Announcement

Collapse
No announcement yet.

பித்ரு ச்ராத்தம் - SARMA SASTRIGAL'S ADVICE

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பித்ரு ச்ராத்தம் - SARMA SASTRIGAL'S ADVICE

    Sarma Sastrigal

    ’மாமா, எங்காத்தில் எங்க மாமணாருக்கு அடுத்த மாதம் ச்ராத்தம் வருகின்றது.
    ஒரு சந்தேகம். அதில் மூத்த பிள்ளை ஹிரண்யமாகத்தான் அவர் ஊரில்
    செய்ய முடியும் எனும் நிலமை. அடுத்த தம்பி இங்கு ஹோமத்துடன் ச்ராத்தம்
    செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்..கூடாது என உறவினர் ஒருவர் குழப்புகிறார்.
    அவர் சொல்லுகிறார், ஒருவர் ஹிரண்யமாக செய்தால் மற்ற தம்பிகள்
    ஹிரண்யமாகத்தான் செய்யவேண்டும் என.. ..” சென்னை சின்மயா நகரில்
    வசிக்கும் ஒருவர் கேட்கிறார்.
    இந்த மாதிரி சந்தேகம் பலருக்கு இக்கால கட்டத்தில் வருவதை அவ்வப்போது
    கேள்விப்படுகிறேன்.
    உதாரணத்திற்கு ஒருவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என
    வைத்துக் கொள்ளுவோம். பிள்ளைகள் எல்லோரும் தனித்தனியாக
    வாழும்போது தனித்தனியாகத்தான் ச்ராத்தம் செய்யவேண்டும்.
    (தாயார் உயிருடனிருந்தால் அவள் இருக்குமிடத்தில் பித்ரு ச்ராத்தம்
    எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது வாக்கு).
    சரி, உங்கள் விஷயத்துக்கு வருவோம்.
    பிள்ளைகளில் யாராவது ஒருவர் எதாவது நிர்பந்தத்தினாலோ அல்லது
    அதிக ச்ரத்தை இல்லாத காரணத்தினாலோ ஹிரண்யமாக செய்தால்
    அதற்காக அதை ‘காப்பி’யடித்து மற்றவர்களும் ஹிரண்யமாக செய்ய
    முடிவு எடுக்கக் கூடாது. தோஷம் வரும். சந்தேகம் வேண்டாம்.
    ச்ராத்தத்தை எப்படியாவது பார்வண ரூபாமாக (ஹோமத்துடன்)
    செய்யத்தான் முயற்சி செய்யவேண்டும்.
    ஹிரண்யமாக செய்பவரைபற்றி யோசிக்காமல் “நான் எங்க அப்பாவிற்கு
    ஹோமத்துடந்தான் ச்ராத்தம் செய்வேன், அதைத்தான் சாஸ்திரம் சொல்லியுள்ளது..”
    என்று தீர்மாணம் செய்வதுதான் உசிதம். சட்டம்.
    ஹோமத்துடன் ச்ராத்தம் செய்வதனால் யாருக்கெல்லாம் திருப்தி கிடைக்கும்
    தெரியுமா ? பாருங்கள் கீழ்கானும் பட்டியலை :
    1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்,

    2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே&தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்,

    3. ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான்,

    4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி
    அடைகின்ற தேவர்கள்,

    5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி
    பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்,

    6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்,
    இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ச்ராத்தத்தில்
    பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.
    இப்போ சொல்லுங்கள், ஹோமத்துடன் செய்யயாமல் ஹிரண்யமாக செய்தால்
    இவைகள் கிடைக்குமா? யோசிக்கவும்.
    உடல் நிலமை தள்ளாமை காரணமாகவோ, முதுமையின் ச்ரமத்தினாலோ
    ஹோமத்துடன் செய்யமுடியவில்லை என்றால் அது விஷயம் வேறு.
    ச்ராத்தத்தை எப்படியாவது விதிப்படி செய்யத்தான் வேண்டும் என்பதில்தான்
    நமது கவனம் இருக்க வேண்டும். ச்ராத்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன்.
    இதில் சந்தேகமே வேண்டாம். குதர்க்க வாதம் கூடாது. ச்ராத்தம் செய்யாமல்
    விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற
    அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம்
    என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.
    பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்கவேண்டாம். பித்ருக்கள்
    கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நமக்கு தோஷம் ஏற்படும்.
    பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம்.
    வம்சவிருத்தி பாதிக்கலாம்



  • #2
    Re: பித்ரு ச்ராத்தம் - SARMA SASTRIGAL'S ADVICE

    A very necesssry clarification. For the parents who brought us to this world, gave us their everything, if we can not spare two days in a year to do Srardham, I think our existance is a waste.
    Thank you Sir, for a nice post.
    Varadarajan

    Comment

    Working...
    X