Announcement

Collapse
No announcement yet.

Daughter's son (Tauhitran)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Daughter's son (Tauhitran)

    Dear Swamin

    Adyen Dasan

    I am in need of a clarification about doing karma. I am Tauhitran to my Patti's younger sister who got married but no children. She died recently and the funeral and 10, 11, 12, 13 day karma was done by her brother (my mama thatha). I would like to know whether I have any rights to do other Masyam, Varushapthiham and Priyathiapthika shardaham etc.,

    Thanks for your time and help. I highly appreciate your advise.

    regards

    ranga

  • #2
    Re: Daughter's son (Tauhitran)

    Originally posted by Indalur-ranga View Post
    Dear Swamin

    Adyen Dasan

    I am in need of a clarification about doing karma. I am Tauhitran to my Patti's younger sister who got married but no children. She died recently and the funeral and 10, 11, 12, 13 day karma was done by her brother (my mama thatha). I would like to know whether I have any rights to do other Masyam, Varushapthiham and Priyathiapthika shardaham etc.,

    Thanks for your time and help. I highly appreciate your advise.

    regards

    ranga
    Read the below article,
    Find your position in that list,
    if no one is there with rights before you, then you will have the rights.
    You can decide yourself:
    >>>>>>>>>>>>>>
    கர்த்தா க்ரமம்

    கர்த்தா என்கிற வார்த்தைக்கு அடியேனுடைய புரிதல் :
    ஒரு காரியத்தைச் செய்யவேண்டிய கடமை உள்ளவன். அந்தக் காரியத்தைச் செய்யாவிடில் அவன் சாஸ்திர விதியை மீறிய தண்டனைக்குரிய குற்றவாளி.
    கர்த்தா என்கிற வார்த்தைக்கு உலகோர் புரிதல் :
    ஒரு கர்மாவைச் செய்வதற்கு உரிமை உள்ளவன். அந்த உரிமை அவனுக்கு மதிப்பையும், சில சமயம் பொருளையும், சில விஷயங்களில் உரிமையையும் பெற்றுத் தரும்.
    கர்மா என்கிற வார்த்தைக்கு அடியேனுடைய புரிதல்:
    ஒருவரிடமிருந்து தான் பெற்ற கடனை, கடனளித்தவருக்குத் தேவையோ, இல்லையோ, கடன் பெற்றவன் திருப்பித்தந்தே ஆகவேண்டும். அதுபோல்,
    மனிதப்பிறவியை அடையக் காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் அவர்களின் பிறப்பிற்கும், வாழ்விற்கும் காரணமாக இருந்த ரத்த சம்பந்தம் உடைய உறவினர் அனைவருக்கும் ப்ரதிஉபகாரமாக, பதிலாகச் செய்யவேண்டிய கடமையே கர்மா ஆகும்.
    கர்மா என்கிற வார்த்தைக்கு உலகோர் புரிதல்:
    (உலகை) நீத்தார், நல்லகதி அடைய, நல்ல உணவுவகைகளை பெற்று பசியற்றவர்களாய் திகழ, பிள்ளைகளால் செய்யப்படும் உதவி.
    பிள்ளைகள் கர்மாவைச் செய்யாமல் விட்டால் அவர்கள் சபிப்பார்கள், நல்லகதி அடையமாட்டார்கள்.
    ஒரு கர்மாவைச் செய்ய கடமை உள்ளவர்கள் வரிசைக் க்ரமமாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தனக்கு மேலுள்ளவன், செய்யும் நிலையில் இல்லாதபோது, அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் அந்தக் கர்மாவை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முறையில் செய்தே ஆகவேண்டும். அப்படிச் செய்யாமல் போனால் சாஸ்திரப்படி அவர்களுக்கு பாபம் - தோஷம் உண்டு.

    செய்யவேண்டியவனை விட்டு அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்வதனால் அவர்களுக்கு பாபம் ஏதும் இல்லை, சிறிதளவு புண்ணியம் உண்டு. ஆனால், வேறுயாராலாவது கர்மா செய்யப்பட்டுவிட்டாலும், செய்யவேண்டிய கடமை நிலையில் உள்ளவன் செய்யாமைக்கு அவனுக்கு அதற்குண்டான தோஷம் கட்டாயம் உண்டு.

    • ஔரஸ புத்ரன்(ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் விவாஹம் மூலம் முறைப்படி பிறந்தவன்).
      • பலர் இருந்தால் மூத்தவன்
      • இரட்டைப் பிள்ளைகளாய் இருந்தால் பிந்திப் பிறந்தவனே மூத்தவன்
      • பல மனைவிகள் இருந்து, எல்லோருக்கும் பிள்ளைகள் இருநதால், வயதில் பெரியவனே மூத்தவன்
      • ஸ்வீகாரம் செய்துகொண்டபின், ஔரஸன் பிறந்தாலும், ஔரஸனே கர்த்தா ஆவான்
      • ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து, மூத்தவளை வைத்துக்கொண்டு ஸ்வீகாரம் செய்துகொண்டபிறகு, இளையவளுக்குப் பிள்ளை பிற்நதால், தகப்பன் விஷயத்திலும், இளையவள் விஷயத்திலும், (இளையவளுக்குப் பிறந்த) ஔரஸனே கர்த்தா என்பதில் சந்தேகமேயில்லை. மூத்தாள் விஷயத்திலும் அவனேதான் கர்த்தா ஸ்வீகார புத்ரன் அல்ல.

    • பௌத்ரன் (பிள்ளையின் பிள்ளை)
    • பௌத்ரனின் பிள்ளைகள்
    • ஸ்வீகாரமாகக் கொடுக்கப்பட்ட பிள்ளை
    • ஸ்வீகாரம் சென்றவனின் பிள்ளைகள்
    • சொத்துக்கு உரியவனான பெண்வழிப் பேரன்
    • பெண்வழிப் பேரர்கள் யாராயினும்
    • பத்னி (மனைவி)
      • பலர் இருந்தால் மூத்தவள்
      • பிரியாமல் ஒன்றாக வாழும் குடும்பமானால் ஸஹோதரன்

    • ஸ்த்ரீகள் (அம்மா) விஷயத்தில் அவரவர் வயிற்றில் பிறந்த பிள்ளை, ஸந்ததி இல்லாவிடில் ஸபத்னி (மற்றொரு மனைவியின்) புத்ரன்.
    • (மனைவிக்கு) கணவன் (பர்த்தா)
    • துஹிதா -(புத்ரி - மகள்)
    • ப்ராதா - ஸஹோதரன்(ஸ்த்ரீகள் விஷயத்தில் பர்த்தாவுடைய(கணவருடைய) என்று சேர்த்துக்கொள்வேண்டும்)

    • ஸஹோதரன் பிள்ளைகள்
    • அஸோதர ப்ராதா (அப்பாவழி பெரிய-சித்தப்பா பிள்ளைகள்)
    • மேற்படி அஸோதரர்களின் பிள்ளைகள்
    • பிதா - அப்பா (மேற்கண்ட 15பேர் இல்லாதபோதுதான் அப்பாவிற்கு கடமை வருவதை கவனிக்கவும்)
    • மாதா - அம்மா
    • ஸ்நுஷா - மருமகள்
    • பௌத்ரீ - பிள்ளையின் பெண்
    • தௌஹித்ரீ - பெண்ணின் பெண்
    • பௌத்ரஸ்ய பத்னி (பிள்ளைவழி பேரனின் மனைவி)
    • தத்புத்ரி - பிள்ளைவழிப்பேரனின் பெண்
    • தத்தனுடைய பத்னி (ஸ்வீகாரம் போனவன் மனைவி)
    • பகிநி (ஸஹோதரி)
    • பாகிநேய: (மருமான்)
    • ஸபிண்ட: (ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி)
    • ஸமாநோதக: (தாய் வழியில் 3 நாள் தீட்டுள்ளவர்கள்)(ஒவ்வொருவரும் தாய்வழியில் தாயின் தந்தை - தாத்தா - கொள்ளுத் தாத்தா என மூன்று தலைமுறைக்கு தர்பணம் செய்வார். அந்த வம்சம் ஸமாநோதகர்கள் எனப்படும்)

    • மாத்ரு ஸபிண்ட: (அடுத்து தாய்வழியில் 7 தலைமுறைக்கு உட்பட்டவர்கள்)
    • மேற்படி 7 தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஸமாநோதகர்கள்
    • ஜாமாதா (மாப்பிள்ளை)(மேற்சொன்ன 29 விதமான சொந்தங்கள் இல்லாதவருக்கே மாப்பிள்ளை கர்மா செய்ய கடமை உள்ளவர் ஆவார். ஆனால் இக்காலத்தில் மேற்சொன்ன அனைவரையும் விடுத்து மாப்பிள்ளையைக் கொண்டு கர்மா செய்வது அதிகரித்து வருகிறது. அது சாஸ்திர ஸம்மதம் ஆகாது.)

    • ஸகா (தோழன்)
    • தனஹாரீ (சொத்தை அடைபவன்)


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Daughter's son (Tauhitran)

      Dear Swamin

      Adyen Dasan. Thanks for your reply.

      Regards

      ranga

      Comment

      Working...
      X