Announcement

Collapse
No announcement yet.

BHUMSUVANAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHUMSUVANAM.

    06/03/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.*


    *இதில் சில முக்கியமான ஹோமங்கள் நாம் செய்கிறோம் சில தேவதைகளைக் குறித்து. ஒரு குழந்தை உற்பத்தி செய்து அதை நல்ல முறையில் நமக்கு அடைவதற்கு அந்த தேவதைகள் எவ்வளவு அனுகூலமாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்*


    *கர்ப்ப தோஷங்கள் எதுவும் இல்லாமல் ஒரு முழுமையான நல்ல குழந்தையை இந்த ஐந்து தேவதைகள் நமக்கு அனுக்கிரகம் செய்து கொடுக்கிறார்கள், என்று சொல்லப்பட்டிருக்கிறது.*


    *இதனால் அந்த குழந்தை நமக்கு எந்தவிதமான அனாஆரோக்கியமும் இல்லாமல், நமக்கு கிடைக்கின்றது என்றால் இந்த தேவதைகளின் அனுகிரகம் தான்.*


    *நாம் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவு தவறுகள் செய்கிறோம். அதிலும் இந்த கர்ப்பம் விஷயத்தில் நிறைய தவறுகள் செய்கிறோம். இந்த தவறுகள் எல்லாம் நம்முடைய குழந்தைகளை பாதிக்கும் அல்லது அந்தப் பெண்ணை பாதிக்கும். அந்த பாதிப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதற்காக தான் இந்த ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது.*


    *ஸ்திரீயினுடைய கர்ப்ப தோஷம் என்னென்ன என்பதை பார்த்தோம். புருஷர்கள் மூலம் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன என்பதை ஜோதிட சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*


    *அந்த கர்ப்ப தோஷத்தினால் நாம் என்ன விதமான பலன்களை அடைவோம் என்பதை முதலில் காண்பித்து, என்ன என்ன கர்ப்ப தோஷங்கள் என்பதையும் காண்பிக்கிறது.*


    *_இந்த கர்ப்ப தோஷங்கள் மூலம் ஒரு புருஷன் ஆனவன் என்ன விதமான கஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதை சொல்கின்ற பொழுது, புருஷர்கள் செய்யக்கூடியது ஆன சில தவறுகளினால், என்ன விதமான சிரமங்களை ஒவ்வொரு ஆணும் அனுபவிக்க வேண்டி வரும் என்பதை சொல்கின்ற பொழுது, அங்கம் இல்லாமல் பாதி குழந்தையாக பிறக்கும், அல்லது இரண்டு குழந்தைகள் ஒட்டியே பிறக்கும், திருமணம் செய்துகொண்டு

    தன்னுடைய மனைவியின் மூலம் ஒரே ஒரு குழந்தையை அடைந்து, அந்தக் குழந்தையை இழக்க வேண்டி வரும். அல்லது தன்னுடைய மனைவியின் இடத்திலே குழந்தையை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். ஒரே ஒரு ஆண் வாரிசை மட்டும் பெறக்கூடிய சூழ்நிலை வரும். அல்லது ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பெறக்கூடிய நிலைவரும். அல்லது இன்னும் ஒரு ஆண் துணையின் மூலம் குழந்தை பெற வேண்டி வரும். இதெல்லாம் கர்ப்ப தோஷங்கள் ஒரு ஆண் மூலம் அனுபவிக்க வேண்டி வரும் என்று காண்பிக்கிறது._*



    *இவை அவ்வளவையும் இன்றைய நாட்களில் நாம் பார்க்கலாம். காரணம் நிறைய தவறுகள் செய்கிறோம் இன்றைய வாழ்க்கை முறையில் கர்ப்பம் விஷயமாக என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.*


    *_எப்படி வந்தால்என்ன அனைத்தும் நம் குழந்தைதானே என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அனைத்தையும் குழந்தை என்று சொல்லலாமே தவிர புத்திரன் என்று சொல்ல முடியாது. தனக்கும் தன் மனைவிக்கும் சரியான காலத்தில் கர்ப்பாதானம் செய்து, இந்த பும்ஸுவனம் செய்து பிறக்கக்கூடிய குழந்தைக்கு புத்திரன் என்ற பெயர். அப்படி அல்லாமல் மற்ற வழிகளில் நாம் குழந்தையை சம்பாதிக்கிறோம் என்றால், நம்முடைய கடைசி காலத்திற்காக என்றுதான் ஆகுமே தவிர, புத்திரன் என்கின்ற முழுமையான ஸ்தானத்தை பெற முடியாமல் போகும். இதுதான் தர்ம சூட்சுமமும் என்று பெயர்._*


    *அப்படி இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், அந்தக் காலத்தை நமக்கு முக்கியமாக காண்பித்து, இந்த பும்சுவனத்தில் அந்தக்கால தேவதைகளுக்கான ஆகுதிகளைக் கொடுத்து அந்த ஹோமத்தை செய்யவேண்டுமென்று காண்பித்திருக்கிறார்கள். நாம் பும்சுவனத்தில் செய்யக்கூடிய தான ஹோமத்திற்கும், சீமந்த த்தில் செய்யக்கூடிய தான ஹோமத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலும் ஒரே விதமான மந்திரங்களைக் கொண்டு ஒரே விதமான அக்னியில் செய்யப்படுகிறது.*


    *ஆனால் அந்தக் கால தேவதைகள் நமக்கு கொடுக்கக்கூடிய பலன்களில் வித்தியாசம் இருக்கிறது. பும் சுவனத்தில் செய்யக்கூடிய ஹோமத்தில் ஒரு விதமான பலன்கள், சீமந்த த்தில் செய்யக்கூடிய ஹோமத்தில் ஒரு விதமான பலன்கள் கிடைக்கிறது. அந்தந்த காலத்தில் நாம் செய்தால்தான் பலன்களை நாம் முழுமையாக அடைய முடியும்.*


    *அந்த குழந்தையானது ஆரோக்கியமான நிலையில் உற்பத்தி ஆகும். தாயாருக்கு எந்தவிதமான சிரமங்களும் ஏற்படாமல், அந்த குழந்தையானது கர்ப்பத்தில் வளரும். அந்தக் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் தாயிடமிருந்து கிடைக்கின்றது. அந்த குழந்தைக்கு அக்கம்பக்கத்தில் இருந்து எந்தவிதமான கிருமிகள் மூலமும் நோய் தொந்தரவு இல்லாமல் இருக்கும், தேவையான அளவு நீர் இருக்கும். கர்ப்பம் வலுவாக இருக்கும். சுகப்பிரசவம் ஆக பிறக்கும். அந்தக் குழந்தை பூமியில் வந்து விழுகின்ற வரையிலும் அந்த தேவதைகள் துணைபுரிகின்றனர்.*


    *ஐந்து தேவதைகளும் கால தேவதைகள் அதில் பிரதானமான தேவதை, தாதா என்கின்ற தேவதையும், அக்னி என்கின்ற தெய்வம்தான். இந்த இரு தெய்வங்களையும் பிரதானமாகக் கொண்டு தான் மற்ற தேவதைகளும் நமக்கு நல்ல வாரிசை கொடுக்கிறது.*


    *புத்திரன்/புத்திரி என்று சொல்லக்கூடிய தான வாரிசோ நமக்கு கிடைக்கின்றது என்றால் இவ்வளவு தெய்வங்களின் உடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று வேதம் நமக்கு காண்பிக்கிறது. ஒரு யாகத்தில் செய்யக்கூடிய தான மந்திரத்தை தான் இந்த பும்ஸவனத்தில் மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.*


    *அதர்வ மந்திரம் என்று பெயர். குழந்தைகள் ஒருவருக்கு ஏற்படவே இல்லை, அதாவது குழந்தையே உற்பத்தி ஆகவில்லை என்றால், அதற்காகவே இந்த மந்திரங்களை தனியாக அத்தீயனம் செய்து ஜபம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.*


    *இந்த மந்திரங்களை மாத்திரமே தினமும் ஜபம் செய்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்து கொண்டு வந்தால் நமக்கு நல்ல குழந்தைகள் பிறக்கும். அப்படி நாம் எல்லாம் செய்து கொண்டு வந்து நமக்கு கர்ப்பத்தில் ஒரு குழந்தை உற்பத்தி ஆகவில்லை சுபாவமாக என்று இருந்தால், அதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.*


    *இதைத்தான் ஜோதிடம் நமக்கு காண்பிக்கிறது. ஜோதிடம் வேதம் கருடபுராணம் இந்த மூன்றையும் வைத்து நாம் தீர்மானிக்க வேண்டும். ஒரு குழந்தை ஒருவருக்கு பிறக்கவில்லை என்றால், அதற்கு இது போன்ற மந்திரங்களை மகரிஷிகள் நமக்கு காண்பித்ததை ஜெபம் செய்ய வேண்டும், மந்திரங்களை ஹோமம் செய்ய வேண்டும், இந்த மாதிரியான அனுஷ்டானங்களை செய்து கொண்டு வரவேண்டும்.*


    *அப்பொழுதும் நமக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கர்ம விபாஹா அத்தியாயத்தில் கருடபுராணம் நமக்கு காண்பிக்கின்றது. அதாவது புருஷன்/பெண் இடத்திலுள்ள குறைபாடா, அல்லது கர்ப்பத்தில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா, கர்ப்பத்தில் குழந்தை உற்பத்தி ஆகி உடனே வெளியே வந்து விடுகிறது, அப்படி இருக்கின்றதா, அல்லது உற்பத்தியாகி எப்போது கரைந்தது என்றே தெரியவில்லை, இப்படி எல்லாம் என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொண்டால், அதற்கான உபாயங்களை நமது சாஸ்திரங்கள் மிகவும் சுலபமாக காண்பிக்கின்றது.*


    *_அந்த உபாயங்களை நாம் தொடர்ந்து செய்துகொண்டு வந்தால், எந்தவிதமான மருத்துவ துணையும் இல்லாமல், நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை நாம் பெற முடியும் என்பதை மகரிஷிகள் நமக்கு காண்பித்து கொடுத்துள்ளனர். அந்த மந்திரங்களின் பெருமையை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்._*
Working...
X