Announcement

Collapse
No announcement yet.

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமī

    விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?


    விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?

    நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

    தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள்.

    ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது

    Source: aanmigam
Working...
X