Announcement

Collapse
No announcement yet.

ACHAMANAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ACHAMANAM

    ACHAMANAM

    • Achamanam is a purificatory process (both internal and external). Hence it is performed in all vedic rites both in the beginning and at the end.
    • Extract from Bhavan's journal (Oct 1971)
      Achamanam, that is the sipping of water with Mantras (one sipping for each mantra) will remove all the ills of the body and mind. This is called "Nama thrayi vidya" or the worship with the three names, which will cure all diseases - physical and mental. There is a well known sloka to the effect that the medicine constituting the repetition of the three names of the Lord "Achuta", "Ananta" and "Govinda" will cure all diseases.
    • In Kukustana, we apply pressure on the toes of our body. This helps in healthy functioning of pituitary, thyroid and adrenal glands (glands responsible for good health) and the rhythm of the heart.
    • Achamanam is believed to energize our body and help in maintaining good health.
    • According to the systems of natural therapy, our body is composed of five elements - namely fire, air, space or ether, earth and water. Their balance in our body is linked to the flow of bio-electricity in our body (for good health). The tips of fingers are also terminal points for Bio-electricity. Contacts with fingers help in the balance of basic elements or Bio-electricty in our body as
      • Thumb - Fire or Sun
      • Index Finger - Wind or Air
      • Middle finger - Sky or space or ether
      • Ring finger - Earth
      • Little finger - Water

    • The 12 names of the Lord used in Achamaneeyam are the same ones used , when we adorn the 12 Urdhva PuNDrams on the different parts of the body and are invoked to stay at different locations on the upper torso tod provide protection. The color of these 12 Moorthys , their favorite weapons and their locations have been described by Swamy Desikan in the Prabhandham named Panniru ThirunAmam.





    Source:http://www.ibiblio.org/sripedia/eboo...hamanam-n.html
    Last edited by Padmanabhan.J; 10-07-13, 20:18.

  • #2
    Re: ACHAMANAM

    ஆசமனம்:. பொதுவான விதிகள்.
    ஆசமனம் செய்யும் தீர்தத்தில் நுரை குமிழிகள் இருத்தல் கூடாது. உப்பு கரிக்க கூடாது. கலங்கியது, துர்நாற்றமுடயது சரகு போல் மிதப்பது கெட்ட இடத்திலுருந்து பெருகி வரும் தண்ணீர் கூடாது.

    வெந்நீரால் ஆசமனம் செய்ய கூடாது. வாஸனாதி திரவியம் ஏலக்காய், பச்சை கற்புரம் கலந்த தண்ணீரிலும் ஆசமனம் செய்ய கூடாது. பரிஷேசநம் செய்து மிகுந்த நீரில் ஆசமனம் செய்ய கூடாது.

    வேறு வழி இல்லை என்றால் அந்த பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது பூமியில் கொட்டி விட்டு , மீதமுள்ள நீரினால் ஆசமனம் செய்யலாம்.
    கை கால் முகத்தை அலம்பி கொண்டு கவனத்துடன் உபவீதியாக கிழக்கு, வட கிழக்கு, வடக்கு நோக்கி இரண்டு கைகளையும் முழங்கால் நடுவில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

    முழங்காள்களுக்கு வெளியே கைகளை வைத்து கொண்டும் , ஆஸனத்தில் அமர்ந்த வாறும் , தெற்கு, மேற்கு நோக்கியும் ஆசமனம் செய்ய கூடாது. போஜநத்திற்கு பிறகு மட்டும் அமர்ந்தவாறு ஆசமனம் செய்யலாம்..

    நின்று கொண்டு ஆசமனம் செய்ய கூடாது. நதியில், குளத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு ,இடது கையால் தண்ணீ. ரை தொட்டுக்கொண்டு ஆசமனம் செய்யலாம். இடக்கையில் 12 ஆதித்யர், வருணன் இருக்கிறார்கள்.

    வெண்கலம், தாமிரம், வெள்ளி ஆகியவற்றாலான பாத்திரங்களில் நீர் எப்போதும் சுத்த மாகவே இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த ஜலத்தை அப்படியே எடுத்து ஆசமனம் செய்துவிட்டு மீதம் உள்ள நீரை மீண்டும் உபயோகித்தல் கூடாது.

    உத்திரிணியால் நீரை எடுத்து ஆசமனம் செய்தால் பிறகு மீதமுள்ள நீரை மீண்டும் பயன் படுத்தலாம்.
    ஸ்நானம் செய்த பிறகும், சாப்பிட்ட பிறகும், திரவ பதார்தங்கள் பருஹிய பிறகும், தும்மிய பிறகும், தூக்கத்திற்கு பிறகும் முறைப்படி ஆசமநம் செய்ய வெண்டும்.

    கட்டை விரலின் அடி பாகத்தில் உள்ளது .ப்ரஹ்ம தீர்த்தம், சுண்டு விரல் அடியில் உள்ளது ரிஷி தீர்த்தம் அல்லது ப்ராஜாபத்யம் ,நான்கு விரல்களின் நுனி பாகத்தில் உள்ளது தேவ தீர்த்தம்.

    உள்ளங்கையில் ஆர்ஷம், ஆக்னேயம், செளம்யகம் என்ற தீர்த்தங்கள் உள்ளன. கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுப்பாகத்தில் உள்ளது .பித்ரு தீர்த்தம். நடுவிலுள்ள மூன்று விரல்கலின் அடியில் உள்ளது காய தீர்த்தம்.

    ஆசமனம் ப்ருஹ்ம தீர்தத்தால் செய்ய வேண்டும். நிர்வாபணம்.ஸம்ஷ்ரவனம், லாஜ ஹோமம் ஆகியவற்றை காய தீர்தத்தால் செய்ய வெண்டும்.

    பூஜை,பலி போடுதல்,ப்ரோக்*ஷ்னம் செய்தல், சாப்பிடுதல்,துடைத்தல் நித்ய ஹோமம் இவற்றை தேவ தீர்தத்தால் செய்ய வேன்டும். தயிர் சாப்பிடும் போதும், புதியதை சாப்பிடும் போதும் செளம்யகத்தாலும்,
    தானம் பெற்றுக்கொள்ளும் போது ஆக்னேய தீர்தத்தாலும் செய்ய வேண்டும்.

    வலது கையின் எல்லா விரல்களையும் சேர்த்து பசுவின் காது போல் செய்து ஜலம் விட்டுக்கொண்டு பிறகு சுண்டு விரலையும் கட்டை விரலையும் நீக்கி
    பாக்கி விரல்களுக்கு கீழே உள்ள உளுந்து மூழ்கும் அளவுள்ள ஜலத்தை மும்முறை சாப்பிடுவதே ஆசமனம்.எனப்படும்.

    தர்ப்ப பவித்ரம் தரித்து இருக்கையில் ஆசமனம் செய்ய கூடாது. பவித்ரம் கையிலிருந்து கழட்டி வலது காதில் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு மறுபடியும் வலது கை மோதிர விரலில் போட்டு கொள்ளவும்

    .விஷ்வேதேவர், பித்ரூவுக்கும் காலலம்போதும் பவித்ரம் கையில் இருக்க்கூடாது. காதில் இருக்க வேன்டும். கை விரலில் பவித்ரத்துடன் காபி,, தண்ணீர் அருந்த கூடாது.

    ப்ரபாஸாதி தீர்த்தங்கள் , கங்காதி நதிகள், ஆதித்யன், சந்த்ரன், வருணன், அக்னி வாயு ஆகியோர் வலது காதில் உள்ளதாக ஐதீகம். ஆசமனம் செய்ய முடியாவிட்டல் ,

    அல்லது ஆசமனம் செய்வதற்கு உகந்த ஜலம் கிடைக்காவிட்டால் , ஆசமனம் நிமித்தம் வலது காதை தொட வே4ண்டும்..அவ்வாறு செய்வது ஆசமனம் செய்வதற்கு ஒப்பானது.

    போஜனம்,, பக்*ஷணம் தின்பது, ஹோமம் செய்வது, தாநம் கொடுப்பது, தாநம் வாங்குவது ஆகியவற்றுக்கு பிறகு இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

    மாம்பழம், கரும்பு துண்டு. தாம்பூலம் ஆகியவை உட்கொணட பிறகு ஆசமனம் செய்ய தேவை இல்லை
    .
    விஷ்ணு பாத தீர்த்தம், ஷிவோதகம் ஆகியவை உட்கொண்ட பிறகோ முன்போ ஆசமனம் செய்ய கூடாது.

    Comment

    Working...
    X