சுப - அசுப மந்த்ர அர்த்தம் - அரிய புத்தகம் - பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது
ஸ்ரீ:
கீழ்க்கண்ட புத்தகத்தில் கண்டுள்ள விஷயங்கள் மீண்டும் அப்படியே (சில பெரிய சொற்றொடர்களை படிப்பவர் வசதிக்காக பிரித்துத்) தட்டச்சு செய்யப்படுகிறது. சில கடின பதங்களுக்கு ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. - என்.வி.எஸ்.
ஆமுகம்
வேதமே நம் தைவமாகும் அதில் ச்ரத்தை இல்லாதவனே நாஸ்திகன். வேதார்த்தங்கள் எளிதில் தெரியக்கூடியவை அல்ல. கூடார்தங்கள் (மறை பொருள்) பொருந்தப் பெற்றவை. மேலோடு படித்துவிட்டு அதில் ரஸமில்லை என்றோ, ஸந்தர்பத்திற்கு ஒட்டவில்லை என்றோ, அவச்யமில்லாததைச் சொல்வதாயோ (சொல்வதாகவோ) அதை அலக்ஷpயம் செய்யக்கூடாது. ‘நாதன் வேதமயன்" என்னுமாப்போல பகவான் தம்மை, மந்த்ரம், ப்ரணவம், ரிக், ஸாமம், யஜுஸ், கர்மா என்று கூறுகிறார்.
இது ஒருவராலும் எழுதப்படாததென்று (அபௌருஷேயம்) மஹிமை பெற்றுள்ளது. ஸகுண ப்ரஹ்மத்திற்கு (குணங்களுடன் கூடிய ப்ரஹ்மத்திற்கு) ஒரு கால் காலம் கல்பிக்கலாமோ என்னமோ, இது பகவானின் உச்வாஸ (உள் ஸ்வாஸம்) நிச்வாஸமான (வெளி ஸ்வாஸம்) ப்ராண வாயுவாய், பகவானின் சரீரத்திற்கு ஆகிறது. அநாதி (தொடக்கம்-முடிவு அற்றது), நித்யம் (என்றும் நிலைத்திருப்பது). வேத சாஸ்த்ரார்த க்ரஹணத்தில் (அர்த்தம் கொள்வதில்) நம் புக்தி, யுக்திகளை (அல்ப அறிவாற்றலை) கலப்பவன் நாஸ்திகன்.
ஒரு பாலகன் சது:சாஸ்த்ர பண்டிதரிடம் அக்ஷரப்யாஸம் செய்யப்புகுங்கால், ‘அவர் சொல்வது பிசகு" என்று சொன்னால் - எப்படி அது அஸம்பாவிதமோ (ஏற்றுக்கொள்ள இயலாதது), அப்படித்தான் அஜ்ஞர்களான (ஒன்றும் அறியாதவர்களான) நாம், அதன் (வேதத்தின்) கௌரவம் தெரியாது, அது விஷயத்தைப் பற்றி குறை கூறுவதாகும்.
எப்படிப்பட்ட மேதாவியும், மஹரிஷியாக இருந்தாலும் சரி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப்போல் ஈஷத்தாவது (இம்மியாவது) தம் புத்தியைக்கொண்டு எழுதிவிட முடியாது என்பதே, அது அபௌருஷேயம் என்பதற்கு அத்தாக்ஷpயாகும் (ப்ரமாணம்).
யஜூர்வேத இந்த 80 ப்ரச்னங்களும், கார்யபத்ய, ஆவஹநீய, தக்ஷpணாக்நிகளான மூன்று அக்நிகளில் செய்யவேண்டிய கர்மாக்களைக் கூறுகின்றன. இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், ஆபஸ்தம்பர் ஸ_த்ரங்கள் செய்துள்ளபடி, ஜாதகர்மாதி ஸம்ஸ்காரங்களிலும், இதில் வரும் ச்ராத்தாதிகளிலும், ஒரே அக்நியால் ஸாத்யமான (முடியக்கூடிய) கர்மாக்கள் ஆதலால் இதற்கு ‘ஏகாக்நி காண்டம்" என்ற பெயருமுண்டு. இந்த 80 ப்ரச்னங்களுக்கும் ஆபஸ்தம்பர், கல்ப (ச்ரௌத) ஸ_த்ரம் எழுதியுள்ளார். இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், அநுஸ்யூதமாக க்ருஹ்ய ஸ_த்ரம் எழுதியிருக்கிறார். அது நம்மாலும் (நே.ஈ.வேங்கடேச சர்மா) மொழி பெயர்கப்பட்டு அச்சாகியிருக்கிறது. இந்நு}லில் நாமும் சிற்சில இடங்களில் ஸ_த்ரகாரர் விதித்துள்ளார் என்று வரைந்துள்ளோம். இது இந்த யஜுர் ஸாகையைச் சேர்ந்ததா என்று சங்கிப்பர் (ஸந்தேஹப்படுவர்) சிலர். „மநு… தம் ஸ்ம்ருதியில் ஸ்த்ரீதர்ம ப்ரகரணத்தில் ஸ்த்ரீகளுக்கு சுத்திக்குறைவு ஸ்வாபாவிகம் (இயற்கையானது) என்று சொல்லுமிடத்தில் ‘யந்மே மாதா ப்ரலுலோபசரதி" என்று இதில் வருக் வாக்யத்தை அநுவாதம் (தம் வாதத்திற்கு துணை) செய்கிறார். ஆகையால் ஸம்சயம் (ஸந்தேஹம்) நிவர்த்தியாகிறது.
வேத உச்சாரணத்தில் ஸ்வரம் பிசகினால் அர்த்தம் அநர்த்தமாகி விபரீத பலன் ஏற்பட்டுவிடும். த்வஷ்டா (எனும்) தேவன், இந்த்ரனை கொல்லக்கூடிய புத்ரகாமனாய் (புத்ரனை விரும்பியவனாய்) ‘இந்த்ர சத்ரு: வர்தஸ்வ ஸ்வாஹா" என்றதை அபஸ்வரமாய்ச் சொல்லி ஹோமம் செய்ய, (இந்த்ரனைக் கொல்லக்கூடிய புத்ரனுக்கு பதிலாக) இந்த்ரனால் கொல்லப்டக்கூடிய புத்ரன் ஜநித்ததாகச் வேதம் உத்கோஷிக்கிறது.
‘விப்ரன் (ப்ராஹ்மணன்) வீட்டிற்போய் தக்ரம் (மோர்) குடித்தான்" என்கிறான். பத அர்த்தம் தெரியாதவன் இவன் சொன்ன மாதிரியிலிருந்து (சொன்ன விதத்திலிருந்து) அபக்ஷ;ய போஜ்யம் (சாப்பிடக்கூடாத வஸ்துவை சாப்பிட்டதாக) செய்ததாக க்ரஹிக்கிறான் (நினை;கிறான்).
‘வெள்ளியோஓஓஓஓஓஓஓடு வெள்ளி - தீபாலிக்கு தீபாலி" என்று முந்தையதை நீட்டியும் பிந்தையதை சீக்ரம் சொல்வதாலேயே தெலுங்கன் போன்ற தமிழ் தெரியாதவன் ப்லுதமாய்ச் சொன்ன வெள்ளி வெகு காலத்திற்கு ஒரு முறை வருவது போலவும், தீபாவலியை வேகமாய்ச் சொன்னதால் அதிசீக்ரத்தில் வருவது போலவும் த்வநிப்பது லோக வ்யவஹாரத்திலும் (அன்றாட நடைமுறையில்) கவனிக்கலாம்.