Announcement

Collapse
No announcement yet.

அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

    அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்..

    தமிழ் வருடம், தமிழ் மாதம் வருகின்ற பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு குழந்தையின் தகப்பனார் வீட்டில் செய்ய வேண்டும்.
    குழந்தையின் தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..

    பத்ரிக்கை அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டிலேயே செய்வதுதான் சிறப்பு.

    ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ணீர், கப்,(தண்ணீர் குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.

    உங்கள் குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.

    குழந்தையின் பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம், மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வீபூதி, அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண் தரித்துக் கொள்ளவும்.

    ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும். ,
    தம்பதிகள் இருவரும் ஸ்வாமி பட்த்திற்கு அருகில் குத்து விளக்கு
    கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி

    குல தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு மஞ்சள் தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்று க்கொண்டு


    பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம் செய்து பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.

    “ருத்யாஸ்ம ஹவ்யைர் நமஸோ (உ)பஸத்ய.; மித்ரம் தேவம் மித்ர தேவந்தோ அஸ்து. அநூராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ் ஸவீரா:” தீர்காயுஷ்ம(அ)ஸ்து.

    தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைபழம், புஷ்பம், தக்ஷிணை வைத்துகொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்ல வேண்டும்..

    அனுக்ஞை: ஹரி; ஓம். நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ; பதயே நமஸ்ஸகீணாம் புரோகானாம் சக்ஷூஸே நமோதிவே நம: ப்ருத்வ்யை ஹரி.ஓம். ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:.

    என்று சொல்லி அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீழே வைத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.

    அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய.

    இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ அவர்கள் குடும்பதிலுள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முத்லியவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக்கொள்ளவும்.

    ---------------நக்ஷத்திரே ------------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண: மம ஜனகஸ்ய (அப்பா).
    ----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா:-------------நாம்ன்யா: மம ஜநந்யா:
    (அம்மா)

    ----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதஸ்ய ------------சர்மண: மம
    (கர்த்தா)

    -----------------நக்ஷத்திரே----------ராசெள ஜாதாயா ---------------நாம்ன்யா:மம தர்ம பத்ன்யா: (மனைவி)

    ---------------நக்ஷத்திரே----------ராசெள--------ஜாதஸ்ய-------------சர்மன:மம குமாரஸ்ய
    (புத்ரன்),.

    -----------------நக்ஷத்திரே----------ராசெள---------ஜாதாயா:--------------நாம்ன்யா: மம குமார்யாஹா.
    (புத்ரி).
    இது போல் கூறிக்கொள்ள வேண்டும்.

    ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம் ஆயுஷ்மத் ஸத் சந்தான ஸம்ருத்யர்த்தம் , சமஸ்த மங்கள அவாப்த்ருத்யர்த்தம் சமஸ்த துரித

    உபசாந்த்யர்த்தம் ஸமஸ்த அப்யுதய அர்த்தஞ்ச தர்மா அர்த்த காம மோக்*ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்தியர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஆவயோ; மம குடும்பயோ: ஸ : பரிவாரகயோ; சர்வேஷாம் ஜன்ம லக்ன

    அபேக்*ஷயா சந்த்ர லக்ன அபேக்*ஷயா ச ஆதித்யாதீனாம் நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:தேஷாம்

    க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் யே யே க்ரஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதாஸ்ச தேஷா ம். கிரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருவ ஸித்யர்த்தம் (விஷேசேண) ஆயுஷ்ய ஹோமம்

    (ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவரின் -------------நக்ஷத்திரே---------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண அல்லது (---------- நக்ஷத்திரே--------------ராசெள--------------
    ஜாதாயா:: --------------நாம்ன்யா:-மம--------------ஜன்மாப்தே அதீதே------------தமே புந; ப்ராப்தே ஜந்ம மாஸே ஜன்ம ருக்ஷேந---------வாஸர ஸம்யோகேந ச அப்தபூர்த்யா யோதோஷ; சமஜநி தத் தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த

    ஆயுஷ:அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸஹாயேந போதாயன உக்த ப்ராகாரேன கல்போக்த ப்ரகாரேண

    ச ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச ஸமித், அன்ன ஆஜ்ய ஆஹூதிபி;
    யதோக்த ஸங்க்யா காபி : ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம பூர்வகம் ஆயுஷ்ய ஹோமாக்ய கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹானா. தக்*ஷிணை கொடுத்து விட்டு விக்னேச்வர பூஜை செய்ய வேன்டும்.

    (பிராமணாள் ப்ரதிவசனம் யோக்கியதா ஸித்திரஸ்து).


    விக்னேஷ்வர பூஜை:
    கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

    ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

    சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,

    உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

    சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா

    என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).


    சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

    கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

    ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது

    ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

    அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

    பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

    ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

    வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

    புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

    ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

    தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

    விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

    நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே


    மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

    தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

    ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;

    ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.

    நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

    தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

    கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

    கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
    மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி

    வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

    ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

    அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

  • #2
    Re: அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

    ப்ரதான சங்கல்பம்.
    தர்பேஸ்வாஸீந: நான்கு தர்பத்தை காலுக்கடியில் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்,. தர்பாந்தாரய மான: நான்கு தர்பத்தை மோதிர விரலில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்.

    பத்ந்யா ஸ;( என்று நான்கு தர்பத்தை மனைவியின் கையில் கொடுத்து தனது வலது தோளில் நுனி படும் படி பிடித்து இருவரும் சேர்ந்து ஸங்கல்பம் செய்து கொள்ளவும்.

    தலையில் ஐந்து முறை குட்டிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..

    ப்ராணாயாமம்.
    (வலதுபுற கைச்சுண்டு விரல் மோதிர விரல்களால் இடது நாசி த்வாரத்தை அழுத்தி , வலது நாசியால் உள் காற்றை வெளியே விடணும்.. பிறகு கட்டை விரலால் வலது நாசியை மூடி , இடது நாசியால் காற்றை உள்ளே இழுத்து ,இரு த்வாரங்களையும் மூடி , மந்த்ரத்தை சொல்ல வேண்டும்..

    ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம். ஜன: ஓம். தப: ஓகும் சத்யம். ஓம். தத்ஸ விதுர்வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீமஹீ தியோயோன: ப்ரசோதயாத்.ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

    (இப்போது வலது நாசியால் மெல்ல மெல்ல காற்றை வெளியே விடணும்.. வலது காதை தொட வேண்டும்.)

    ஸங்கல்பம்: (வலது தொடை மேல் இடது கையை நிமிர வைத்து க்கொண்டு வலது உள்ளங்கையை மூடிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.)

    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் . சுபே சோபனே முஹூர்த்தே ,

    ஆத்ய ப்ருஹ்மண; த்வீதீய பரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே பரதஹ் கண்டே , மேரோ:

    தக்ஷிணே பார்ஸ்வே , ஷாலிவாகன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே , வ்யவஹாரிகே ,ப்ரபவாதி,
    ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே--------------நாம ஸம்வத்ஸரே--------
    அயனே-------------ருதெள -------------மாஸே--------------பக்ஷே-----------------சுபதிதெள-----------
    வாஸர யுக்தாயாம்--------------நக்ஷத்திர யுக்தாயாம்,----------------யோக----------கரண

    ஏவங்குண விஷேசண ,விசிஷ்டாயாம், அஸ்யாம்---------------சுபதிதெள, மமோ
    பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

    (இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ , அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முதலிவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக் கொள்ளவும்.)

    ----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய-----------------சர்மண; மம ஜனகஸ்ய
    ----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------------நாம்ன்யா: மம ஜந்ந்யா:
    ----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய…………………….சர்மண: மம

    ----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------நாம்ன்யா: மம தர்மபத்ன்யா
    ---------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய--------------சர்மண: மம குமாரஸ்ய
    ---------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா: ---------------நாம்ன்யா: மம குமார்யா::

    (இது போல் கூறிக்கொண்டு).
    ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ்தைர்ய தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யானாம் அபிவ்ருத் யர்த்தம் ஆயுஷ்மத் சத்ஸந்தான ஸம்ருத் யர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்த்யர்த்தம் ஸமஸ்த துரித

    உபசாந்த்யர்த்தம் ஸமஸ்தாப்யுதய அர்த்தஞ்ச தர்மா, அர்த்த, காம, மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் ,. ஆவயோ:, மம ஸஹ குடும்பஸ்ய ஜன்ம லக்ன அபேக்ஷயா சந்த்ர லக்ன

    அபேக்ஷயா நக்ஷத்திர தசா புக்தி அபேக்ஷயாச கால சக்ர அபேக்ஷயாச
    யே யே க்ரஹா:, சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: தைஸ்தை: க்ரியமான கரிஷ்யமாண ஸுசித பாவித ஆகாமி வர்த்தமான துஷ்டாரிஷ்ட

    பரிஹாரத்வாரா தத்தத் க்ரஹஸ்ய துஸ்தாந ஸ்தித்யா ஸம்பாவிதா ஸகல பீடா பரிஹாரார்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல அவாப்த்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் நக்ஷத்ர தேவதா ப்ரீத்யர்த்தம் , ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு

    செய்கிறோமோ அவாளுடைய நக்ஷத்ரம் பெயர் சொல்ல வேண்டும். விசேஷேண ------------நக்ஷத்ரே ---------ராசெள -----ஜாதஸ்ய-------சர்மண; மம ----------ஜன்மாப்தே அதீதே ------தமே புந: ப்ராப்தே ஜன்ம மாசே ஜன்ம ருக்ஷேந------வாஸர சம்யோகேநச அப்தபூர்த்யா யோதோஷ: சமஜனி தத்தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த ஆயுஷ: அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு

    பரிஹாரார்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் , ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்
    ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸாஹாயேந போதாயண உக்த ப்ரகாரேண ஆயுஷ்ய ஹோம பூர்வகம் ஸமித், அன்ன, ஆஜ்ய ஆஹூதிபி:

    யதோசித சங்க்யா காபி : அதிதேவதா, ப்ரதிஅதி தேவதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோமாக்யஞ்ச ஆசார்யமுகேந ருத்விக் முகேனச அத்ய கரிஷ்யே.( கையில் இடுக்கி உள்ள தர்பத்தை வடக்கே போடவும்.

    மனைவி கையில் தர்பத்தை வாங்கிக்கொண்டு மந்த்ரம் சொல்லவும். பூர்வோக்த பல ஸித்யர்த்தம் ஆயுஷ்ய ஹோம பூர்வக ஆதித்யாதி நவகிரக ஜப ஹோம கர்ம கரிஷ்யே.

    தர்பத்தை வடக்கே போட்டுவிட்டு கையை அலம்பி கொள்ளவும். மனைவி கையில் ஜலம் கொடுத்து அலம்பி கொள்ள சொல்லவும்.

    விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்..

    கணானாம்த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்.. ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ரஹ்மணஸ் பத ஆன ஸ்ருண்வணூ திபிஸ்ஸீத ஸாதனம்.

    அஸ்மாத் பிம்பாத் ஶ்ரீ மஹகணாபதிம் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. என்று புஷ்பத்தை போடவும்.

    (சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாயச) என்று வடக்கே நகர்த்தவும்.

    இனி கிரக ப்ரீதி.

    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அதஷாந்திம் ப்ரயஸ்சமே. ஆவாப்யாம் ஸங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஆயுஷ்ய ஹோம ஆரம்ப முஹூர்த்த லக்ன அபேக்ஷயா ஆதித்யாதீனாம்

    நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் இதம் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ஸ்வரூபேப்ய: ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே ந மம.

    ஆசார்ய வரணம்.:

    கையில் தர்ப்பை கட்டை எடுத்து நுனி பக்கம் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வாத்யாரிடம் கொடுக்கவும். மந்த்ரம்.

    ஆசார்யஸ்து யதா ஸ்வர்கே சக்ராதீநாம் ,ப்ருஹஸ்பதி: ததா த்வம் மம
    யக்ஞேஸ்மின் , ஆசார்யோபவ , ஸுவ்ரதா. ஆவாப்யாம் சங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்மணி

    ஸகல கர்ம கர்த்தும் ஆசார்யம் த்வாம் வ்ருனே.. (வாத்யார் பதில்).
    வ்ரதோஸ்மி கரிஷ்யாமி. கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு மந்த்ரம் சொல்லி வைதீகாள் அனைவர் தலையிலும் போடவும்.

    ஸர்வேப்ய: ப்ராஹ்மணேப்யோ நம: : வைதீக ஸதஸை பார்த்து சொல்லவும்.
    யூயம் ஆவாப்யாம் சங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம குருத்வம்.

    (வைதீகாள் பதில்----வயம் குர்ம:

    இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

    சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

    ஆதித்யாதி நவகிரஹ ,ஜப ஹோம, புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம கரிஷ்யே. ததங்கம் மண்டபாதி சுத்யர்த்தம் ,ப்ரதிமா சுத்யர்த்தம், க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)


    ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.

    ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

    கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

    கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

    ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

    அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

    ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

    ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

    பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

    தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
    பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

    ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

    கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

    கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
    கும்பத்தில் தேங்காய் வைக்க;

    நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
    தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

    வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

    யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

    அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

    ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
    உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

    அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

    தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


    பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
    ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

    ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
    கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

    ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

    கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
    பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

    புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்

    Comment


    • #3
      Re: அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

      ; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

      யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

      ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

      ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

      ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

      Comment


      • #4
        Re: அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

        ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

        தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

        ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
        பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
        பூஜா மண்டப


        பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
        பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

        (1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
        யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

        (2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

        (3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

        (4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

        (5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

        ப்ராசநம்:
        அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
        வருண பாதோதகம் சுபம்..

        Comment


        • #5
          Re: அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

          A very useful post,especially for those abroad who may not have vedic pundits.
          Relatives,say,grandfather can conduct this with a few of his friends deputising for other Brahmins.
          Is it not?
          Thanks
          Varadarajan

          Comment


          • #6
            Re: அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம்.

            வேதி ஹோம குண்டம் அமைக்கும் முறை.:

            ஹோமம் செய்ய இருக்கும் இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் ஹோமகுண்டத்தை வைக்கவும். ஹோமகுண்டம் இல்லை என்றால் மணலை

            சதுரமாக பரப்பி சுற்றிலும் செங்கல்லைக்கொண்டு வேதி அமைத்துக்கொள்ளலாம்.

            கிண்ணத்தில் ஜலம் வைத்துக்கொள்ளவும் .இன்னொரு கிண்ணத்தில் அக்ஷதை எடுத்து வைத்துக்கொள்ளவும்
            .
            நுனி தர்பை அடங்கிய கட்டு ஒன்றை வலது பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.
            ஹோம குண்டத்தின் அடி பாகத்தில் தர்பை கட்டின் அடி பாகத்தால் அல்லது ஹோம குச்சியினால் மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கியவாறு

            முதலில் தெற்கிலும், இரண்டாவது நடு பாகத்திலும் மூன்றாவதாக வடக்கிலும் என மூன்று கோடுகள் போடவும்.

            அதை போலவே தெற்கிலிருந்து வடக்கே முடிவதாக மேற்கு நடு பாகம் கிழக்கு என்ற வரிசையில் மூன்று கோடுகள் போடவும்.

            கையில் இருக்கும் தர்பையின் அடி பாகத்தை அல்லது ஹோம குச்சியை வேதியில் வைத்து ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஹோம குச்சியை அல்லது தர்பையினடி பாகத்தை தென் மேற்கு மூலையில் போடவும்.

            பிறகு ஜலத்தை தொடவும்.. பாக்கி ஜலத்தை கீழே கிழக்கு பாகத்தில் கொட்டிவிடவும்.. ப்ரஹ்மசாரி செய்வதாக இருந்தால் அக்னி குண்டத்திலேயே கற்பூரத்தை கொண்டு அக்னி வளர்த்த வேண்டும்.

            கிரஹஸ்தனாக இருந்தால் வீட்டிலுள்ள பெண்மணி பித்தளை தட்டில் அக்னி தணல் கொண்டு வர வேண்டும். அந்த தட்டை கையில் ஏந்தியபடி கிழக்கு திசையில் மேற்கு முகமாக நின்று கொண்டு பூர்புவஸ்ஸுவரோம்

            என்று சொல்லி அக்னியை மெதுவாக ப்ரதிஷ்டை செய்யவும். அக்னி கொண்டு வந்த தட்டில் அக்ஷதை, ஜலம் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் ஜலம் நிரப்பி ஹோம குண்டத்தின் கிழக்கே வைக்கவும். அக்னிமித்வா என்று

            சொல்லி ஒரு சமித்தை அக்னியில் வைக்கவும். அக்னி ப்ரஜ்வால்ய என்று சொல்லி அக்னியை ஜ்வாலையாக ப்ரகாசிக்கும்படி செய்யவும்.

            ஹோம குண்டத்திற்கு கிழக்கு திசையில் வடக்கு நுனியாக 16 தர்பைகளையும், தெற்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளையும் மேற்கே வடக்கு நுனியாக 16 தர்பைகளையும் வடக்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளை போடவும்.

            தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள் ,

            வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும் பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12 தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன தர்பைகள்; ப்ரணீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.

            . நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.

            பெரிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு =ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணீம் என்று பெயர்..

            ஜல பாத்ரம்= இதற்கு ப்ரணீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி =இதற்கு இதர தர்வீ என்று பெயர்.; இத்மம்=விஷேசமான ஸமித்து எனறு பெயர் .

            இந்த ஆறு பொருட்களையும் (தர்வீ, ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணீம், ப்ரணீதா, இதர தர்வீ, இத்மம்) வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் ((பாத்ர ஸாதன தர்பைகள்)) தர்பைகளின் மேல் மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.

            ஆயாமத தர்பைகள்=ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.

            இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும் பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.

            ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.

            அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை நகர்த்தவும்.

            பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்

            வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..

            வடக்கிலிருந்து ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தன்க்கு எதிறில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில் அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.

            ப்ரணீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணீதா பாத்ரதிற்காக போடப்பட்ட தர்பைகளின் மேல் வைத்து வருணாய நம: சகல ஆராதனை: சுவர்ச்சிதம் என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு வைக்கவும்.

            Comment

            Working...
            X