Announcement

Collapse
No announcement yet.

சோம வார அரச மர ப்ரதக்ஷிணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சோம வார அரச மர ப்ரதக்ஷிணம்

    Pradhakshina amavasai

    ப்ரதக்ஷிண அமாவாசை 02-09-2024



    திங்கட் கிழமை காலை 10 மணி வரை அமாவாசை இருந்தாலும் அரச மர ப்ரதக்ஷிணம் செய்யலாம். 02-09-2024 அமாவாசை முழுவதும் இருப்பதால் இன்று அமாவாசை அரச மர ப்ரதக்ஷிணம் செய்யலாம்.



    ப்ரதக்ஷிணம்செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.



    1. ஆயுர் பலம் யஶோ வர்ச்ச: ப்ரஜா: பஶு வஸுனி ச ப்ரஹ்ம ப்ரஞ்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹி வநஸ்பதே.



    2. ஸததம் வருணோ ரக்ஷேத் த்வாமாராத் வ்ருஷ்டிராஶ்ரயேத். பரிதஸ்த்வாம் நிஷேவந்தாம் த்ருணா நிஸுகமஸ்துதே.



    3. அக்ஷிஸ்பந்தம் புஜஸ்பந்தம் துஸ்ஸ்வப்னம் துர்விசிந்தனம் ஶத்ரூணாம் ச ஹ்யஸ்வத்த ஶமய ப்ரபோ.



    4. அஶ்வத்தாய வரேண்யாய ஸர்வ ஐஸ்வர்ய ப்ரதாயினே. நமோ துஸ்ஸ்வப்ன நாசாய ஸூஸ்வபன பல தாயினே.



    5. மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: ஶிவரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:



    6. அஶ்வத்த ஸர்வ பாபானி ஶத ஜன்மார்ஜிதானி ச நுதஸ்வ மம வ்ருக்ஷேந்த்ர ஸர்வ ஐஸ்வர்ய ப்ரதோ பவ.





    7. யம் த்ருஷ்ட்வா முச்யதே ரோகை; ஸ்ப்ருஷ்ட்வா பாபை:ப்ரமுச்யதே. பதாஶ்ரயா சிரஞ்சீவி தம் அஶ்வத்தம் நமாம்யஹம்.



    8. அஶ்வத்த ஸுமஹா பாக ஸுபக ப்ரியதர்ஶன. இஷ்ட காமாம்ஶ்ச மே தேஹி ஶத்ருப்யஸ்ச பராபவம்.



    9. ஆயு: ப்ரஜாம் தனம் தான்யம் ஸெளபாக்கியம் ஸர்வஸம்பதம். தேஹி தேவ மஹா வ்ருக்ஷ த்வாமஹம் ஶரணம் கத:





    10. ருக் யஜு: ஸாம மந்த்ராத்மா ஸர்வ ரூபி பராத்பர: அஶ்வத்தோ வேதமூலோ ஸா வ்ருஷிபி: ப்ரோச்யதே ஸதா.





    11. ப்ருஹ்மா குருஹா சைவ தரித்ரோ வ்யாதி பீடித: ஆவ்ருத்ய லக்ஷ ஸங்கியம் தத் ஸ்தோத்ர மேதத் ஸுகீ பவேத்.



    பல ஶ்ருதி பகுதி சேர்க்கபடவில்லை.

    சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதரின் ஜய மங்கள ஸ்தோத்ரம் புத்தகத்தில் உள்ளது.



    இதன் பொழிப்புரை.



    வன மரங்களுக்கு நாயகனே. ஆயுள், பலம், கீர்த்தி, காந்தி, மக்கட் செல்வம், த்ரவ்யங்கள், வேதம் ஓதுவதில் திறமை, நல்ல புத்தி, மேதை திறன் ஆகியவற்றை அருள்வாயாக.



    அஸ்வத்த மரமே- உமக்கு வருண பகவானின் பாதுகாவல் நாற்புறமும் இருக்கட்டும்.

    உமது அருகே மழை நீர் பெருகட்டும். நாற்புறமும் உம்மை புல் சூழ்ந்து இருக்கட்டும். உமக்கு ஸுகம் உண்டாகட்டும்.



    மரங்களின் அரசே கண் துடிக்கும் நோய், கை நடுக்கம், கெட்ட கனவுகள் காணுதல், தீய எண்ணங்களின் தாக்கம், எதிரிகளை குறித்த பயம் ஆகியவற்றை விலக்கி அருள்வீராக.



    சிறப்புகள் மிக்கவரும், அனைத்து செல்வங்களையும் அருள்பவரும் , கெட்ட கணவுகளை களைபவரும், நல்ல கனவுகளை பலித மாக்குபவருமான வ்ருக்ஷராஜனே உமக்கு நமஸ்காரம்.





    வேர் பகுதியில் ப்ருஹ்மா ஸ்வரூபமாகவும், நடு பகுதியில் மஹா விஷ்ணு ஸ்வரூபமாகவும், நுனி பகுதியில் சிவ ஸ்வரூபமாகவும், விளங்கும் வ்ருக்ஷ ராஜனே. உமக்கு நமஸ்காரம்.



    மரங்களுக்கு இந்திரனான அரசே. நூற்றுகணக்கான பிறவிகளில் என்னால் ஈட்டப்பட்ட பாபங்கள் அனைத்தையும் விலக்கி , அனைத்து செல்வங்களையும் அருள்வாயாக.



    கண்டாலே விலகும் ரோகங்கள், தொட்டாலே பாபங்கள் விலகி ஓடும். நெருங்கி வந்தால் போதும் நீண்ட ஆயுள் சித்திக்கும்.அத்தகைய அரச மரத்தை நான் நமஸ்கரிக்கின்றேன்.





    கண்ணால் காண்பதற்கு ரம்யமானவர் நீர். நல்ல பாக்கியங்களை பெற்றவர் நீர்; ஹே அரச மரமே என் இச்சைகளை பூர்த்தி செய்வாயாக.எனது அக புற சத்ருக்களை ஜயித்திட அருள்வீராக.



    தேவனே மஹா வ்ருக்ஷமே உன்னை சரணடைந்தேன். நீண்ட ஆயுள், நன்மக்கட்பேறு , நிதி, உணவு பொருட்கள், அழகு, ஸர்வ ஸம்பத் ஆகியவற்றை அருள்வீராக.



    ருக் யஜுர் ஸாம வேத மந்த்ரங்களின் அந்தர் ஆத்மாவாக, அனைத்தின் சொரூபமாக பரந்து விரிந்துள்ள அஸ்வத்தமே. வேதங்களின் மூலமாகவே நீர் எப்போதும் ரிஷிகளால் போற்ற படுகிறீர்.





    ப்ருஹ்ம ஹத்தி பீடித்தவரும், குருஹத்தி பாவம் பற்றபட்டவனும், வறுமையால் வாடுபவனும் , வ்யாதியால் வாடுபவனும் அரசமரம் ப்ரதக்ஷிணம் செய்து இந்த ஸ்தோத்தி ரத்தை லக்ஷம் முறை பாராயணம் செய்தால் சுகமடைவான்.





    வ்ருக்ஷம் என்றால் மரம். ராஜன் என்றால் அரசன். வ்ருக்ஷ ராஜன் மரங்களின் அரசனான அரச மரத்தை குறிக்கும். ஸ்காந்தம் 247/41-44 சொல்கிறது. அரச மரத்தின் மேல் பகுதி சிவனாகவும், நடு பகுதி விஷ்ணுவாகவும் வேர் பகுதி ப்ருஹ்மாவாகவும் பரம்பொருள் உறைகிறான்.



    பகவத் கீதை -10-26. மரங்களில் நான் அசுவத்தம் என்று கூறுகிறார். ருக் வேதம் 1.164.120 கூறுகிறது

    உடல் என்பது அரச மரத்தின் பழத்தை போன்றது. சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. ஆன்மா என்பது அந்த பழத்தின் விதை போன்றது. அது சுக துக்கங்களால் அல்லல் படாமல் எல்லாவற்றிர்க்கும் சாக்ஷியாக உள்ளது. ப்ரபஞ்சத்தில் உள்ள சுக துக்கங்களாகிய பழங்களை சுவைப்பது ஜீவாத்மா. அவற்றை கண்டும் சுவைக்காமல் , பாதிக்க படாமல் இருப்பது உள்ளுக்குள் இருக்கும் பரமாத்மா.





    அரச மரம் வம்ச வ்ருத்தி வழங்கும் குணமுள்ளது. என்று அக்னி புராணம் கூறுகிறது. ஒரு யக்ஞ்யத்தில் வெறுப்புற்ற அக்னி தேவன் ஒரு குதிரையின்(அஶ்வம்) உரு எடுத்துக்கொன்டு யாக சாலை விட்டகன்றார். சமாதானம் செய்ய தேவர்கள் பின் தொடர்ந்தனர்.



    அக்னி தேவன் ஒரு அரச மரத்தில் லய படுத்திக்கொண்டு மறைந்தார். அஷ்வம் மறைந்திருந்தமையால் அரச மரம் அசுவத்த மரமாகியது. இதனால் அரச மரமே அக்னி சொரூபமாக கருதப்பட்டு வழிபடபடுகின்றது. அரச மரத்திற்கு செய்யும் வழிபாடுகள் உரிய தெய்வங்களை சென்று அடைகிறது.



    ஆதி சங்கர பகவத் பாதர் ஸம்ஸ்க்ருததில் ஶ்வ என்றால் நாளை என்று பொருள். அஶ்வ என்றால் நாளை என்று ஒன்று இல்லாதது. த்த என்றால் இருப்பது, நிற்பது என்று அர்த்தம்.

    அதாவது , நாளைக்கு இன்று போல் இல்லாதது. வேறு விதமாக இருப்பது என்று விளக்குகிறார். அது போல தான் இந்த ப்ரபஞ்சத்தின் தன்மை எங்கிறார்.





    ஆகையால் அசுவத்தம் என்பது இந்த ப்ரபஞ்சத்தின் உருவகம். அதை தொழுவது இந்த ப்ரபஞ்ச மாக வ்யாபித்து இருக்கும் பரப்ருஹ்மத்தையே தொழுவதாகும் என அர்த்தம்.



    பகவத் கீதையின் 15ஆவது அத்யாயமிதை பற்றி கூறுகிறது.கதோபனிஷத் 2ம்ப்ரஸ்னம், 3ம் அத்யாயம் யம தர்ம ராஜன் கூறுகிறான்;_ இது தலை கீழாய் என்றும் மறையாது நின்று இருக்கும் அஸ்வத்த மரம். இதுவே ப்ருஹ்மம். இதை தான் நீ தேடி கண்டுபிடித்து அடைய வேண்டும்.



    நீல ருத்ர உப நிஷத்:- 3வது மந்திரம். நீரின் மேல் நிலைத்து இருக்கும் அஸ்வத்தினின்றும் தோன்றி வரும் ருத்திரன் தீயன வற்றை அழிக்கின்றான்.



    ஸ்வேதாஸ்வதார உபனிஷத்:- இணை பிரியா இரு பறவைகள் ஒரே அரச மரத்தில் உள்ளன. ஜீவாத்மா அரச மர பழத்தின் சுவையில் சொக்கி கிடந்து , பரம் பொருளை மறந்து போய் துக்க கடலில் வீழ்கிறது. அது அருகிலிருக்கும் மற்ற பறவையை கண்டால்



    ( பரமாத்மாவை அறிந்து கொண்டால்) அதன் துக்கம் மறைந்து விடுகிறது.



    பத்ம புராணம்- ஸோம வார அமாவாசை அன்று மஹா விஷ்ணுவும் மஹா லக்ஷ்மியும் அரச மரத்தில் வந்து உறைந்திருந்து தம்மை வழி படுவோருக்கு அருள்வதாக ஐதீகம்.



    வாமன புராணம்:- அந்தர்வாஹிணியான ஸரஸ்வதி நதி , ஒரு அசுவத்த வ்ருக்ஷத்திலிருந்து தான் உற்பத்தியாகி வருகிறாள்.எங்கிறது.



    தேவ அசுர யுத்தத்தின் போது , மஹா விஷ்ணு அசுவத்த மரத்தில் மறைந்து இருந்தார் எங்கிறது ப்ருஹ்ம புராணமும், பத்ம புராணமும். எனவே அரச மரத்தை வேறு ப்ரதிமைகள் ப்ரதிஷ்டை செய்யாமல் அப்படியே வழிபடுவது நாராயணனை வழிபடுவதாகும் எங்கிந்றன சாத்திரங்கள். அப்போது அவர் அஶ்வத்த நாராயணன் என்ற பெயர் பெறுகிறார்.



    அரச மரத்தின் அடியில் தான் மஹா விஷ்ணுவின் ஒர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்காந்த புராணம் கூறுகின்றது.ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் நிறைவுற்றதும் ஒரு அரச மரத்தின் அடியில் தான்.



    பார்ப்பு என்ற செந்தமிழ் சொல்லுக்கு பறவை குஞ்சு என பொருள். பார்ப்பு அன்னவன், பார்ப்பு அனன் என திரிந்து பார்பணன் ஆயிற்று. அதாவது பறவைகளை ஒத்தவன் பார்ப்பனன் ஆனான்.. பறவைக்கும் இரு பிறப்பு, முட்டையாக பிறந்து குஞ்சாக வெளி வருகிறது.



    அதே போல நெறி வழுவா அந்தனனும் இரு பிறப்பாளர். உபநயனம் மறு பிறப்பு. எனவே பறவைகளை ஹிம்சை செய்வது ப்ராஹ்மணர்களை வதைப்பது (ப்ருஹ்மஹத்தி) போலாம்.



    அஶ்வத்த ஸ்தோத்ரத்தின் பல ஶ்ருதி பின் வருமாறு சொல்கிறது.



    வாதம் ரோகம் போன்ற பிணிகள் அகல ஞாயிற்று கிழமைகளில் ஸூரியனை தொழுத பின்னரும், மங்களங்கள் சித்திக்க திங்கட்கிழமை சிவனை தொழுத பின்னரும், வெற்றி வேண்டுமெனில் செவ்வாய் கிழமைகளில் சக்தியை தொழுத பின்னரும்,



    வாணிபத்தில் வெற்றி பெற புதங்கிழமை தேவர்களை தொழுத பின்னரும், ஞானம் வேன்டின் வியாழ கிழமையில் குரு பகவானை தொழுத பின்னரும், செல்வம் வேண்டின் வெள்ளி கிழமை லக்ஷ்மியை தொழுத பின்னரும், துக்கங்கள் தொலைய வேன்டின், சனி கிழமையில் எல்லா தேவதைகளை தொழுத பின்னரும் அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்க.





    குறிப்பாக சந்திரனையும், சனீஸ்வரனையும் அஶ்வத்த உருவில் பூஜித்து அரச மரத்திற்கு நமஸ்காரம் செய்க.



    ப்ரதக்ஷிணம் கணபதிக்கு ஒன்று, ஸூர்யனுக்கு இரண்டு. பரமேஸ்வரனுக்கு மூன்று, மஹா விஷ்ணுவிற்கு நான்கு, அரச மரத்திற்கு ஏழு. இவற்றிற்கு குறைவாக ப்ரதக்ஷிணம் செய்ய க்கூடாது. மெதுவாக நடந்து செல்ல வேண்டும். வாயினால் ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டு, மனதினால் இறைவனை சிந்தித்த வண்ணம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.



    அரச மரத்திற்கு நல்லெண்ணய் விளக்கு ஏற்ற வேண்டும். அபிஷேகம் பொருள்கள் அரச மரத்தின் வேர் வழியாக அரச மரத்திற்கு செல்வதால், நல்லெண்ணய், வாசனை பொடி, பால், சந்தனம் மட்டும் போதும்.



    அபிஷேக பொருள் மரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கும், நாகருக்கும் இதே அபிஷேக பொருள் போதும். அபிஷேக பொருள் அரச மரத்து அடியில் சென்று அரச மரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.



    நைவேத்தியத்திற்கு வெல்லமும், எள்ளும் போதும். மற்ற நைவேத்யம் சமர்பிப்பதில் தவறில்லை. இன்று முழுவதும் பஞ்சு, தலைகாணி, கிழங்கு வகைகள் தொட கூட கூடாது.





    அரச மரம் அதிக அளவில் கரிய மில வாயுவை உட்கொன்டு ஒஜோன் எனும் ப்ராண வாயுவை விட வீர்யமிக்க , வாயுவை வெளி விடுகிறது. ஆதலால் காலை வேளைகளில் அரச மரம் சுற்ற வேண்டும்.



    காலை பத்து மணிக்கு மேல் ஸ்ரீ தேவியின் தமக்கை மூதேவிக்கு இருக்க இந்த அரச மரம் லக்ஷ்மி தாயாரால் கொடுக்க பட்டது. ஆதலால் காலை பத்து மணிக்கு மேல் அரச மரம் பக்கமே செல்லாதீர்கள்.



    அரச இலை பெண்மையையும், வேப்பம்பழம் ஆண்மையையும் குறிப்பதாக ஐதீகம்.



    ஆதலால் அரசுக்கும் வேம்புக்கும் விவாஹம் செய்த பிறகே இந்த மரங்கள் ப்ரதக்ஷிணத்திற்கு அருகதை உள்ளதாக ஆகிறது.



    விரத பூஜா விதானம் புத்தகத்தில் அமாஸோம வார ப்ரதக்ஷிண பூஜை செய்முறை உள்ளது.


Working...
X