40 ஸம்ஸ்காரங்களின் பெயர்கள்
ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40 ஆகும். அவை கர்ம ரூபம். 8 ஆத்ம குணங்கள் இருக்கின்றன. ஆக 48ம் சேர்ந்தே ஒரு ஜீவன் நற்கதியடைய காரணமாகின்றன. கௌதமாதிகள் 48 ஸம்ஸ்காரமென்றே பிரித்துக்காட்டாது கூறுகின்றனர்.
கர்பாதானம், பும்ஸவநம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அந்நப்ராசநம், சௌளம், உபநயனம், ப்ராஜாபத்யம், ஸெளம்யம், ஆக்நேயம், வைச்வதேவம் என 4 வேத வ்ரதங்கள், ஸ்நாநம்(ஸமாவர்தனம்), விவாஹம், பஞ்ச மஹா யஜ்ஞங்கள் ஆக 19. 7 பாக யஜ்ஞங்கள், 7 ஹவிர் யஜ்ஞங்கள், 7 ஸோமஸம்ஸ்தை (யஜ்ஞங்கள்) ஆக 21. தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம், பூத யஜ்ஞம், ப்ரஹ்ம யஜ்ஞம் என்பதே பஞ்ச மஹா யஜ்ஞங்களாம். அஷ்டகா, அந்வஷ்டகா, பார்வணம், ச்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என 7 பாக யஜ்ஞங்கள். அக்நியாதானம், அக்நிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற 7ம் ஹவிர் யஜ்ஞங்கள். அக்நிஷ்டோமம், அத்யக்நிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என 7 ஸோம யஜ்ஞங்கள். ஒவ்வொரு த்விஜனுக்கும் உபநயனம் உள்ள வரை ஸம்ஸ்காரங்கள் அத்யாவச்யமாகும். நைஷ்டிக ப்ரஹ்மசாரியாய் இருக்க உத்தேசித்திருப்பவன் விவாஹாதிகளில் அதிகாரமில்லையாதலால் இவற்றுள் சில ஒரு ஜன்மத்தில் ஒரு தரமும், சில பன்முறைகளும், சில ப்ரதிதிநம் அநுஷ்டிக்கப்படவேண்டும்.
ஸ்த்ரீகளுக்கும் ஜாதகர்மம் முதல் உபநயனம் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் உண்டு. அவர்களுக்கு விவாஹமே உபநயன ஸ்தானம். பர்தாவோடிருத்தலே குருகுலவாஸ துல்யமாம் (ஸமம்).
Comment