யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம்
1. முன்னேற்பாடுகள்
தேவையான வஸ்த்துக்கள் மற்றும் ஏற்பாடுகள்:
விச்வேதேவர், பித்ரு என இரண்டு ஸ்வாமிகளை மட்டும் எழுந்தருளப்பண்ணி செய்யும் ப்ரத்யாப்தீக (2ம் ஆண்டு முதல் ப்ரதி ஆண்டு செய்யும்) ச்ராத்தத்திற்கு தேவையான மந்த்ரங்கள் மற்றும் ஏற்பாடுகள் வழங்கப்படவுள்ளன.
இது வைஷ்ணவ முறைப்படியான ப்ரயோகம். வடகலை தென்கலைக்கு உள்ள வித்யாஸங்கள் ஆங்காங்கே வழங்கப்படும். ஐயர் முறைப்படிக்கான வேறுபாடுகளை அறிந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்யலாம். தங்கள் தங்;;;கள் கைப்பட ஒரு பெரிய சைஸ் நோட்டில் டபுள் லைன் ஸ்பேஸ் விட்டு எழுதிக்கொண்டே வரவும்.
தர்ப முஷ்டி - 1
கர்தாக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு 3 பில் பவித்திரம்
புக்னங்கள் - 12
இரட்டை மர ஆல் (கிண்ணம்) (எள் அக்ஷதை வைத்துக்கொள்ள) - 1
ஒற்றை மர ஆல்கள் - 4 ப்ராக்தோயம், ப்ரோக்ஷணீ, ப்ரணீதி
குறிப்பு மர ஆல்களுக்கு பதிலாக பாக்கு மட்டைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பச்சை தொன்னைகள்: ஸ்வாமிகள் இருவருக்கும் சாப்பிடும்போது உபயோகத்துக்கு ஒவ்வொன்று தக்ஷிணை ஸமர்ப்பிக்க ஒவ்வொன்று
நெய் பாத்திரத்திற்கு ஒன்று ப்ரசாதத்திற்கு ஒன்று, வடை கரமதுக்கு ஒன்று ஆக 7 தொன்னைகள்.
ஹோமத்திற்கு: விராட்டி - 4, காய்ந்த சவுக்கு சுள்ளி 12 துண்டு. நல்ல நெய் 150 கிராம்,
அக்ஷதை 100 கிராம், எள் - 10 கிராம் கட்டைக் கரி 4 துண்டு
ஆராதனத்திற்கு: புஷ்பம், திருத்துழாய், சந்தனம், பச்சைப்பால், தீர்த்த பரிமளம் மற்றும் பெருமாள் பாத்திரங்கள்.
புண்யாஹ வாசனத்திற்கு: 2 நுனி இலை, அரிசி - 1 கிலோ, வெத்திலை, பாக்கு, பழம்
தேங்காய் -1.
பொது: கோமயம், இருந்தால் விஷ்ணுபாதம், 3 ஜாண் அளவில் 4 நுனி இலைகள் ஸ்வாமிகளுக்கு, வாத்யார் தர்பம் வைத்துக்கொள்ள -1, திருமண் பெட்டி, வெள்ளிச் சொம்பு, ஸ்தாலி, ஆசமன பாத்திரம்
ஸ்வாமிகளுக்கு: வேஷ்டி, உத்தரியம், யஜ்ஞோபவீதம், தீர்த்தத்திற்கு ஒரு சொம்பு, ஒரு ஸ்தாலி, வெத்திலை, பாக்கு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி இவற்றுடன் காலத்துக்கேற்ற கணிசமான தக்ஷிணை.
குறைந்தபக்ஷ தளிகை: பருப்பு, ஒரு கரமது, ஒரு கூட்டு, ஒரு தயிர் பச்சடி, ஒரு இனிப்புப் பச்சடி, வடை, அப்பம் அல்லது சொஜ்ஜியப்பம் அல்லது அதிரசம், தேங்குழல், துகையல், எள்ளுருண்டை, குழம்பு, ரசம், பாயசம், தயிர் இவற்றை தயார்செய்து வைக்கவேண்டியது. (ஆத்து வழக்கம் தெரிந்தவர்கள் வழக்கப்படி 3, 5, 7 வகைகளில் செய்யவும்).
அடுத்த தலைப்பு வெளியிடுவதற்கு முன், வழங்கப்பட்டுள்ள தலைப்பில் உள்ள சந்தேஹங்கள், விடுபட்டுப்போனவை, நிறை, குறைகளை பதிவு செய்யவும்.
Comment