Announcement

Collapse
No announcement yet.

சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்

    நமக்கு தெரிந்து இரண்டு . சுக்ல,,கிருஷ்ண பட்ச்ங்க்கள். அது என்ன ஆவணி, புரட்டாசியில் வரும் கிருஷ்ண பட்சத்திர்க்கு மஹாளயபட்சம் என்று சொல்கிறோம். மஹாளயம் என்றால் அர்த்தம் என்ன. கற்றுணர்ந்த பெரியோர்கள் இதைப்பற்றி விவரிக்கலாமே?

  • #2
    Re: சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்

    நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்

    ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹாபரணி ( 13.09.14– சனி) , மஹாவ்யதீபாதம் (17-.09.14 புதன்), மத்யாஷ்டமி ( 16.09.14செவ்வாய் ) கஜச்சாயா (21.09.14 ஞாயிறு), ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

    மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை.

    சின்ன சின்ன சந்தேகங்கள்
    மேற்க்கண்ட தலைப்பில் கொஞ்ச நாட்களுக்குமுன் "மஹாளயம் " என்றால் அர்த்தம் என்ன என்று கேட்டு இருந்தேன் . எதேச்சையாக face book ல் திரு வரகூர் நாராயணன் இதற்க்கு அர்த்தத்தோடு எழுதியதை உங்களுடன் பகிர்நது கொள்கிறேன் . இப்போது எல்லோருக்கும் மஹாளயம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வாய்ப்பே இது..

    Comment

    Working...
    X