Announcement

Collapse
No announcement yet.

தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்..2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்..2

    தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும்.இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது.
    *இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது.
    *வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
    *தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.
    *வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது.
    *மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,
    உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

    *பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.
    *ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
    *வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது


    நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.
    *ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது.
    *சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது.
    *பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,
    கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

    *பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்
    அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

    *அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் ,முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.
    *ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,
    மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

    *பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்
    இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.

    *பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.
    *பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.


    பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி
    சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு
    புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.

    *தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.
    *பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.
    *தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.
    *அண்ணன் - தம்பி , அக்காள் - தங்கை , ஆசிரியர் - மாணவர் , கணவன் - மனைவி,
    குழந்தை- தாய் , பசுவும் - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது.

    *நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.
    &வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
    *கையால் மோரைக் குழப்பக்கூடாது.


    தாம்பத்ய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர
    மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம உறுப்பை பார்க்க கூடாது.

    *பிற பெண்களுடையதையும் பார்க்௧வே கூடாது.
    ***நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.***




    Source:
    Kudandhai Ravilochanan





  • #2
    Re: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்..2

    An excellent collection of Don'ts.Thanks.
    Varadarajan

    Comment


    • #3
      Re: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்..2

      சிறப்பான தொகுப்பு .
      "*வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது." அது ஏன் ?
      அன்புடன்
      ஜி ஜி மூர்த்தி அய்யர்

      Comment

      Working...
      X