Announcement

Collapse
No announcement yet.

பஞ்ச கவ்யம் செய்முறை.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்ச கவ்யம் செய்முறை.

    பஞ்ச கவ்யம் செய்முறை விளக்கம்.
    ஆசமனம்:-அச்யுதாய நமஹ======தாமோதரா.
    வலது கை மோதிர விரலில் இரண்டு தர்பை புல்லாலான பவித்ரம் அணியவும்.

    பவித்ரம் அணிய மந்திரம்:ருத்த்யாஸ்ம ஹவ்யைர் –நமஸோப சத்ய . மித்ரம் தேவம் மித்ர தேயந்நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த:சதஞ்ஜீவேமசரத்ஸ்ஸவீரா:

    ஆஸநத்தின் கீழ் 4 தர்பைகளை வடக்கு நுனியாக தர்பேஷ்வாஸீந:என்று சொல்லி கொண்டே போட்டுக்கொண்டு ஜலத்தை தொடவும். ஜலத்தை தொடும் போது அப உப ஸ்பர்ஸ்யா என்று சொல்லவும்.

    கிழக்கு முகமாக உட்கார்ந்துக் கொண்டு வலது கை மோதிர விரல் இடுக்கில் பவித்ரத்துடன் 4 தர்பை பில்லை இடுக்கி கொள்ளவும்,.தர்பைகளை இடுக்கி கொள்ளும் போது தர்பாந் தாரயமாணஹ என்று சொல்லவும்.

    ஸ்தண்டிலம் தயார் செய்தல்: சுத்தமான இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும்.அதன் மேல் கோதுமையை அல்லது நெல்லை பரப்பவும்

    . அதன் மேல் வாழை இலையை வைத்து பச்சரிசியை பரப்பவும். அதன் மத்தியில் பத்மம் வரையவும்.

    சுக்லாம்பரதரம் விஷ்ணும்=+++ஸர்வ விக்னோபசாந்தயே.

    ப்ராணாயாமம்.ஓம் பூஹு+பூர்புவஸ்ஸுவரோம்.

    சங்கல்பம்: மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் சுபே சோபநே முஹுர்தே ஆத்ய ப்ருஹ்மன: த்வீதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே,

    கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்*ஷினே பார்ச்வே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்தமாநே வ்யாவஹாரிகாணாம் ப்ரபவாதீணாம் ஷ்ஷ்டியாஹ ஸம்வத்ஸராணாம் மத்யே -----------நாம ஸம்வத்சரே--------அயநே
    -----------ருதெள---------மாஸே------------பக்*ஷே-----------ஷுப திதெள, ஆத்ம சுத்யர்த்தம்
    த்வகஸ்தி தோஷ நிவ்ருத்யர்த்தம் பஞ்கவ்ய சம்மேளநங் கரிஷ்யே.

    ஸ்தண்டிலம் தயார் செய்து அந்த தான்ய மேடையில் ஆறு பாத்திரங்கள் வைக்கவும். நடுவில் வைக்கும் பாத்ரம் சற்று பெரிதாக இருக்க வேன்டும்.
    முதலாவதாக நடுவில் உள்ள பெரிய பாத்திரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும். ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத்.

    இந்த பாத்திரத்திற்கு கிழக்கே உள்ள பஸுஞ் சாணி உள்ள பாத்ரத்தை கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி தொடவும்.

    தெற்கே வைத்திருக்கும் பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ் ஸோம விருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே என்று சொல்லி தொடவும்.

    மேற்கே வைத்திருக்கும் பஸுந்தயிர் பாத்ரத்தை ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்னோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத். என்று சொல்லி தொடவும்.

    வடக்கே வைத்திருக்கும் பசு நெய் பாத்ரத்தை சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி தொடவும்.

    வட கிழக்கே உள்ள தர்பை ஜலம் உள்ள பாத்திரத்தை தேவஸ்யத்வா சவிது: ப்ரஸவே அஷ்வினோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாத்தே என்று சொல்லி தொடவும்.

    மீண்டும் நடுவில் உள்ள பாத்ரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும்.

    பசுஞ்சாணியை எடுத்து கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதாணாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.

    பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ்ஸோம வ்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய சங்கதே என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.

    தயிரை எடுத்து ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத் என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

    நெய்யை எடுத்து சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

    தர்பை ஜலத்தை எடுத்து தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாதத்தென்று சொல்லி கொண்டே நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

    நடு பாத்ரத்தை நன்றாக கலக்கவும் ப்ரணவம் என்னும் ஓம் சொல்லிக்கொண்டே. இந்த பஞ்ச கவ்யத்தில் பசு தேவதையை
    பூஜிக்கவும்.

    பசு மூத்ரம் 35 கிராம் அளவு என்றால், பசுஞ் சாணி கட்டை விரல் அளவு, பசும் பால் 245 கிராம். பசுந்தயிர் 105 கிராம், பசு நெய் 35 கிராம்; தர்பை ஜலம்

    35 கிராம். இது தான் ஒவ்வொன்றுக்கும் அளவு. ஆக நடுவில் உள்ள பாத்திரம் 500 கிராம் கொள்ளக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும்.

    கோ தேவதா ஆவாஹண மந்திரம்: ஆகாவோ
    அக்மந்துதபத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹாநா.

    அஸ்மிந் பஞ்ச கவ்யே கோ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி.

    உபசாரங்கள். பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆஸநம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி. அர்க்யம் சமர்பயாமி. ஆசமநீயம் சமர்பயாமி. ஸ்நாநம் சமர்பயாமி. ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் சமர்பயாமி; வஸ்த்ரோதரீயம்

    சமர்பயாமி. ஊபவீத ஆபராணானி சமர்பயாமி. கந்தந் தாரயாமி. அக்*ஷதான் சமர்பயாமி; புஷ்ப மாலாம் சமர்பயாமி; புஷ்பை பூஜயாமி

    ஓம். கோ தேவதாயை நம:; காமதேநவே நம: கமலாயை நம: கருணாநிதயே நம: கல்யாண்யை நம: குந்தர தநயாயை நம: விமலாயை நம: வத்ஸ வத்ஸலாயை நம: நந்தின்யை நம: சபலாயை நம:தேநவே நம:

    திலீப வரதாயை நம: தயாயை நம: பாபஹீநாயை நம: பயோதாத்ர்யை நம: பாவநாயை நம: பல்லவாருணாயை நம: வஸிஷ்ட வரதாயை நம: வந்த்யாயை நம: விச்வாமித்ர பய தாயை நம:

    ஹவி: ப்ரதாயை நம: ஹத கலாயை நம; ஸர்வ தாயை நம: ஸர்வ வந்திதாயை நம: கோ தேவதாயை நம: நாநா வித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

    தூபம் ஆக்ராபயாமி. தீபம் தர்சயாமி. வாழைப்பழம் நைவேத்யம்.

    ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோ யோனஹ ப்ரசோதயாத்..தேவஸவித: ப்ரஸுவ: ஸத்யம் த்வர்தேந பரிஷிஞ்சாமி; அம்ருதோபஸ் தரணமஸி. ஒம் ப்ராணாய ஸ்வாஹா:

    ஓம் அபானாய ஸ்வாஹா: ஒம் வ்யாநாய ஸ்வாஹா: ஓம் உதாநாய ஸ்வாஹா: ஓம் ஸமாநாய ஸ்வாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா; கதலி பலம் நிவேதயாமி. நிவேதா னந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி.

    தாம்பூல ஸமர்ப்பணம்.; பூகி பல ஸமாயுக்தம் நாகவல்லி தலைர்யுதம் கர்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.

    கற்பூர நீராஜனம். தர்சயாமி. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி .தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

    ஸமஸ்தோ பசாராந் சமர்பயாமி. ஜபம் தொடங்க வேண்டுதல். கோ ஸூக்த ஜபகர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:கோ ஸூக்தம் ஜபதி

    ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே. ப்ரஜாவதி: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷ்ஸோ துஹாநா: இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச சிக்*ஷதி. உபேத்ததாதிநஸ்வம் முஷாயதி. பூயோ பூயோரயிமிதஸ்ய வர்தயந்ந்.

    அபிந்நே கில்லேநிததாதி தேவயும். ந தா நசந்தி ந தபாதி தஸ்கர; நைநா அமித்ரோ வ்யதிராத தர்ஷதி.. தேவாகும்ஸ்ச யாபிர் யஜதே; ததாதி ச ஜ்யோகித்தாபி:

    ஸசதே கோபதிஸ்ஸஹ .ந. தா அர்வா ரேணுககாடோ அச்நுதே. நஸகும் ஸ்க்ருதத்ர முபயந்தி.தா அபி. உருகாயம பயந்தஸ்ய தா அநு.. காவோ மர்த்யஸ்ய விசரந்தி யஜ்வந:.

    காவோபகோ காவ இந்த்ரோ மே அச்சாத்..காவஸ்ஸோமஸ்ய ப்ரதமஸ்ய பக்*ஷ: . இமா யா காவஸ் ஸஜநாஸ இந்த்ர:.. இச்சாமீத் த்ருதா மனஸா சிதிந்த்ரம்,யூயங் காவோ மேதயதா க்ருசஞ்ஜித் அச்லீலம் சித் க்ருணுதா

    ஸுப்ரதீகம். பத்ரங்க்ருஹங் க்ருணுத பத்ரவாச: . ப்ருஹத்வோவய உச்யதே ஸபாஸு.
    ப்ரஜாவதீஸ் –ஸூயவஸகும்ரிஸந்தி ..சுத்தா அபஸ்ஸு ப்ரபாணே பிபந்தீ:. மாவஸ் ஸ்தேந ஈசதமா அகசகும்ஸ: பரிவோ ஹேதி ருத்ரஸ்ய

    வ்ருஞ்ஜ்யாத் .உபேத முப பர்சநம் . ஆஸுகோஷூ பப்ருச்யதாம். உபர்ஷ பஸ்ய.ரேதஸி உபேந்திர தவ வீர்யே. ஓம் ஷாந்தி: ஷாந்தி; ஷாந்தி;

    புநர் பூஜை: பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆசநாதி ஸமஸ்தோபசாராந் ஸமர்பயாமி.

    கோ தேவதா யதாஸ்தாந மந்திரம்.; ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்த் . ஸீதந்து கோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷஸோ துஹாநா:

    அஸ்மாத் பஞ்கவ்யாத் ஆவாஹிதா கோ தேவதா: யதாஸ்தாநம் ப்ரதிஷ்டா பயாமி. ஷோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச .

    பவித்திரத்தை காதில் வைத்துக்கொள்ளவும்.

    பஞ்ச கவ்யம் உட்கொள்ளும் போது சொல்வதற்கான மந்திரம்.
    .
    யத் த்வகஸ்திகதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே. ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத் வக்நிரி வேந்தநம்.

    . பஞ்ச கவ்யம் உட்கொள்ளவும்.பவித்ரத்தை அவிழ்த்து விடவும். ஆசமனம் செய்யவும்..

    பசு மூத்திரத்தில் வருணனும் சாணத்தில் அக்நியும், தயிரில் வாயுவும், பாலில் சந்திரனும், நெய்யில் ஸூர்யனும். உள்ளார்கள்.

    பால் தரித்திரத்தை போக்கும்.. தயிர் ஸந்தான விருத்தி அளிக்கும்; பசு மூத்திரம் ஸர்வ பாபங்களையும் போக்கும். பசுஞ்சாணியால் வியாதி நீங்கும். நெய் மோக்ஷத்தை கொடுக்கும்.

    வேறொரு கர்மாவின் அங்கமாக இல்லாமல் , தனியாக செய்யும் போது சதுர்தஸி அன்று உபவாசம் இருந்து , பெளர்ணமி அன்று விடியற் காலையில் பஞ்ச கவ்யம் சாப்பிட வேன்டும்.





    .
Working...
X