Announcement

Collapse
No announcement yet.

Vichinna agni santhanam & Aupasanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vichinna agni santhanam & Aupasanam

    Hello All
    Every grihastha is supposed to do aupasanam from the day he gets married till the end of his life. For some reason and constraints, it is not followed nowadays. I have a few questions regarding this.

    1. If someone has not been doing aupasanam and wants to do it, I understand that he can start it by doing vichinna agni santhanam once and then aupasanam on a twice a day basis. Correct me if I am wrong.
    2. Once a grihastha starts aupasanam, how many days can his wife do aupasanam in his absence (due to travel or illness).
    3. If a grihastha travels to a far away place, it is near to impossible to carry the agni he has created during aupasanam. In this case does he need to do agni santhanam again in the new place or is there an alternative procedure.
    4. Is there a difference between agni santhanam and vichinna agni santhanam?
    5. Can aupasanam be performed when the ladies in the house have rajaswala period?
    6. Please can someone provide the procedure to perform vichinna agni santhanam and aupasanam?

    Thanks and Regards

  • #2
    Re: Vichinna agni santhanam & Aupasanam

    . விச்சின்ன அக்னி ஸந்தானம். yajur vetham aapasthampa suthram---iyer.

    ஆசமனம். அச்யுதாய நமஹ; அநந்தாய நமஹ கோவிந்தாய நமஹ;
    கேசவா, நாராயணா++++++++++++++++++++++=======தாமோதரா..

    ரித்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய –மித்ரம் தேவம் மித்ர தேயன்னோ அஸ்து—அனுராதான் ஹவிஷா வர்த்த யந்தஹ—சதஞ்ஜீவேம சரதஹ் ஸவீ ராஹா. வாத்யார் பவித்ரம் அக்ஷதையுடன் கொடுப்பார்.
    அக்ஷதையை தலையில் தரித்து, பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் போட்டு கொண்டு அனுக்ஞை கோர வேண்டும். தக்ஷிணை தாம்பூலங்களைj கையில் எடுத்து கொண்டு

    நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஹ ;ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஷே நமோ திவே நமஹ ப்ருதிவ்யை ஹரிஹி ஓம்,

    ஸர்வேப்யோ ப்ராஹ் மணேப்யோ நமஹ என அக்ஷதையை ப்ராஹ்மணர் தலை மீது போட்டு நமஸ்காரம் செய்து தாம்பூல தக்ஷிணையை எடுத்துக்கொண்டு
    அசேஷே ஹே பரீஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெள வர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய
    அநேக கால விச்சின்ன ஒளபாஸ னாக்னி ஸந்தானம் கர்த்தும் யோக்கியதா ஸித்திரஸ்து இத்யனுக்ரஹான

    யோக்கியதா ஸித்திரஸ்து என்று ப்ராஹ்மணர் அனுக்ஞை தருவர்.
    கர்த்தாவும் தடுக்கு அல்லது மனையில் உட்கார வேண்டும். இப்போது வாத்யார் கொடுக்கும் இரு தர்பைகளை வாங்கி கால் பக்கத்தில் அல்லது தடுக்குக் கடியில் போடவும். தர்பேஷ் வாஸீனஹ என்று சொல்லவும். கை அலம்பவும்

    வாத்யார் 3 தர்பை கொடுப்பார். இதை வாங்கி வலது கை பவித்ரத்துடன் இரண்டாக மடக்கி இடுக்கி கொள்ளவும்.தர்பான் தாரய மானஹ என்று சொல்.
    லவும். மனைவியை கூப்பிட்டு மனைவி கையில் ஒரு உத்ரிணி ஜலம் விட்டு கையை துடைத்து கொண்டவுடன் வாத்யார் கொடுக்கும் தர்பையை வாங்கி மனைவி கையில் கொடுக்கவும்.

    ( பத்நி அருகில் நின்று தர்பத்தால் பதியை தொட்டு கொண்டு இருக்க )




    .

    ( பத்நி அருகில் நின்று தர்பத்தால் பதியை தொட்டு கொண்டு இருக்க )

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றியில் 5 தடவை குட்டிக் கொள்ளவும்.

    ப்ராணாயாமம்;-ஓம் பூஹு;; ஓம்புவஹ; ஓம் ஸூவ; ஓம் மஹஹ ஓம்ஜனஹ; ஓம் தபஹ; ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம்; பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்
    ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்

    மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மனஹ த்விதீயே பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீ தமே கலியுகே

    ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே ஷாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே --------------------

    நாம ஸம்வத்ஸரே -----------------அயனே------------------ருதெள---------------மாசே
    --------------பக்*ஷே-----------------------சுப திதெள ----------------வாஸரஹ---------------நக்ஷத்ரம்---------------யோகம்----------------கரணம்----------ஏவங்குண ஸகல விசேஷண
    விசிஷ்டாயாம் அஸ்யாம்-----------------------சுப திதெள அநயா மம தர்மபத்ன் யா ஸஹ ஒளபாஸாநாக்னிம் ஆதாஸ்யே. விச்சின்ன ஸந்தானார்த்தம் தேந பரமேஸ்வரம்

    ப்ரீணயாநி. கையிளுள்ள தர்பத்தை வடக்கில் போடவும்.

    பத்னி கையிலுள்ள தர்பத்தையும் வாங்கி வடக்கில் போடவும் கர்த்தாவும் பத்னியும் கை அலம்பவும்.

    ஹோம குண்டம் அல்லது ஆறு செங்கற்கள் எதிரில் வைத்துக்கொள்ளவும்.

    ஹோம குண்டத்திற்குள் ஒரு ஸமித்தால் கிழக்கு நுனியாக தெற்கே ஆரம்பித்து வடக்கே மூன்று ரேகை கீறி முடிக்கவும்.அதன் மீது மேற்கே ஆரம்பித்து தெற்கி லிருந்து வடக்கு முகமாக மூன்று கோடுகள்

    கீறி அந்த ஸமித்தை அதன் மீது வைத்து அதை ப்ரோக்ஷித்து வட மேற்கு மூலையில் எறிய வேண்டும். கையலம்பி பூர்புவ .ஸூவரோம் என்று அக்னியை ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில்

    அக்ஷதையுடன் ஒரு உத்திரிணீ தீர்த்தம் விட வேண்டும் .அல்லது மனைவியை ஒரு விராட்டி மீது கற்பூரம் ஏற்றி வைக்க சொல்ல வேண்டும்.

    சிராய் தூள் வைத்து அக்னியை ஜ்வலிக்கும்படி செய்து, கிழக்கே ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வைக்க வேண்டும். .பிறகு அக்னிக்கு நான்கு புறமும் தர்பை பரிஸ்தரணம் அமைக்க வேண்டும்.

    . தெற்கிலும் வடக்கிலுமுள்ள தர்ப்பம் கிழக்கு நுனி யாகவும், மேற்கிலும் கிழக்கிலு முள்ளது வடக்கு நுனியாக இருக்க வேண்டும். அத்துடன் தெற்கே உள்ளவை மேலாகவும் வடக்கே உள்ளவை கீழாகவும் அமைக்க வேண்டும்..

    பொதுவாக இக்கார்யத்தில் 108 தர்பைகள் உபயோகிக்க வேண்டு மென்பது விதி ஹோம குண்டத்திற்கு நான்கு பக்கத்திற்கும் 4x16=64 பரிஸ்தரண தர்பங்கள்
    :பாத்திர ஸாதனத்திற்கு 12; ப்ரணீதைக்கு 12; ப்ரணீதையை மூட்ட 8; ப்ரஹ்மாவிற்கு ஆஸநம் 3; பவித்ரம்-2; ஆஜ்யத்தில் தர்பாக்ரம் 2;; தர்விகளை துடைக்க 3; ஆஜ்யத்தில்
    ( நெய் ) ஜ்வாலையுடன் காட்ட 1; அதை சுற்றி போட 1 ஆக மொத்தம் -108.

    கர்த்தா தரிக்கும் பவித்ரம்; ஆஸநம் இதில் சேரவில்லை.

    அக்னிக்கு வடக்கே தர்பங்களை பரப்பி அதன் மீது இரண்டு இரண்டாக பாத்திரங்களை வைக்கவும், ப்ரதான தர்வியும் ஆஜ்ய ஸ்தாலியும் ஒன்றாக சேர்த்து , மற்ற தர்வியும் ப்ரோக்ஷணீ பாத்ரத்தையும் ஒன்றாக சேர்த்து

    கவிழ்த்து வைக்க வேண்டும். ஸமமான நுனியுடன் கூடிய இரு தர்பங்களால் பவித்ரம் செய்து பவித்ரத்துடன் கையால் அந்த பாத்திரங்களை தொட்டு ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் அக்னிக்கும் இடையே

    மேற்கில் தர்பத்தை வைத்து , அதன் மேல் ப்ரோக்ஷணீ பாத்திரத்தை வைக்க வேண்டும். அதற்குள் பவித்ரத்தை வைத்து அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு
    வடக்கு நுனியாக பவித்திரத்தால் மும்முறை அந்த ஜலத்தை கிழக்கே தள்ளி , கவிழ்த்த பாத்திரங்களை நிமிர்த்தி பாக்கியில்லாமல் இந்த எல்லா ஜலத்தாலும் மும்முறை ப்ரோக்ஷிக்கவும்..

    ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கே வைத்து விட்டு நெய்யை அக்னியில் உருக்கி முன் ப்ரோக்ஷணீ பாத்ரம் வைத்த இடத்தில். ஆஜ்ய பாத்திரத்தை வைத்து பவித்ரத்தை அதனுள் வைத்து நெய்யை விட வேண்டும்

    . வட புறத்தில் ஒரு வரட்டியில் அக்னியை வைத்து அதன் மீது ஆஜ்ய பாத்திரத்தை வைத்து ஒரு தர்பத்தை கொளூத்தி அதன் மீது காட்டி இரு ஸமமான நுனி தர்பங்களை நறுக்கி நெய்யில் போட்டு ,
    மற்றொரு தர்பத்தை கொளுத்தி மூண்று முறை நெய் பாத்திரத்தை சுற்றி எறிந்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக அதை இறக்கி அக்னியை அக்னியுடன் சேர்த்து அக்னிக்கு மேற்கில் ஆஜ்ய பாத்திரத்தை வைத்து

    வடக்கு நுனியுள்ள பவித்ரத்தால் மும்முறை கிழக்கு மேற்காக

    தள்ளி அந்த பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தை தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்க வேண்டும். அக்னிக்கு மேற்கே தனக்கு கிழக்கே
    இடையில் தர்பங்களை பரப்பி அதில் ஆஜ்ய ஸ்தாலியை வைத்து ப்ரதான

    தர்வீ இதர தர்வீ என்ற இரண்டையும் அக்னியில் காட்டி தர்பத்தால் துடைத்து மறுபடியும் காய்ச்சி ப்ரோக்ஷித்து ஆஜ்ய ஸ்தாலிக்கு வடக்கே வைத்து தர்பங்களை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்க வேண்டும்.

    பிறகு அக்னிக்கு பரிசேஷணம் செய்ய வேண்டும்.

    அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
    –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

    ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.

    தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றி விடவும்
    அக்னிக்கு தெற்கில் ப்ரஹ்மாவையும், வடக்கில் வருண ணையும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    பிறகு அக்னிக்கு நாலு புறமும் அக்ஷதையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
    இதர தர்வியால் ப்ரதான தர்வியில் நெய்யை எடுத்து விட்டு கொண்டு

    அக்னி ஸித்தியர்த்தம் வ்யாஹ்ருதி ஹோமம் கரிஷ்யே.ஓம் பூர்புவஸ்ஸுவ
    ஸ்ஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

    மறுபடியும் முன்போல் நான்கு முறை நெய் எடுத்து
    உபவாஸ விகல்பேன சோதித அயாஸ்ச ஹோமம் ஹோஷ்யாமி

    அயாஸ்ச ஆக்நேயஸ்யநபி சஸ்தீஸ்ச ஸத்ய மித்வ மயா அஸீ---
    அயஸா மனஸா த்ருதோயஸா ஹவ்ய முஹிஷே யாநோ தேஹி பேஷஜக்கு ஸ்வாஹா.-அக்னயே அயஸ இதம் ந மம

    மறுபடியும் நான்கு முறை நெய் எடுத்து

    அநேஹ கால ஸாயம் ப்ராதரெள பாஸன அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ் சித்த ஹோமம் ஹோஷ்யாமி- ஓம் பூர் புவஸ் ஸுவஸ் ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம.
    அஸ்மின் கர்மணீ அநாக்ஞாத ப்ராயச்சித்தானி கரிஷ்யே.- அநா க்ஞாதம் யதா க்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்தயதா ததகு ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம

    புருஷ ஸம்மிதோ யக்ஞோ யக்ஞஹ புருஷ ஸம்மிதஹ அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்த யதா ததகும் ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம
    யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷா நயக்ஞயஸ்ய மன்வதே மர்தாஸஹ

    அக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம் ந மம.

    ஓம் பூஹு ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம; ஓம் புவஸ் ஸ்வாஹா-வாயவே இதம் ந மம –ஓம் ஸுவ ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம.
    ஓம் பூர் புவஸ் ஸுவஸ் ஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

    அஸ்மின் விஸ்சின்ன ஒளபாஸன அக்னி ஸந்தான ஹோம கர்மணீ மத்யே ஸம்பாவித மந்த்ர லோப தந்த்ர லோப க்ரியா லோப, த்ரவ்ய லோப, ஆஜ்ய லோப ந்யூனாதிரே க விஸ்மிருதி விபர்யாஸ ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்தம் ஹோஷ்யாமி.

    ஓம் பூர் புவஸ் ஸுவ ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா. –விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம- நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா. ருத்ராய பசுபதயே ந மம ருத்ரனுக்கு மரியாதை செய்ய ஜலத்தை தொட வேண்டும்.

    வலது கையில் இரு தர்விகளையும் எடுத்துக்கொண்டு இடது கையில் ஆஜ்ய பாத்ரத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாஹா என்று சொல்லும் போது ஹோமம்
    செய்ய வேண்டும். ஸப்ததே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஸ் ஸப்த ருஷயஹ –ஸப்த தாம ப்ரியானி- ஸப்த ஹோத்ராஸ் ஸப்த தாத்வா யஜந்தி ஸப்தயோநி ரா ப்ருணஸ்வ க்ருதேந ஸ்வாஹா அக்நயே ஸப்தவதே இதம் ந மம இதை உறக்க கூற வேண்டும்.

    ஆஜ்ய பாத்ரத்தை வடக்கே வைத்து ப்ராணாயாமம் செய்து முன் போல் பரிசேஷனம் செய்ய வேண்டும்.

    அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
    –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

    ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.

    தேவ ஸவிதஹ அப்ரஸுவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றி விடவும்
    சக்திக்கு ஏற்றபடி காலை மாலை ஒளபாசனம் செய்யாமலிருந்ததற்கு
    ப்ராஹ்மணருக்கு அரிசி வாழைக்காய் தக்ஷிணை கொடுக்க வேண்டும்;

    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயஸ்சமே.
    அநேக கால ஸாயம் ப்ராதஹ ஒளபாஸனம் அகரண ப்ராயஸ் சித்தார்த்தம்

    ஹோம த்ரவ்யம் யத் கிஞ்சித் ஹிரண்யஞ் ச நாநா கோத்ரேப்யஹ ப்ராஹ்மணேப்யஹ தேப்யஹ தேப்யஹ ஸம்ப்ரததே..
    ஒளபாஸனம்;

    .சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
    த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.

    ப்ராணாயாமம் ஓம் பூஹு===========ஸூவரோம்

    மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
    ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி

    அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
    –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
    ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.

    தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.
    அக்னி தியானம்;-

    சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்ய பாதாஹா த்வே சீர்ஷே ஸப்த ஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவி வேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிஜாதஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய

    மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங் முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ
    ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ

    அக்னிக்கு அலங்காரம்
    கிழக்கே நடுவிலிருந்து ஆரம்பித்து செங்கல் அல்லது ஹோம குண்டத்தின் மேல் அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளிலும் ப்ரதக்ஷிணமாக அக்ஷதை யால் அலங்காரம் செய்க,
    இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ என்றும் ;அக்னயே நமஹ என்று சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.
    ஆத்மனே நமஹ என்று தன் தலையில் அக்ஷதை போட்டுக் கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மணே ப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.

    களைந்த அக்ஷதையை= ( ஹோம த்ரவ்யம் ) ஒரு பிடி எடுத்துக் கொண்டு.
    ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என உத்தரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டு கையால் ஹோமம் செய்யவும்.

    ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்.
    ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்.

    முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் ( வடகிழக்கு ) உரக்க மந்திரம் கூறி ஹோமம் செய்க,
    அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம
    பரிசேஷனம்;
    அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
    –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

    ஸரஸ்வதேநு மன்யஸ்வ;- வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
    தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.

    அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று சொல்லவும்.

    அக்னே நயஸூ பதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோ த்யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
    அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ் சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண நமஸ்காரம்.

    அபிவாதயே=========...
    ப்ராதர்//—ஸாயம் ஒளபாஸன ஸாத்குண்யார்த்தம் அநாக்ஞ்யாதி மந்த்ர ஜபம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து கொண்டு அநா க்ஞாதம் யதா க்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்தயதா
    ததகும் என கூற வேண்டும். நித்ய ஒளபாசனமானால் உடனே ரக்ஷை தரித்து கொள்ளலாம். சிராத்தத்தில் தற்கால ஒளபாஸனமானால் சிராத்த மெல்லாம் முடிந்த பிறகே ரக்ஷை தரிக்க வேண்டும்.ரக்ஷை தரிக்க மந்திரம்.

    ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத்-வ்ருத்த விஷ்னியம்-த்ருஷ்டு பெளஜஸ்ஸுபித முக்ர வீரம்.இந்த்ரஸ்தோமேன பஞ்சதசேன மத்யமித வாதேன ஸகரேண ரக்ஷ. பஸ்மாவை தரித்து ஆசமனம் செய்து காயேன வாசா மனசே

    இந்த்ரியைர்வா புத்தியார்த்தனாவா ப்ருஹதே சுபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமன் நாராயணாயேத்தி ஸமர்பயாமி என தீர்த்தம் விட வேண்டும்.

    Comment


    • #3
      Re: Vichinna agni santhanam & Aupasanam

      Sri:

      1. If someone has not been doing aupasanam and wants to do it, I understand that he can start it by doing vichinna agni santhanam once and then aupasanam on a twice a day basis. Correct me if I am wrong.
      First Part correct, second part wrong - no such option to do it in once in two days, it must be done every day morning and evening without put off the agni.
      2. Once a grihastha starts aupasanam, how many days can his wife do aupasanam in his absence (due to travel or illness).
      There is no authentic source to reply for this question.
      3. If a grihastha travels to a far away place, it is near to impossible to carry the agni he has created during aupasanam. In this case does he need to do agni santhanam again in the new place or is there an alternative procedure.
      In such a situation he has to take off the agni by "AtmasamAropaNam" then again has to do the vichinna agni santhanam.
      4. Is there a difference between agni santhanam and vichinna agni santhanam?
      Just putting the agni in the place for agni is called "Agni Santhanam", the second should be like this : "vichchinna aupaasana agni santhanam" - agni created for broken aupasanam.
      5. Can aupasanam be performed when the ladies in the house have rajaswala period?
      No.
      6. Please can someone provide the procedure to perform vichinna agni santhanam and aupasanam?
      You are lucky enough the get the immediate reply from Sri.Gopalan mama.


      Thanks and Regards.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Vichinna agni santhanam & Aupasanam

        ஐயர் விச்சீனாக்னி ஹோத்ரம் யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் இம்மாதிரி செய்ய வேண்டும். நீங்கள் ஐயங்கார் என்றால் இதிலேயே இருக்கிறது.அதன் படி செய்யலாம்.தினமும் ஒளபாஸனம் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும். உங்களுக்கு பதிலாக உங்கள் மனைவி செய்தால் மந்திரம் எதுவுமில்லை. அதே அக்னியில் அணயாமல் பார்த்துகொண்டு தினமும் செய்ய வேண்டும்.

        இரு வேளையும். சொந்த வீடு இருக்க வேண்டும்.உங்களுக்கு வேதம் படிக்கும் மாணவர்கள் இருக்க வேண்டும். ஒளபாசன அக்னியை வேறு எங்குமே எடுத்து செல்லக்கூடாது. நீங்கள் இல்லாத போது உங்கள் சிஷ்யர்கள் செய்யலாம்.

        திருமணம் ஆன உடன் ஒளபாஸன அக்னியை எடுத்து வீட்டுக்கு செல்லலாம். அதன் பிறகு எங்கும் எடுத்து செல்லக்கூடாது. தினமும் இரு வேளையும் செய்ஹு முடித்து விட்டு வயது ஆனவுடன் கணவனோ மனைவியோ யாரோ ஒருவர் இறந்துவிட்டவுடன் இந்த அக்னியை அவர் மார்பில் கொட்டி அந்த உடலை தீக்கு இறை யாக்க வேண்டும்.

        இதை தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்று கூறுவார்க ள்உங்களுக்கு சொந்த வீடூம் சொந்த நஞ்சய்நிலம், பசு மாடு இருக்க வேண்டும். கிராமத்தில் வசிக்க வேண்டும்.

        Comment


        • #5
          Re: Vichinna agni santhanam & Aupasanam

          உபாஸனம்= உப+ஆஸனம் ; ஸமீபத்தில் இருத்தல் என்று அர்த்தம்.யக்ஞேஸ்வரர் என்னும் அக்னி பகவானை தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்து உபாசிக்கும் கர்மா; இது ஒரு நித்ய கர்மா.இதுவே ஒளபாஸனம் என்று ஆகியது. கணபதி உபாஸகர். ஸ்ரீ வித்யோபாஸகர் என்பது போல்.ஆபஸ்தம்ப மஹரிஷிரின் வசனப்படி கணவன் மனைவியாக முத்ல் முதல் ஆன்வுடன் அன்றே ஒளபாசன ஹோமம் ஆரம்பிக்க படுகிறது.

          தினமும் காலை மாலை ஸூர்ய உதயத்தின்//அஸ்தமனத்தின் போது செய்வது முதல் பக்ஷம்,. முடியாத நிலையில் இரண்டாம் பக்ஷமாக காலை 8-30 மணிக்குள்ளும் இரவு 8-30 மணிக்குள்ளும் செய்ய வேண்டும். ( வைத்தினாத தீக்ஷிதீயம் ஆஹ்ணீக கான்டத்தில் உள்ளது. பக்கம் -92

          தினமும் இதை தவறாது செய்து வ்ந்தால் அவர் வசிக்கும் பகுதி தேசம் நன்றாக இருக்கும்.அந்த வீட்டில் செல்வம், ஞானம், ஆரோக்கியம் . வேறு எந்த பரிஹார ஹோமமும் தேவைபடாது என்கிறது சாஸ்திரம்.

          பாரத்வாஜ மகரிஷி கணவனுக்காக மனைவி மந்திரமில்லாமல் ஒளபாஸனம் செய்யலாம் என்கிறார். ஆதலால் பெண்கள் ஒளபாஸன ஹோமம் செய்யலாம்.

          நமது ஒளபாசன அக்னியில் பிறர்கள் ஹோமம் செய்யக்கூடாது. ஆதலால் மற்ற நவகிரஹ ஹோமம, கணபதி ஹோமம் , சுதர்சன ஹோமம் இவைகளை ஒளபாஸன அக்னியில் செய்வதில்லை. லெளகீக்காக்னியில் செய்கிறோம்.

          எனது நலனுக்கும் எனது மனைவி நலனுக்கும் செய்வது ஸ்தாலிபாக ஹோமம். எனது குழந்தைகளுக்காக செய்வது செளளம், உபநயனம், ஜாதகர்மா முதலியன.

          எனது மனைவிக்காக செய்வது சீமந்தம்; பும்ஸவனம். எனது நலனுக்காக செய்வது ஒளபாசனம். எனது பையனுக்காக செய்யும் ஹோமம் லெளகீக்காக்னியில் செய்ய படுகிறது.

          ஸந்தியாவந்தனம் போல் இது ஒரு நித்ய கர்மா. ""ஸூதகே ம்ருதகே சைவ அசக்தெள சிராத்த போஜனே ப்ரவாஸாதி நிமித்தேஷுஹாவயேந் ந து ஹாபயேத் ""
          என்ற வசனப்படி பிறப்பு, இறப்பு தீட்டு வந்தாலும், வெளி ஊர் பயணம், உடல் நலமினமை ஆகிய நேரங்களில் மகன், மாணவன் போன்ற மற்றவர்களை செய்ய சொல்ல வேண்டும். ஒரு நாளும் செய்யாமல் விடக்கூடாது.

          Comment

          Working...
          X