Announcement

Collapse
No announcement yet.

Is it true? Tarpanam, Shradham should not be done for certain period after kalayanam?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Is it true? Tarpanam, Shradham should not be done for certain period after kalayanam?

    Is it true? Tarpanam, Shradham should not be done for certain period after kalayanam?
    First I am giving the answer in Tamil which I have already given.
    நாந்தி செய்த க்ருஹத்தில் ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம், பஞ்சதசம் (ஷோடசம்), ப்ரத்யாப்திகம் இந்த ஐந்து தவிர 3 மாஸம் வரையில் தர்சம், ஸங்க்ரமணம், மந்வாதி, யுகாதி வகையறாக்களுக்கு அன்ன ச்ராத்தம் பண்ணக்கூடாது.
    கர்த்தாவுக்கும் இந்த விதிதான்.
    தினந்தோறும் செய்யும் ஸ்நாநாங்க தர்பணத்தில் விவாஹமான ஒரு வருஷத்திற்கும், உபநயனமானால் 6 மாஸத்திற்கும், சௌளமானால் 3 மாஸத்திற்கும் நாந்தி செய்த கர்த்தா எள்ளையும், தர்பையையும் உபயோகிக்கக்கூடாது.
    "நைமித்திகஞ்ச, காம்யஞ்ச திலைரேவ விதீயதே" - என்பது சாஸ்த்ரம்.


    இந்த சாஸ்திரத்தைத் தவறாக புரிந்துகொண்டவர்கள்: கல்யாணம் நடந்த ஆத்தில், ஒரு வருடத்திற்கு ஆத்தில் ச்ராத்தம், தர்பணம் பண்ணக்கூடாது என்று சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதனால் வெளியில்போய் பண்ணுகிறோம் என்று சிலரும், ஒரு வருடத்திற்கு ச்ராத்தம், தர்பணமே பண்ணவதில்லை என்று சிலரும் கடைபிடிக்கின்றனர்.


    உண்மையில் சாஸ்த்ரம் சொல்வது என்ன? மேற்கண்ட விஷயத்தை ஒருமுறைக்கு இரு முறை படித்தாலே சாதாரணமாக அனைவருக்கும் புரியும்.
    ஆத்ய மாஸிகம் மற்றும் ஆவ்ருத்தாத்ய மாஸிகம் என்பது 11ம் நாள் செய்யப்படுவது.
    ஷோடசம் என்பது ஸபிண்டீகரணத்தில் செய்யப்படுவது, ப்ரத்யாப்திகம் என்பது வருடா, வருடம் செய்யும் ச்ராத்தம் - இவை தவிர என்ற சப்தத்தால் பின் சொல்லப்பட்ட நிபந்தனை இவற்றுக்குக் கிடையாது என்பது பொருள்.
    மேலும் நிபந்தனை எவற்றுக்குப் பொருந்தும் என்பதாக தர்சம் (அமாவாசை), ஸங்க்ரமணம், மந்வாதி, யுகாதி இவை மாதப்பிறப்பு வருடப்பிறப்புகள் இவற்றுக்கு மட்டும் அன்ன ச்ராத்தம் செய்யவேண்டாம் என்று நிபந்தனை. இவற்றில் தர்சம் என்ற அமாவாசை தர்பணத்தை மட்டும்தான் பெரும்பாலானோர் செய்கின்னறனர். அதையும் ஒரு சதவிகிதத்தினர் கூட அன்ன ரூபமாக பண்ணாமல் தில தர்பணமாகத்தான் பண்ணுகிறார்கள். திருமண வைபவம் நடந்த க்ருஹத்திற்குச் சொன்ன நியதியை அனைவரும் ஏற்றுக்கொண்டு அன்ன ரூபமாகப் பண்ணவதையே விட்டுவிட்டார்கள். மேலும், நாந்தியே அன்ன ரூபமாகப் பண்ணவேண்டியது, அதையும் ஹிரண்ய ரூபமகாத்தான் பண்ணுகிறார்கள்.


    தினந்தோறும் செய்யும் ஸ்நாநாங்க தர்பணத்தில் என்ற விதியும் இன்று பெரும்பாலோருக்குப் பொருந்தாது. ஏனென்றால், ஸ்நாநாங்க தர்பணம் என்று ஒரு
    கடமை இருப்பதே பெரும்பாலோருக்குத் தெரியாது. எனவே தர்பணம் என்றாலே மாதா மாதம் பண்ணும் அமாவாசை தர்பணம் என பொருள் கொண்டு, ஒரு வருடத்திற்கு எள், தர்பம் உபயோகிக்கக் கூடாது என்று பண்ணாமல் விட்டு விடுகிறார்கள்.


    அடுத்ததாக ஸம்ஸ்கருதத்தில் கூறப்பட்டுள்ள "நைமித்திகஞ்ச காம்யஞ்ச திலைரேவ விதீயதே" என்பதால், காலா காலத்தில் வரும் கர்மாக்களான, அமாவாசை, மாதப்பிறப்பு, க்ரஹணம் போன்றவற்றைத் திலைரேவ என்பதால் எள் கொண்டுதான் பண்ணவேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தப்பட்டுள்ளது.


    ஒன்வே என்று தெரியாமல் வந்துவிட்டேன் என்றாலும் தெரிந்துகொள்ளாதது குற்றமே அன்றி, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதுபோல் சாஸ்திரத்தை சரிவர புரிந்துகொள்ளாமல் செய்தத தவறுக்காக சாஸ்திரத்தை மீறிய குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணரவேண்டும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X