Announcement

Collapse
No announcement yet.

மஹாளய அமாவாசை;

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹாளய அமாவாசை;

    மஹாளய அமாவாசை;
    ------------------------------



    Click image for larger version

Name:	Mahalaya.jpg
Views:	1
Size:	31.2 KB
ID:	35181---
    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருவதாக நம்பிக்கையாகும்.

    நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எவ்வித குறைகளும் இன்றி நலமோடு வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியமாகும்.அந்த ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்க அமாவாசை தினத்தில் சிரார்த்தம் கொடுப்பது நன்மையாகும்.வரும் அமாவசை மஹாளய அமாவாசையாகும்.இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்பணம் கொடுப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.

    பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

    புரட்டாசி மாதம் 18-ந்தேதி(04-10-2013)வெள்ளிக்கிழமை மஹாளய அமாவாசையாகும் இந்த தினத்தில் விரதமிருந்து பிதூர் தர்பணம் செய்தால் கர்ம வினைகள் விலகும்,ஏழு தலைமுறைக்கு புண்னியம் சேரும்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Working...
X