கல்யாண கும்மிப் பாடல்
குறிப்பு:- ப்ராஹ்மண கல்யாணங்கள் முடிந்ததும் பாலிகையை ஆற்றில், குளத்தில் கரைப்பார்கள்
அப்படி கரைக்க எடுத்துச்சென்ற பாலிகைகளை வைத்து சுமங்கலிகள் கும்மிப்பாடலுடன் கும்மியடிப்பது என்பது ஒரு ஸம்ப்ரதயாம். தற்கால அவசரக் கல்யாணங்களில் இது பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. கும்மிப்பாடல் யாருக்கும் தெரியாததும் ஒரு காரணம். இதை உத்தேசித்து, அடியேன் ஒரு கும்மிப்பாடலை இயற்றியுள்ளேன். கீழுள்ள அந்தப்பாடல் பாரதியாரின் விடுதலைக் கும்மி பாடல் மெட்டில் பாடவேண்டும்.
கும்மியடிக் கண்ணே கும்மியடி தாலி
குலுங்க குலுங்க கும்மியடி
கண்ணிறைக் கணவன் கைப்பிடித்தானென்றே
கால்மெட்டிக் குலுங்க கும்மியடி
வள்ளுவனுக்கோர் வாசுகியென்றே
வையம் வழங்கிடக் காணுகின்றோம்
இதுபோல ஏழு பாராக்கள் கொண்ட பாடல் பி.டி.எப் ஆக
டவுன்லோட் செக்*ஷனில் பதிவேற்றப்பட்டுள்ளது.
தேவையானவர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.