Announcement

Collapse
No announcement yet.

ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

    21. அந்ந ஹோமம்


    ப்ராசீனாவீதி.
    பித்ரு ஸ்வாமியைப் பார்த்து கேட்கறது.
    உத்திரியதாம் அக்நௌச க்ரியதாம்?
    உத்ருதமன்னம் அக்நாவதிஸ்ரித்யா. அபிகார்ய. ப்ராசீனம் உதீசீனம்வா உத்வாஸ்ய. ப்ரதிஷ்டிதம் அபிகார்ய.
    சாதம், வடை, கரமது தொன்னைகளை நெய்விட்டு அக்நிக்கு நைவேத்தியமா காமிக்கறது. இடது கைப் பக்கம் கீழ வச்சுடறது. திரும்பவும் ரெண்டுலயும் நெய் சேர்க்கறது.
    தர்வ்யாம் த்விருபஸ்தீர்யா.
    பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுண்டு, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது.
    மத்யாத் த்விரவதாய. ஸக்ருத் அபிகார்யா.
    (வத்ஸானாம் த்ரிரவதானம்.)
    மத்தியிலேருந்து 2தரம் சுண்டைக்காயளவு சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது.
    வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
    இதுமாதிரி மொத்தம் 7 ஹோமம். (ஸ்ரீவத்ஸ கோத்ராளுக்கு 3 தரம் சாதம்.)

    1. யந்மே -மாதா -ப்ரலுலோப -சரதி -அநநுவ்ரதா -தன்மே ரேத: -பிதாவ்ருங்தாம் -ஆபு: -அன்ய: -அவபத்யதாம்

    மந்திரமும் அதன் பொருளும்:

    மந்திரம் ::“என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

    பொருள் :: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.

    இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, பூசாரி சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

    THANK FOR : ராமானுஜ தாத்தாச்சாரியார்

    மந்திரமும் அர்த்தமும்.:

    மேற்படி மந்திரத்தையும் அர்த்தத்தையும் ஸ்ரீ இராமானுஜதாதாசாரியர் அவர்கள்
    புரோஹிதர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறாரே. அப்படி என்றால் ஏன் அந்த மந்திரத்தை உச்சரிக்கவேண்டும் .ஒரே குழப்பமாக இருக்கிறதே.தங்களுடைய மேலான அப்பிப்ராயம் என்ன ?


  • #2
    Re: ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

    யன்மே: இதன் அர்த்தம் ஶ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா அவரதுஆபஸ்தம்ப பார்வண ச்ராத்த ப்ரயோகம் புத்தகத்தில் த்மிழ் அர்த்தம் கொடுத்து இருப்பது இவ்வாறு.: எனது தாயார் பதிவ்ரதா தர்மப்படி பதியின் தர்ம வ்ரதங்களை ப் பூர்ணமாக அனுஷ்டிக்காமலிருந்தாலும் என்னை உன்டு பண்ணின பிதாவே இந்த ஹவிஸ்ஸை பெறட்டும்.

    விதி தவறி இருந்தால் ஹவிஸ்ஸை பெற வரும் மற்ற அஸுராதிகள் இதை அடைய வேண்டாம். என் தந்தைக்கே தருகிறேன்.

    Comment


    • #3
      Re: ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

      ஶ்ரீ:
      இது யாரைக் குறித்து விடுக்கப்பட்ட கேள்வி என்பது தெரியவில்லை. ஆயினும் சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் பதில் அளிக்கிறேன்.

      நாத்திகர்களைப்போல் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதிலும், பேசுவதிலும் அர்த்தமில்லை.

      உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் ஆணாயினும், பெண்ணாயினும் தவறிழைக்கிறார்கள்,
      தர்மத்தை பிறழ்கிறார்கள்.
      தவறிழைத்த ஆயிரக்கணக்கான ஆண்களையும், தவறிழைத்த நூற்றக்கணக்கான பெண்களையும் பற்றி
      அன்றாட வாழ்க்கையில் பத்திரிகை போன்றவை மூலம் அறிகிறோம்.
      அவர்களும் யாராவது ஒருவனுக்குத் தாய்தான்.
      தவறிழைத்தாள் என்பதற்காக, தகப்பனின் சொல்லைத் தட்டாத பரசுராமன் தன் தாயின் தலையைக் கொய்தான் என்பதும், அகலிகை போன்ற ரிஷி பத்னிகளும் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
      75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தொடர்புள்ளவர்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படியானால் வெளியில் தெரியாவிட்டாலும் அதில் பாதி சதவீத அளவிற்கான பெண்களுக்கும் அப்படிப்பட்ட தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது.

      ஆனால் இவையெல்லாம் இந்த மந்திரம் தொடர்பான வாதத்திற்கு நமக்குத் தேவையே இல்லை.
      காரணம் இந்த மந்திரத்தில் அப்படிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.
      "என்மே மாதா" என்கிற ச்ராத்த
      மந்திரத்திற்கு சரியான
      பொருள்:
      "...ப்ரலுலோப சரதி ..."
      சாஸ்த்ர'த்தில் ஐந்து பேரை
      அப்பாவாகச்
      சொல்லியிருக்கிறது. யாரார்
      என்றால்
      ஜநீதா சோபநீதா ச யச்ச வித்யாம்
      ப்ரயச்சதி !
      அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே
      பிதர:ஸ்ம்ருதா:!!
      பெற்ற தகப்பன்
      ப்ரஹ்மோபதேசம் செய்தவன்
      குரு
      அன்னமிட்டு காப்பாற்றியவன்
      பயத்திலிருந்து
      காப்பாற்றியவன்
      இந்த ஐவரும் தந்தையாகப்
      போற்றப்படவேண்டியவர்கள்
      ஆயினும்
      யாருடைய சுக்லத்தினால் நான்
      பிறவி பெற்றேனோ அந்த என்னைப்
      பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி
      போகவேண்டும். என்பது பொருள்.
      அதுபோல்
      என்மே பிதாமஹி - என்பது
      பாட்டியையும்
      என்மே ப்ரபிதாமஹி - என்பது
      கொள்ளுபாட்டியையும் முறையே
      குறிக்கும்
      (பாட்டிக்கு - ரேத:பிதாமஹ:
      என்றும்
      கொள்ளுப் பாட்டிக்கு -
      ரேத:ப்ரபிதாமஹ: என்றும்
      மந்த்ரம் தெளிவாக உள்ளது).
      இந்த காரணத்தினால்தான்
      பெண்களிடமிருந்து பில்
      வாங்கிப்பண்ணப்படும்
      ச்ராத்தங்களுக்கு இந்த
      மந்த்ரங்களை உபயோகித்து ஹோமம்
      செய்ய முடிவதில்லை.
      எவ்வளவு அழகான, தெளிவான,
      குறிப்பான மந்த்ரம்?
      இதை இவ்வளவு
      கொச்சைப்படுத்துகிறார்களே?!!

      கடலங்குடி கே.என்.ஸரஸ்வதி அவர்களின் ப்ருஹத் ஸம்ஹிதை புத்தகததில்
      இந்த மந்திரத்திற்கு இன்னும் தெளிவாக அர்த்தம் எழுதியுள்ளார்கள். (பக்கம் நினைவில்லை).

      மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம்,
      பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும் உபயோகிக்காமல்
      போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப்
      போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு
      இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?
      அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும்
      என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கரையைக் கண்டு வியக்கவேண்டாமா?
      அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்?!

      தர்மரிடம் ஒரு அயோக்கியனைக்
      காண்பிக்கும்படி
      கேட்டார்களாம்
      அவர் - என் கண்ணுக்கு ஒரு
      அயோக்கியன்கூடத்
      தென்படவில்லை என்றாராம்.
      துரியோதனனிடம் -ஓரு நல்லவனைக்
      காண்பிக்கும்படிக்
      கேட்டார்களாம்,
      அவன் - ஒரு நல்லவன்கூட என்
      கண்ணுக்குப் புலப்படவில்லை
      என்றானாம்.

      "வெள்த்தனையது மலர் நீட்டம்
      மாந்தர்தம்
      உள்ளத்தனையது உயர்வு"!!
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

        Sree NVS Swaminஎன்னை போன்ற ஏதும் தெரி யாதவர்கள் கூட நன்றாக தெரிந்துகொள்ளும் வகையில் விளக்கிக்கூறியதர்க்கு மிக்க நன்றி. ஆனால் அதே சமயத்தில் அடியேனை நாத்திகன் என்று கூறி விட்டேர்களே என்று கவலையாக இருக்கிறது. அடியேன் இந்த சபையில் சேர்ந்ததுமுதல் எனது போஸட்டுக்களை பார்த்தால் அடியேன் வைதீகம் மற்றும் ஆன்மீகம் பற்றி தெரிந்துகொள்ள எவ்வளவு பிரயத்தினம் கொண்டுள்ளேன்
        என்று தங்களுக்கே நன்றாக தெரியும்.அப்படியும் என்னை நாத்திகன் மாதிரி என்றுகூறி விட்டீர்களே. பரவாஇல்லை. தெரியாததை தெரிந்து கொள்வதில் தப்பில்லையே.அதிலும் தங்களைபோன்றவர்களிடம் தான் தெரிந்துகொள்ளமுடியும்.நீர் ஒருவர்தான் நல்ல ஒரு விளக்கத்தை அளிக்கிறீர்கள் .இப்போது எனக்கு எல்லாம் நன்றாக தெரிந்துவிட்டது. என்னால் யாராவது இதைப்பற்றி கேட்டால் நன்றாக விவரமாக பதில்சொல்ல முடியும் . இந்த கேள்வி யாரை குறித்து விடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறி உள்ளீர்.அடியேன் உம்மிடம் இம்மாதிரி கேள்விகளைகேட்பேனா? ஏனோ எனது ஜாதகத்தில் குறைஇருப்பதுபோல் தெரிகிறது. எல்லாவற்றையும் பெருமாளிடம் சமர்ப்பித்து விடுகிறேன் . அதற்கு மேல் நான் என்ன செய்வது.? தாங்கள் எனது சந்தேகத்தை விளக்கமாக தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி ...நரசிம்ஹன்

        Comment


        • #5
          Re: ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

          ஶ்ரீ:
          ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,

          அடியேன் எழுதியுள்ள வாக்கியத்தை சற்று விரிவுபடுத்திப் பார்க்கவும்.
          "நாம் ப்ராஹ்மணர்கள், அதனால், நாமும் நாத்திகர்களைப்போல் உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகக்கூடாது" என்பதே அதன் விரிவு. இதைத் தவறாக பொருள்கொள்ளக்கூடாது.
          மேலும் யாதை நாம் உயர்வாக நினைக்கிறோமோ, அவர்களிடம்தான் தாழ்வான தன்மை வெளிவருவதை சகிக்காமல் இதுபோலக் கூற இயலும்.

          ஒருவரிடம் ஒரு உதவியை எதிர்பார்ப்பவர் இவ்வாறு கூறுவார்:
          "உங்களதத்தான் கடவுள் போல நம்பியிருக்கிறேன்" - என்பார்,
          என்றால் - கடவுள் தன்மையுடன் இருந்து உதவி செய்யுங்கள்,
          மனிதனாக மாறி ஏமாற்றிவிடாதீர்கள் என்று பொருள்.
          இந்த இடத்தில் மனிதனைக் கடவுளுடன் ஒப்பிடும்போது,
          நீ மனிதன்தான் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன், ஆயினும் உன்னிடம் கடவுள்தன்மையை
          எதிர்பார்க்கிறேன் என்கிற நேர்மறைப்பொருள்.

          அதே விளக்கம் நம் விஷயத்தில்:
          "உம்மை ப்ராஹ்மணராக, ஆத்திகராக நம்பி வந்திருக்கிறேன்
          அதனால் நாத்திகர்போல வாதிடக்கூடாது என்ற கருத்தில் எழுதினேன்".
          மேலும், என்னைப்பொறுத்தவரை, அது உமக்கு நேரிடையாக விடுக்கப்பட்ட செய்தியல்ல,
          இதுபோன்ற வாதம் எழுப்பும் நபரைத்தான், அதுவும் அந்த சமயத்தில்தான் பார்த்து
          அந்த செய்தியை விடுக்கிறேன்.

          (இந்த போரத்தில் உறுப்பினர்களை அனுமதிக்கும்போது, அவர்கள் ப்ராஹ்மணர்களா
          இல்லையா என்று பார்ப்பதைவிட, அவர்கள் ஆத்திகர்களா, நாத்திகர்களா என்பதைத்தான்
          வெகுவாகப் பார்க்கிறேன். இதனால் பல ப்ராஹ்மணர் அல்லாத நண்பர்களையும்
          உறுப்பினராக அனுமதித்திருக்கிறேன்)

          மேலும்,
          உமது செய்தியின் முடிவில்: தங்களது மேலான அபிப்ராயம் என்ன?
          என்று பொதுப்படையாக உள்ளது.
          அதனால் - இது யாருக்கு விடுக்கப்பட்ட கேள்வி என்று தெரியவில்லை என்று எழுதியிருந்தேன்.
          மேலும், பொதுவாகவோ, ஒரு குறிப்பிட்ட நபருக்கோ எழுப்பப்பட்ட கேள்விக்கு அடியேன் பதில்
          எழுதுவதில்லை, அதனால்தான் அப்படிக் கேட்டிருந்தேன்.

          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

            ஸ்ரீ NVS swamin,தாங்கள் அடியேனுக்கு இவ்வளவு பெரிய பதில் எழுதவேண்டுமா? அடியேன் வைதீக ஆன்மீக விஷயங்களில் இப்போது தான் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் .என்னை
            பெரியமனிதனாக்கிடாதீர்கள்.

            Comment


            • #7
              Re: ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

              ஶ்ரீ
              மிக மிக அருமையான விளக்கம் உபாத்தியாயம் செய்து வைப்பவர்கள் சரியாகப்புரிந்து கொண்டு செய்து வைத்தால்தான் கருமம் செய்பவர்களுக்கும் அதன் பலன் சாஸ்திரபடி 5 அப்பாக்களின் விளக்கம் சூப்பர்

              Comment

              Working...
              X