அடியேனுடைய கனிஷ்ட குமாரன் தன்னுடைய வீட்டின் முதல் மாடியில் புதியதாக பிளாட் நிர்மாத்திருக்கிறான். அதற்க்கு இந்த ஆவணி மாதத்திலேயே க்ருஹப்ரவேசம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளான் . வீட்டின் முகப்பு வாயில் (maindoor) கிழக்கு பார்த்தது. ஞாயிறு,வெள்ளி மேற்கு திசையில் வாரசூலை ஆகையால் வேறு நல்ல நாளில் க்ருஹப்ரவேசம் செய்யவேண்டும் நமது பரந்தாமன் பஞ்சாங்கப்படி 11-9-2013 புதன் நல்ல நாளாக இருக்கிறது. அன்னாருடைய மனைவியின் நக்ஷத்திரம் ரேவதி.ஆனால் அன்று ஷஷ்டி திதியாக உள்ளது மேலும் துலா லக்னம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.அது சர ராசி அல்லவா? அன்று உத்தமமான நாள் என்றால் அன்றே க்ருஹப்ரவேசத்தை வைத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.இதைப்பற்றி பெரியவர் NVS ஸ்வாமின் அவர்களின் மேலான வழி காட்டுதலை எதிர் பார்க்கிறேன். அவசியம் உதவவேண்டும் என்று ப்ரார்த்திகின்றேன். இல்லை என்றால் வேறு நல்ல உத்தமமான நாளை தேர்ந்தெடுத்து கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.முன்னொருமுறை வேறு ஒருவர்க்கு எந்த விஷயமாய் இருந்தாலும் forum மூலமாகத்தான் அணுகவேண்டும் என்று சொல்லிருப்பதால் அடியேன் NVS ஸ்வாமின் அவர்களுக்கு பிரைவேட் message ஆக அனுப்பி வில்லை.இம்மாதிரி சில பிரைவேட்விஷயங்களில் அவரை நேரடியாக அணுக அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

Comment