ஆமோதித்தால் மிக்க நன்று. செய்வீர்களா?

                        Comment


                        • #13
                          Re: உபநயனம்--தேவையான பொருட்கள்.

                          Originally posted by P.S.NARASIMHAN View Post
                          அடியேன் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்கிறேன் அதற்க்கு நமது பெரு மதிப்பிற்கு உரிய ஸ்ரீ nvs ஸ்வாமின் அவர்களால்தான் நமக்கு சிறப்பாக வழி காட்ட முடியும்.வழி காட்ட வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் .தாங்களும் ஆமோதித்தால் மிக்க நன்று. செய்வீர்களா?
                          ஶ்ரீ:
                          "வடிவேலுகிட்ட நான் என்ன சொன்னேன்னு ஒருத்தர்கிட்டயும் சொல்லாதே ..."ன்னு ஒரு படத்துல காமடி ஒண்ணு வரும்
                          அதுபோல் இருக்கிறது ஸ்வாமின்.

                          விஷயம் என்னன்னு "சொல்லவே இல்லையே!"? பீடிகை பலமாக இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

                          குறிப்பு:- அடியேனுக்கும் இன்டர்நெட்டுக்கும் 7ம் பொருத்தமாகவே உள்ளது
                          உங்களுக்கெல்லாம் எப்படி இன்டர்நெட் ஒத்துழைக்கிறதோ தெரியவில்லை
                          ஒரு போஸ்ட் போட ஒரு மணிநேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.
                          இங்கு BSNL ஐ விட்டால் வேறு கதியும் இல்லை.
                          தாஸன்,
                          என்.வி.எஸ்


                          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                          Encourage your friends to become member of this forum.
                          Best Wishes and Best Regards,
                          Dr.NVS

                          Comment

                          Working...
                          X