Announcement

Collapse
No announcement yet.

சஷ்டி அப்த பூர்த்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சஷ்டி அப்த பூர்த்தி

    அறுபது, எழுபது, என்பது வயதுகளில் செய்யும் ஷாந்தி விவரம்.
    அறுபது வயதினிலே: சஷ்டி அப்தபூர்த்தி.

    9 கலச ஸ்தாபனம்.: நடுவில் ம்ருத்யுஞ்சயர்;. வலது பக்கம் ப்ரும்ஹா; இடது
    பக்கம் ருத்ரன்.; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு.; விஷ்ணுக்கு வலது பக்கம் நக்ஷத்திர தேவதைகள்.;

    விஷ்ணுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே திக் பாலர்;; திக் பாலருக்கு வலது பக்கம் ஆயுர் தேவதை; திக் பாலருக்கு இடது பக்கம் மார்கண்டேயர். ;

    12 கலச ஸ்தாபனம்: நடுவில் ம்ருத்யுஞ்ச்யர்; வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரன்; ;ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு; விஷ்ணுக்கு இடது பக்கம் ஸப்த ரிஷிகள்.;
    ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே நக்ஷத்திர தேவதைகள்; இதற்கு நேர் மேலே நவகிரகங்கள்;; இதற்கு நேர் மேலே திக் பாலகர்; ;நக்ஷதிர தேவதை களுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;

    இதற்கு இடது பக்கம் மார்கண்டேயர்;நக்*ஷத்திர தேவதைக்கு வலது பக்கம் சிரஞ்சீவி ;இதற்கு வலது பக்கம் ஆயுர் தேவதை.;

    33 கலச ஸ்தாபனம்;

  • #2
    Re: சஷ்டி அப்த பூர்த்தி

    33 கலச ஸ்தாபனம்;

    நடுவில் ம்ருத்யஞ்சயர் தெற்கே ப்ருஹ்மா; ம்ருத்யஞ்சயர்க்கு மேற்கே விஷ்ணு; ம்ருத்யஞ்சயர்க்கு வடக்கே ருத்ரன்;; ருத்ரனுக்கு வடகிழக்கு மார்கண்டேயர்.;எட்டு திக்குகளுக்கும் எட்டு திக் பாலகர்கள்;; ம்ருத்யஞ்சயர், ப்ருஹ்ம, ருத்ரணுக்கு மேலே ஸம்வத்ஸர தேவதை

    , நக்ஷத்ர தேவதை, ஆயுர் தேவதை; இம்மூண்றிர்க்கும் மேலே நவகிரஹங்களுக்கு ஒன்பது கலசங்கள்;;ப்ருஹ்மாவிற்கு தெற்கேயும் விஷ்ணுவிற்கு மேற்கேயும் ஏழு
    சிரஞ்சீவி கலசங்கள் அமைக்கவும்.

    60 கலச ஸ்தாபனம்.

    நடுவில் ம்ருத்யஞ்சயர்; தெற்கே ப்ருஹ்மா; ம்ருத்யஞ்சயருக்கு வடக்கே ருத்ரர்;ம்ருத்யஞ்சயருக்கு மேற்கே விஷ்ணு; ருத்ரனுக்கு வடக்கே மார்கண்டேயர்; எட்டு திக்குகளிலும் எட்டு திக் பாலகர்கள்; ம்ருத்யுஞ்சய,ர்;, ப்ருஹ்மா ருத்ரருக்கு ; கிழக்கே ஒன்பது நவகிரஹங்கள்

    ; ப்ருஹ்மாவிற்கு தெற்கேயும் விஷ்ணுவிற்கும் மேற்கேயும் ஏழு சிரஞ்சீவி கலசங்கள், ;ப்ருஹ்மாவிற்கு தென் கிழக்கே ஆயுர் தேவதை,

    மார்கண்டேயருக்கும் வடக்கு திக் பாலகருக்கு மத்தியில் கிழக்கிலிருந்து மேற்காக பதிநான்கு நக்ஷத்திர கலசங்களையும், தெற்கு திக் பாலகருக்கும் சிரஞ்சீவி கலசங்களுக்கும் நடுவில் பதிநான்கு நக்ஷத்திர கலசங்களயும் வைக்கவும்.

    125 கலசங்கள் வைத்து வழிபட 60 வர்ஷங்களுக்கு 60 கலசங்களும்; ஸப்த ரிஷிகளுக்கு ஏழு கலசங்களும் மேற்கண்ட 60 கலங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சைவாகமோக்த உக்ர ரத சாந்திக்கு 279 கலசங்கள் வைத்து வழிபடுவோரும் உண்டு. உத்ராயனம், தக்ஷினாயனம் 2; ருது-6; மாதங்கள் 12; ராசிகள் 12; யோகம் 27; கரணம் 11; கிழமை 7; வசுக்கள் 9; ருத்ரர் 11;திதிகள் 16.

    துவாதச ஆதித்யர் 12; மருத் கணம் 7; நவ துர்கா 9; கணபதி;; க்ஷேத்ர பாலர்; வாஸ்து; பஞ்ச ப்ருஹ்மம்;5 வருணன்4; ஆகாசம்; பூமி;; அபயங்கரர்; மஹி தேவதா; சஹ சித்ரம்; ம்ருத்யஞ்சயருக்கு அதி தேவதை; ப்ரதி அதிதேவதை மேற்கண்ட 125 கலசங்களுடன் சேரும்.

    Comment

    Working...
    X