Announcement

Collapse
No announcement yet.

Jatakarma for a girl

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Jatakarma for a girl

    Dear sri nvs sir,
    It has been mentioned in vaidhyanadha deekshitiyam varnashrama dharma kandam poorva bhagam pg:337 that for jathakarma of girls homam should be performed without mantras. What does the 'without mantra' mean sir? How many times should we give ahuti without mantras? Kindly answer my questions immediately after you see this postsir.
    With regards,
    Aaravamudhan
    Attached Files

  • #2
    Re: Jatakarma for a girl

    Sri:
    சாஸ்திரங்கள் - ஸ்ம்ருதிமுக்தாபலத்தில் - சர்ச்சையாக -
    வெவ்வேறு ரிஷிகளின், அபிப்ராயங்களை அவரவர்கள் மதமாக - கருத்தாக -
    அப்படியே வழங்கப்பட்டுள்ளது.

    இங்கே - கோபிலர் - என்கிற ரிஷி மட்டும்தான் ஹோமம் செய்யவேண்டும்
    என அபிப்ராயப்படுகிறார்.

    ஒவ்வொரு வேதத்திற்கும் - ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட சூத்ரங்கள் உள்ளன.
    உதாரணமாக யஜூர் வேதத்தில் க்ருஷ்ண - சுக்ல என இருபிரிவுகள் உள்ளன. க்ருஷ்ண யஜூர்வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகானஸம்
    என்று ஐந்து ஸூத்திரங்கள் உள்ளன.

    ஒருவர் எந்த வேதம், எந்த சூத்திரமோ, அந்த சூத்திரக்காரர் ஒவ்வொரு கர்மாவுக்கும்
    என்ன சூத்ரம், ப்ரயோகம் எழுதியுள்ளாரோ, அந்தவிதத்தில்தான் செய்யவேண்டும்.

    சாஸ்திரத்தில் எந்த ரிஷியின் எந்த அபிப்ராயத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை
    ஆராயவோ, அநுசரிக்கவோ ஒரு சாதாரண க்ருஹஸ்தனுக்கோ, வாத்யார்களுக்கோ,
    ஏன் ஆசார்யபுருஷாளுக்கோகூட அநுமதியில்லை.

    எங்காவது சூத்திரத்தில் *தர்மசங்டம் - சந்தேஹம் ஏற்படுகின்ற சமயத்தில்
    ஆசார்யர்கள், வித்வான்கள் சதஸைக்கூட்டி, விவாதித்து ஒரு முடிவிற்கு வருவார்கள்.

    *தர்மசங்கடம் என்றால் என்ன என்பதுபற்றி ஒரு அறிஞரின் உபந்யாஸத்தில் இருந்து ஒரு நகைச்சுவைப் பகுதி:

    ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான் - பயணச்சீட்டில்லாமல் பேருந்தில் பயணிப்பதா, புகைவண்டியில் பயணிப்பதா
    என ஒரே தர்மசங்கடமாக இருக்கிறது என்று!
    அடுத்தவன் சொன்னான் - அடேய் இது தர்மசங்கடமல்ல - அதர்ம சங்கடம் என்றானாம்.

    தர்மசங்கடம் என்றால் - ஒரு விஷயத்தில் இரண்டு தர்மங்களில் ஒன்றைப் பின்பற்றவேண்டிய சூழல் வரும்போது
    இதில் எந்த தர்மத்தை அநுஷ்டிப்பது என்பதே தர்மசங்கடம் ஆகும்.

    ராமாயணத்தில் - நாளை ராமனுக்கு முடிசூட்டப்படும் என்று அறிவித்தபிறகு
    கைகேயி, தனக்கு முன்னர் அளித்த இருவரங்களினால் - ராமனை விடுத்து பரதனுக்கு முடிசூட்டவேண்டும் எனக்கேட்டதால் -
    அந்தச்சமயத்தில் - ராமருக்கு முடிசூட்டுவேன் என்ற வாக்கையும் - மூத்தவனுக்குத்தான் முடிசூட்டுவது என்கிற மரபுப்படியான
    தர்மத்தை செயல்படுத்துவதா, கைகேயிக்கு அளித்த வரத்தின்படி அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி பரதனுக்கு முடிசூட்டுவதா -
    என்கிற இருவித தர்மத்தில் எதைச் செயல்படுத்துவது என்கிற தர்மசங்கடத்தில் ஆழ்ந்தான் என உபந்யஸிப்பர் பெரியோர்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X