Announcement

Collapse
No announcement yet.

திருமணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமணம்

    திருமணம் நிச்சயமானவுடன் உடனே கிடைத்த சத்திரத்தைத் தேடி ஓடாதீர்கள். இன்றைய காலகட்டத்தில் பல கல்யாண சத்திரங்களில் சினிமா ஷூட்டிங், கட்சிக் கூட்டம் போன்றவை நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட சத்திரங்களில் திருமணம் செய்யும் முன் கணபதி ஹோமம், குலதெய்வ ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்துவிட்டுத்தான் பெண்ணும் பிள்ளையும் சத்திரத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
    திருமண மாலைகளை முதலில் கடவுளுக்குச் சாத்தி எடுத்துவந்து மணமக்களுக்குச் சாத்துங்கள். அனைத்து தோஷங்களும் நீங்கும். தாலியைத் தட்டில் வைத்து ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்வது மிகப்பெரிய தவறு. பழுத்த வயதான ஜோடி, நம் நலனை நாடும் குடும்பஸ்தர்கள் அல்லது 5 பழுத்த சுமங்கலிகள் இவர்களிடம் மட்டும் தாலியைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
    தாலிகட்டும்போது; பெண்ணின் அப்பாவை ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் இருத்தி அவர் மடியில் பெண்ணை அமர்த்தித் திருமணம் செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு. முதலில் அரைமூட்டை நெல் வைக்கப்பட்டு, அதை நெல் கோட்டை என்பார்கள். அதன்மீது கதராடை வஸ்திரம் போட்டு அதன் மீது பெண்ணின் தந்தை அமர வேண்டும். பிறகு தந்தையின் மடியில் பெண் அமர்ந்து கொண்டதும் மாப்பிள்ளை தாலி கட்டவேண்டும். வசதியுள்ளவர்கள் மணப் பெண்ணுக்கு ஒரு கூரைப்புடவை, தாலி வாங்குவது போலவே மற்றொரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு வாங்கித் தரவேண்டும். வசதி இல்லாதவர்கள் நூல் புடவையும் மஞ்சள் தாலியும் தரலாம்.
    ஊஞ்சலின் போது பெண்ணும் பிள்ளையும் எக்காரணம் கொண்டும் காலைத் தரையில் ஊன்றக் கூடாது! கூடியவரை பெண் பிள்ளையின் கைகளைக் குலுக்க வேண்டாம்!

    தற்சமயம் நிச்சயதார்த்தம் அன்றே மோதிரம் போடுவது, மாலை மாற்றுவது போன்றவற்றைச் செய்கிறார்கள். இது பெரும் தவறு.
    ரிசப்ஷன் என்ற பெயரில் முதல் நாள் நாந்தி விரதமும் மறுநாள் பாணிக்ரஹ ஹோமமும் நடத்திய இடத்தில் சினிமாப் பாட்டுகள் பாடப்படுவதும் மெல்லிசைக் கச்சேரி என்ற பெயரில் கூத்தடிப்பதும் மிகவும் தவறு. அதற்குப் பதிலாக உயர்ந்த எண்ணத்துடன் 21 வைதீகர்களை வைத்து விஷ்ணுசகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீலட்சுமி சகஸ்ரநாமம் செய்து அந்த இடத்தின் புனிதத்தைக் காப்பது மிகவும் அவசியம்.
    ("உங்களுடன் பேசுகிறேன்' என்ற நூலில் ஜோதிடர் குடவாசல் கோபால சர்மா.)


    Source:Indian Brahmins Forum

Working...
X