அக்னி உபஸ்தாந மந்த்ர - அர்த்தம்
அக்னி உபஸ்தாந மந்த்ரம்
अग्ने नय सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान्।
युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नम उक्तिं विधेम।
அக்நே நய சுபதா ராயே அஸ்மாந் விச்வாநி தேவ வயுநாநி வித்வாந்!
யுயோதி அஸ்மத் ஜுஹுராணம் ஏந: பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம!!
யுயோதி அஸ்மத் ஜுஹுராணம் ஏந: பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம!!
என்பது,இதின் விளக்கமாவது, अग्ने देव-அக்னி தேவனே,सुपथा -சாஸ்த்ரவிருத்தமல்லாத வழியினால் अस्मान्-எங்களை,नय- நடத்தி செல்வாயாக.எதுக்காகவென்றால் राये- பணத்தின் பொருட்டு,உனக்கு ஹவிஸ்ஸைஸம்பாதிக்கத்தகுந்தவர்களாக எங்களை செய்யவேணும்,विश्वानि वयुनानि विद्वान्-நீ எலாலாவற்றையும் அறிந்தவன், जुहुराणम्. வக்ரமான एनः- செய்யவேன்டிய கர்மாவை செய்யாததினால் உண்டான பாபத்தை अस्मत्- என்னிடத்திலிருந்து युयोधि- விலக்கவேணும்.இதுக்காக நான் செய்வது भूयिष्ठां ते नम उक्तिं-உன்னை குறித்து அதிக அளவு நமஸ்காரம் என்ற சொல்லை மாத்ரம் विधेम- சொல்லக்கடவேன். அக்னிதேவனே, சாஸ்த்ரவிருத்தமல்லாதவழியில் நிறையபணத்தை ஸம்பாதித்து உனக்கு ஹவிஸ்ஸை ஸமர்பிக்கத்தகுந்தவனாக என்னை நடத்திச் செல்லவேணும்,என்னுடய பாபத்தை போக்கவேணும்,இதுக்காக என்னால் வேறு ஏதும் செய்ய இயலாது,நமஸ்காரமும் செய்ய இயலாதவனாய் நமஸ்காரம் என்ற சொல்லை மாத்ரம் சொல்லக்கடவேன்.