Announcement

Collapse
No announcement yet.

திருமாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அ&

    திருமாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டுமா?
    மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.
    திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள்.
    ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும். கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
    தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.


Working...
X