Announcement

Collapse
No announcement yet.

சங்க்ரமண தர்ப்பணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சங்க்ரமண தர்ப்பணம்

    சங்க்ரமண தர்ப்பணம்

    சித்திரை,ஆடி,ஐப்பசி ,தை மாத பிறப்புக்களில் (வருஷத்தில் நான்கு முறை) அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும்..ஒரே தினத்தில் மாஸ ஷங்க்ரமண தர்பணமும் .அமாவாசை தர்பணமும் நேரிட்டால் அமாவாசை தர்பணத்தை விட்டுவிட்டு மாஸ ஷங்க்ரமண தர்பணத்தை மட்டும் செய்யவேண்டும்..


    மாஸ,அமாவாசை,பரஹேநி தர்ப்பணம் இம்மூன்றும் ஒரே தினத்தில் நேரிட்டால் மாஸ ,பரஹேநி இவ்விரண்டு தர்பணங்களை மட்டும் செய்யவேண்டும்


    45 நாழிகைக்குள் மாஸ ஸங்கரமணமானால் அன்றைய தினமே தர்ப்பணம் செய்யவேண்டும் .
    45 நாழிகைக்கு மேல் மாஸஸங்க்ரமணமானால் மறுநாள் தர்ப்பணம் செய்யவேண்டும்
    தக்ஷிணாயன புண்ய காலத்தில் ஆடி மாதம் பிறப்பிதற்குமுன்பே 20 நாழிகைக்குள் (உத்தராயணத்திலேயே) தர்பணம் செய்யவேண்டும்
    உத்தராயண புண்யகாலத்தில் தை மாத பிறப்பு ஆனபின் 20 நாழிகைக்குள் தர்ப்பணம் செய்யவேண்டும் .இரவில் ஆடி மாதம் பிறப்பானால் அன்று பகலிலும், தை மாதம்
    பிறப்பானால் மறு நாள் பகலிலும் தர்ப்பணம் செய்யவும் .


    ஸங்கல்பத்தில் "மேஷ ஸங்க்ரமண ஸ்ராத்தம் " "கடக ஸங்க்ரமண ஸ்ராத்தம் "என்று அந்தந்த மாதப்பிறப்பை சொல்லி "தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே என்று சொல்ல
    வேண்டும் .மற்ற மந்த்ரங்கள் எல்லாம் அமாவாஸ்யை தர்பண்த்தில் சொல்லியதைபோல் செய்யவும் .


    குறிப்பு : மேலே சொல்லியவை எல்லாம் பலருக்கு தெரிந்திருக்கும் .ஆனாலும் தற்கால வாத்யார்கலெல்லாம் பணத்தில் குறியாக இருந்து க்ரஹஸ்தர்களை உத்தராயண
    புண்யகால தர்பணத்தை தக்ஷிணாயத்திலேயே செய்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள் .அவர்கள் இதை தெரிந்து கொண்டால் சரி. இல்லை என்றால் அவர்கள் இஷ்டப்படி
    செய்து கொள்ளலாம்
Working...
X