Announcement

Collapse
No announcement yet.

தொடர்ச்சி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தொடர்ச்சி

    தேவர்களின் அனுமதியின் மேல் எந்த காரியமும் செய்ய படுமானால் அதன் மூலம் எவ்விதக் குறைவும் ஏற்படாது என்பதே இது போன்ற மந்திரங்களுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒவ்வொரு திக்காக தலையை தர்பையால் துடைத்து எறிய வேண்டும்.
    குமாரனுடைய தலையில் ஒவ்வொரு திசைக்கும் மூன்று மூன்று தர்பங்களை கேசங்களுடன் சேர்த்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மந்திரத்தாலும் கிழக்கு திசை முதல் ப்ரதக்ஷிணமாக கேசங்களை வபனம் செய்ய வேன்டும்.

    அந்தந்த திக்கில் தர்பத்தை வைத்து , தர்பத்தை மட்டும் நறுக்கி எறிய வேண்டும். கேசத்தை அம்பட்டன் வெட்ட வேண்டும் எனவும் சிலர் செய்கின்றனர்.


    கிழக்கு திக்கில் சிகையை துடைக்க கூறும் யேநாபவந் என்ற மந்திரத்தின் பொருள்.:--

    –எந்த கத்தியினால் வபந கர்மாவை நன்கு அறிந்தவரான ஸவிதா சோம ராஜாவுக்கும்
    வருணனுக்கும் வபநம் செய்தாரோ அந்த கத்தியினால் ப்ராமணர்களே இம்மாணவருக்கு வபநம் செய்யும்படி எனக்கு உத்திரவு கொடுங்கள்.


    இக்குமாரன் தீர்காயுள் உள்ளவனாகவும் , உணவை ஜீரணம் செய்யும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கட்டும். இதைக்கூறி கத்தியினால் கேசத்தை நறுக்கி , தென் புறத்தில் பத்னி அல்லது ப்ருஹ்மசாரி கையில் வைத்திருக்கும் நெல்லுடன் கூடிய சாணியில் போட்டு கை அலம்ப வேண்டும்.

    தென் புறம் வபநம் செய்யும் போது கூறும் யத்க்ஷுரேண என்ற மந்த்ர அர்த்தம்:-கூரியதும் ப்ரகாசமாயுமுள்ள கத்தியால் கேசங்களை வபநம் செய்கிறோம். மாணவன் தலையை சுத்தமாக செய். அவன் ஆயுளை அபகரிக்காதே.

    மேற்கு பக்கம் கேசத்தை சேதிக்கும் போது கூறும் யேந என்னும் மந்த்ரம்:----
    அர்த்தம்:--எதனால் பூ*ஷா, ப்ருஹஸ்பதி, அக்னி, இந்த்ரன், ஆகியவர்களின் ஆயுள் வ்ருத்தியின் பொருட்டு வபநம் செய்தாரோ, அந்த கத்தியால் இந்த மாணவனுக்கு ஆயுள், கீர்த்தி, க்ஷேமம் இவை வ்ருத்தியாகும்படி வபநம் செய்.

    முன் போல் அறுத்த கேசத்தை சாணியில் போட்டு கை அலம்பி, வடக்கு புறத்தில் யேந என்பதால் அறுக்க வேண்டும்.இதன் பொருள்:--எதனால் பூஷா, ப்ருஹஸ்பதி,அக்னி, இந்த்ரன் இவர்களது ஆயுள் வ்ருத்தியாகும்படி வபநம்

    செய்தாரோ ஹே------------சர்மாவுள்ள மாணவணே உனது ஆயுள் வ்ருத்தியாகும்படி அதனால் வபநம் செய்கிறேன்.நீ நீண்ட நாள் வர்ச்சஸ்ஸுடன் நல்ல மனதுள்ளவனாக இரு.. அறுத்த கேசத்தை சாணியில் போட்டு கை அலம்பவும்..

    இக்கேசங்களை சாணியுடன் அத்தி மரத்தடியில் அல்லது தர்ப்பை ஸ்தம்பத்தில் போட வேண்டும்.. அச்சமயத்தில் கூறும் உப்த்வா என்ற மந்திரம்அர்த்தம்L( தாயோ அல்லது ப்ருஹ்மசாரியோ போட வேண்டும்.))

    ப்ருஹஸ்பதி, ஸோமன், அக்னி, ஸவிதா என்ற இவர்கள் கேசத்தை
    த்யுலோகம்,, ,பூமி ஜலம், ஸ்வர்க்கம், முதலிய இடங்களில் போட்டது போல் ((இவ்விதமாக போட வேண்டிய இடத்தை கண்டுகொண்டனர்.))

    ((வபனம் என்பது இயற்கையில் அமங்கள மானதால் இவ்விதம் ப்ரார்த்திக்க படுகிறது.((ஆயுளை திருட வேண்டாம் என்று)) சிரஸில் கேசங்கலில்லாதவன் ஒன்றுமே யில்லாத தரித்ரனுக்கு ஒப்பாவனவன் என்ற வாக்கியம் உள்ளது.))




    நானும் அத்தி, தர்பை முதலிய இடங்களில் போடுகிறேன். பிறகு தென்புறம் அமர்ந்த ப்ருஹ்மாவிற்கு தக்ஷிணை அளித்து இந்த ஜலத்தால் அம்பட்டனை கொண்டு மாணவனுக்கு வபனம் செய்விக்க வேண்டும்,

    கத்தியை கழுவி வைக்கவும். அதனால் மூன்று நாள் வேறு ஒரு வேலையும் செய்யக்கூடாது.

    மாணவனும், பிதாவும் ஸ்நானம் செய்து, மடிஉடுத்தி சந்தனம் இட்டுக்கொண்டு, , காலலம்பி, ஆசமனம் செய்து அக்ஷதை ஆசீர்வாதம் செய்து , அக்னி உ,பஸ்தானம் செய்ய வேண்டும்.,

    தாதா ததாது ந : ரயிமீசான: ஜகதஸ்பதி; -ஸ ந: பூர்ணேன-வாவதத்-ஸ்வாஹா;. தாத்ர இதம் ந மம.தாதா ப்ரஜாயா: உத ராய ஈசே தாதேதம் விச்வம் புவனம் ஜஜான: தாதா புத்ரம் யஜமானாய தாதா தஸ்மா உஹவ்யம் க்ருதவத் விதேம ஸ்வாஹா. தாத்ர இதம் ந மம.119








    .
Working...
X