பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை தர்ம சாஸ்திரம் வகுத்துள்ளது.
* கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப் பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.
* கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.
* வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.
* சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில், சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.
* உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம்
செய்யக்கூடாது. பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.
-நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்
Comment