Announcement

Collapse
No announcement yet.

பஞ்ச கவ்யம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்ச கவ்யம்

    கோபூஜை---பஞ்ச கவ்யம்
    மகாலக்ஷ்மியின் முழு சாந்நித்யம் உள்ள இடம் பசுவின் உடல் தான். இதனால் தான் நாம் பசுவைத் தெய்வமாக எண்ணி. வணங்கிக் கொண்டாடி வருகிறோம். மகாலக்ஷ்மியின் பரிபூரணமான அருளை நாம் பிரத்யக்ஷமாகப் பெறவும். சகலவித பாவங்களும். தோஷங்களும் தீரவும் நாம் கோபூஜை செய்தே ஆக வேண்டும். அகில உலகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் நிறைந்து விளங்கும் ஸ்வரூபமாக எண்ணிக் கோமாதாவைப் பூஜை செய்ய வேண்டும். கோபூஜையின் பயனைச் சொல்லி முடியாது
    கோபூஜை செய்தால் சகல பாவங்களும் விலகி விடுகிறது. அனைத்துப் புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கிறது. பசுவின் கோமயம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோமயத்துடன் பசுவின் சாணம், நெய், பால், தயிர் ஆகியவை கலந்த கலவையே மிகவும் புனிதமான பஞ்ச கவ்யம் என்று அழைக்கப்படுகிறது
    பசு மனிதர்க்கு தேவையற்ற புல்லையும் வைக்கோலையும் உண்டாலும் மனிதர்க்குத் தேவையான பால், நெய், வெண்ணெய், தயிர் ஆகிய வற்றைத் தந்து காக்கிறது. பசுவின் சாணமும், சிறுநீரும் சுத்தி செய்யும் தன்மை வாய்ந்தன. பஞ்சகவ்லயம் என்பது- பசுவின் பால், தயிர், நெய், கோசலம் (கோமுத்திரம்), கோமயம் (கோமலம்) ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.
    உடலின் புறத்தே தூய்மை செய்வது நீர். அகத்தே தூய்மை செய்வது பஞ்ச கவ்யம். சில வழிபாட்டுச் சடங்குகளில் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைத் பெறுகிறது. உதாரணமாக உபகர்மா அன்று பக்தர்கள் முதலில் நீராடி, பஞ்ச கவ்யத்தைப, பருகி மீண்டும் நீராடுகின்றனர். பஞ்சகவ்யமானத அதை உண்போரின் உடல், தோல், மாமிசம், ரத்தம் மற்றும் எலும்பு வரையுள்ள பாவங்களை அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல எரித்து விடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    பஞ்ச கவ்யம் தயாரிப்பதற்கு முன்னோர் சில அளவு முறைகளை வரையறுத்துள்ளனர்
    பசும் பால் - 1 அளவு
    பசும் தயிர்- 2 அளவு
    பசும் நெய்- 3 அளவுஇப்பஞ்சகவ்யம் நோய் நீக்கும் மாமருந்தாகும். ஒரு பலம் கோமூத்திரம், கட்டை விரலில் பாதி சாணம், ஏழு பலம் பால், இரண்டு பலம் தயிர், ஒரு பலம் தர்ப்ப ஜலம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் என்று அழைக்கப்படுகிற
    கோசலம்- 1 அளவு
    கோமலம்- 1 அளவு
    தர்ப்பை கலந்த நீர்- 3 அளவு
    இவ்வாறு பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் போது மந்திரங்களை இடையறாது உச்சரிக்கை வேண்டும். பஞ்சகவ்யத்திற்கு பசும் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எருமைப்பால் பயன்படுத்தக் கூடாது. பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன. பசுக்களின் நிறத்திற்கு அவை தரும் பாலின் தன்மைக்கும் வேறுபாடு உள்ளது.
    பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும், நீல நிற பசுவிடம் இருந்து தயிரும், கருமை நிறப் பசுவிடமிருந்து நெய்யும், செந்நிரப் பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே எடுத்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு சிறந்த முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தைத் தமிழில் ஆனைந்த என்பர்.



Working...
X