Could you please explain more about the ekan or othan what exactly is done on that day .I have seen the brahmin makes his own food and eats and goes away and no one is supposed to see him ...Just curious to know what exactly it is .different people say different things about it .they make a doll of rice simulating the dead person and ask the brahmin to sit in front of it and chant mantra's as "pretha" and switch off the lamp by blowing it off .... please let me know what exactly is done and why is it for ?and why only karta's are allowed to see this ?also when the 4 + 1 ( vishnu, viswadevar,pitrus and pretham) other leaf i do not remember people eat why no one is allowed to see
Announcement
Collapse
No announcement yet.
Ekothistam
Collapse
X
-
-
Re: Ekothistam
ஶ்ரீ:
அடியேன் கேட்டுக்கொண்டதற்கிணங்கள சிரமம் எடுத்துக்கொண்டு உறுப்பினராகி, இந்தக் கேள்வியை இங்கே எழுப்பியதற்காக அனைத்து உறுப்பினர்கள் சார்பில் தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போதைக்கு சற்றுச் சுருக்கமாக பதில் தருகிறேன். இந்த பதிலைக்கொண்டு மேலும் கேள்விகள் எழுமானால்
மீண்டும் விரிவாக பதில் தருகிறேன்.
ஆன்மாவை இழந்த சரீரததிற்குச் சவம் என்று பெயர்.
சரீரத்தை இழந்த ஆன்மாவிற்கு ப்ரேதம் என்று பெயர்.
அழியக்கூடிய சரீரத்தை அழுகி, க்ருமிகள் உருவாகி பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் இருக்கவே
தஹனம் செய்யப்படுகிறது.
சரியான ப்ரயோகம் மந்திரம் தெரிந்தவர்கள் இருந்தால் (தற்போது யாருமில்லை) அஸ்தி எனப்படும்
வேத மந்திரம் ஊரிய ப்ராஹ்மண எலும்பைக்கொண்டு ஒரு சரீரத்தை ஏற்படுத்தி, அதில்
சரீரத்திற்காக அல்லாடும் ஏதாவது ஒரு ப்ரேதத்தை செலுத்தி கெட்ட செயல்களுக்குப் பயன்படுத்தலாம்
என்பதால், ப்ராஹ்மண அஸ்தியை கவனமாக சேகரித்து, உரிய மந்த்ரங்களால் அதைச் சாந்தியடையச் செய்து,
(அஸ்தி சஞ்சயனம்) அதை, ஓடும் ப்ரவாக நதியிலோ, அல்லது ஸமுத்ரத்திலோ கரைத்துவிடுவார்கள்.
சரீரமற்ற ஆன்மாக்கள் யமனின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு, பாப புண்ணியங்களுக்குத் தக்க
சரீரத்திற்காக (யோநிக்காக) அலைந்துகொண்டிருக்கும்.
அந்த ப்ரேதத்தை பாஷாணம் என்னும் கல்லில் ஆவாஹனம் செய்து பத்து நாளும்
வாசோதக, திலோதக, பிண்டப்ரதான உபசாரங்கள் செய்வதால் தலை, முகம், கழுத்து,
மார்பு, வயிறு, இடுப்பு, துடை, முழங்கால், கணுக்கால், பாதம் என பத்து தினங்களில்
பத்துவித அவயவங்கள் ஏற்பட்டு, ஒரு முழுமையான சூக்ஷ்ம உருவம் உண்டாக்கப்படும்.
பத்தாம் நாள் சாந்தி ஹோமத்திலிருந்து ஒரு தீபம் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு,
11ம் நாள், யமனின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, யமனுக்கான மந்திரத்துடன் 32 கவளம்
பெரிய அக்னியில் ஹோமம் செய்து அவனைத் த்ருப்திசெய்து,
ஒத்தன் எனப்படும் ஒரு ஸ்வாமியின் சரீரத்தில் இந்த ப்ரேதத்தை ஆவாஹனம் செய்யப்பட்டு,
சரீரம் கிடைத்தைமையால் யமனால் ப்ரேதம் விடுவிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் அந்த ப்ரேதத்தை சுமந்துகொண்டிருக்கும் ப்ராஹ்மணருக்கு
அன்னமிட்டு உபசரித்து அவருக்கும், ப்ரேதத்துக்கும் த்ருப்தியை ஏற்படுத்தி விட்டு,
எரியும் தீபத்தை உணவருந்தும் வேளையில் வாயினால் ஊதி அணைப்பதால்,
யம உபாதையும், ப்ரேத உபாதையையும் அந்த ப்ரேதத்திடமிருந்து நீக்கப்படுகிறது.
இதனிடையே அந்த ப்ரேதத்தினிடம் உள்ள பாபங்களை தொலைப்பதற்காக,
ஏகோத்ர வ்ருத்தி, நவச்ராத்தம், வ்ருஷபஉத்சர்ஜனம், ஏகாதச ப்ராஹ்மணபோஜனம்,
பலவகையான தானங்கள் என பல க்ரியைகளால் ப்ரேதத்தின் பாபம் நிவ்ருத்தியாகி இருக்கும்.
இதனால் பித்ரு நிலையை அடையத் தயாராக இருக்கும் இந்தப்ரேதத்தை அடுத்த தினம்
மேலும் சில ஸம்ஸ்காரங்களைச் செய்து, பித்ருக்களுடன் ஐக்கியப்படுத்தும் நிகழ்ச்சியே
ஸபிண்டீகரணம் ஆகும்.
Re: Ekothistam
பிரேதத்தை சுமந்து கொண்டிருக்கும் பிராமணனின் நிலை என்ன ஆஹிறது சாப்பாடு முடிந்ததும்சரிரத்திர்க்கஹா அலைந்துகொண்டிருந்த ப்ர்ரேதம் பிராமணனின் உடலை விட்டு வெளிஎரிவிடுஹிறதாLast edited by soundararajan50; 25-10-12, 17:10.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 03:45.
Working...
X
Comment