ப்ரஹ்மசாரி அநுஷ்டானம்
உபநயனத்தில் ப்ரஹ்மோபதேசம் ஆனது முதற்கொண்டு, ப்ராஜாபத்யாதி
நான்கு காண்டருஷிகளுக்கும் உபக்ரம உத்ஸர்ஸனம் எனப்படும் அஷ்ட வ்ரதம் செய்து முடிக்கும்வரை
ஒருவன் ப்ரஹ்மச்சாரிக்குரிய அநுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வ்ரதத்தன்று சங்கல்பத்தில் : ப்ரஹ்மச்சர்ய ஆச்ரமோக்த ப்ராத: ஸ்நாந, ஸந்தியா வந்தன,
ஸமிதாதான, குருகுலவாஸ, ப்ரஹ்ம யஜ்ஞ, பிக்ஷாசரண, மெளஞ்சி, மேகலா, அஜின, தண்ட தாரண என்பவைகளை
அநுட்டியாத தோஷத்திற்காக ப்ராயச்சித்தம் சொல்லப் பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அனைத்தையும்
ஒரு ப்ரஹ்மச்சாரி நித்யம் அநுஷ்டிக்கவேண்டும் எனத் தெரிகிறது.
தவிர, வாசனாதி திரவியங்களைப் பூசிக்கொள்வது, புஷ்பம், சந்தனம், மாலை போன்றவற்றை உபயோகிப்பது,
உணவில் உப்பு, காரம் நிறைவாகச் சேர்த்துக் கொள்வது, பெண்களுடன் பேசுவது போன்றவைகளையும்
தவிர்க்கவேண்டும் எனத் தொரகிறது.
தினமும் ஸமிதாதானம் பண்ணும் ப்ரம்ஹசாரியை எக்காரணம் கொண்டும் காலதேவன் விதி
முடிந்தாலும் பிடிக்கக் கூடாது என்றும், எந்த ப்ரஹ்மச்சாரி என்றைய தினம் ஸமிதாதானம்
செய்யவில்லையோ அன்றைய தினம் அவனை ம்ருத்யு எனப்படும் காலதேவன் விதிவசமானால் பிடித்துக்
கொள்ளலாம் என்று நாரதர் பெரமாளிடம் வரம் பெற்றுள்ளார் எனவும் வேதத்தில் காணப்படுகிறது.
எனவே ப்ரஹ்மச்சாரியாக மரணம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட:டு, தினமும்
ஸமிதாதானம் பண்ணுவது நன்று.
ப்ராதஸ்ஸ்நாந ஸந்தியாவந்தனங்கள் க்ருஹஸ்தர்களைப் போலவே பண்ணவேண்டும்.