Announcement

Collapse
No announcement yet.

seethala sapthami

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • seethala sapthami

    14-08-2021 சீதளா ஸப்தமி.






    எப்போதுமே தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள்.அசுர குரு சுக்கிராசாரியாரின் உதவியுடன் அசுரர்கள் தேவர்கள் மீது ஆபிசார ப்ரயோகம் செய்தனர்.






    இதனால் தேவர்கள் உடலில் வைசூரி போட்டியது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தலையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கை யிடமிருந்தும் ஒரு பேரொலி ஏற்பட்டது. இந்த பேரொலியே சீதளா தேவி என் அழைக்கபடுகிறாள். சிராவண மாத சுக்ல பக்ஷ ஸப்தமி அன்று இது நிகழ்ந்தது.






    ஆதலால் சீதளா தேவியை பூஜை செய்து தயிர் சாதம், வெள்ளறிக்காய் மாம்பழம் நிவேதனம் செய்து அதை தானம் செய்து விட வேண்டும்.






    ஒரு இலையில் தயிர் சாதம், ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காய் வைத்து நைவேத்யம் செய்து மம புத்ர பெளத்ராதி அபிவ்ருத்தி த்வாரா ஸபரிவார சீதளாதேவி ப்ரீத்யர்த்தம்






    சிராவண சுக்ல ஸப்தமி புண்ய காலே இதம் ஆம்ர பலம், கர்கடீ பல ஸஹித தத்யோதனம் சீதளா தேவி ப்ரீத்யர்த்தம் தானம் அஹம் கரிஷ்யே என்று சொல்லி தெய்வ ஸன்னிதியில் வைத்து விட்டு ஏழைகளுக்கு தானம் செய்துவிட வேண்டும்.






    உடலில் ஏற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி, முதலான பிணிகள் , நீண்ட நாட்களாக இருக்கும் வியாதிகள் நீங்கும். குடும்பத்திலும் இம்மாதிரி வியாதிகள் ஏற்படாது எங்கிறது கந்த புராணம






    12-08-2021- தூர்வா கணபதி விரதம்.


    சிராவண மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி அன்று தூர்வா கணபதி வ்ருதம்.
    இன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலம் போட்டு தரை முழுவதும் அருஹம் பில்லை=(தூர்வை) ..நிறைய பரப்பி அந்த அருகம்புல்லின் மீது கணபதியின் படமோ அல்லது விக்கிரஹமோ வைத்து 16 உபசார பூஜைகளும்


    அருகம் புல்லால் செய்யவும். கொப்பரை தேங்காய் அவல் நிவேதனம் செய்யவும் .கற்பூரம் காட்டி நமஸ்கரித்து முடிவில் கீழ் வரும் பத்து நாமாக்களால் அருகம் புல்லால் அர்ச்சனை செய்து கீழ் வரும் ஸ்லோகம் ப்ரார்தித்து கொள்ளவும்.


    1. கணபதயே நம: 2. உமாபுத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. ஏக தந்தாய நம: 5. இபவக்த்ராய நம: 6. மூஷிக வாஹணாய நம: 7. விநாயகாய நம: 8, ஈச புத்ராய நம: : 9. ஸர்வ ஸித்தி ப்ரதாயகாய நம: 10. குமார குரவே நம:


    கணேஸ்வர, கணாத்யக்ஷ கெளரீபுத்ர கஜானன வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாது த்வத் ப்ரஸ்ஸாதாத் இபாநந..


    இவ்வாறு இன்று பிள்ளையாரை அறுகம் புல்லால் நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.






    13-08-2021. நாக பஞ்சமி---கருட பஞ்சமி.
    கச்யபருக்கு கத்ரூ என்பவளிடம் உண்டானவர் நாகர். தாய் சொல்லை கேட்காததால் தாயே தீயில் விழுந்து இறக்கும்படி சபித்தாள். அந்த சாபத்தால் பல பாம்புகள் தீயில் மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை


    நிறுத்தி சாபத்தை அகற்றினார். அது இந்த சிராவண சுக்ல பக்ஷ பஞ்சமி திதி அன்று தான். ஆகவே இன்று பாம்புகளை பூஜித்தால் நன்மை உண்டாகும். ஆகவே இன்று பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி பூஜை செய்யலாம்.




    மேலும் வம்சத்தில் நல்ல குழந்தைகள் ஏற்படவும் ஏற்படாமல் செய்யவும் சக்தியுடையவர் நாகராஜா. .. ஸந்தானம் உண்டாக நாகப்ரதிஷ்டை செய்ய சொல்கிறது சாஸ்திர விதி. மஹா விஷ்ணு அனந்தன் என்ற பாம்பாக


    இருந்து கொண்டு பூமியை தாங்கி வருகிறார், அவருக்கு உதவியாக தக்ஷன் , வாஸுகி, கார்கோடன் என்ற பாம்புகளும் உள்ளன.


    தினசரி ஸந்தியாவந்தனத்தில் அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தோ என்று சொல்லி பாம்புகளை ப்ரார்திக்கிறோம்.


    வயலில் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்மணியின் நான்கு ஸஹோதரர்களை ஸர்ப்பம் தீண்டியது. அந்த பெண்மணி ஸர்ப்ப பூஜை செய்து ப்ரார்தித்து தனது சஹோதரர்களை காப்பாற்றினாள்...


    அதுவே நாக பஞ்சமி. ஆகவே இன்று ஸஹோதரிகள் தன் உடன் பிறந்த ஸஹோதரர்களின் நன்மைக்காக வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த பாம்பு பிம்பத்தையும், நடுவில் புஷ்பம் கட்டிய ஒரு மஞ்சள் சரட்டையும்


    பூஜை செய்து தனது வலது கையில் சரட்டை கட்டி கொள்ள வேண்டும் .வீட்டில் பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள பாம்பு புற்றுக்கு சென்று பால் விட்டு தாம்பூலம், பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி விட்டு


    வர வேண்டும் .புற்றுக்கு சென்று பால் விட்டு வர வசதி இல்லாதவர்கள் நாக பிம்பத்திற்கே பாலாபிஷேகம் செய்து விட வேண்டும்.


    வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் பூசி , குங்குமத்தால் மேலே வால் தலை கீழே பாம்பு படம் வரைந்து கற்புரம் ஏ ற்றி நமஸ்கரித்து விட்டு உள்ளே செல்ல வேண்டும்.


    பாம்பு புற்று மண் எடுத்து வந்து அத்துடன் சிறிது அக்ஷதை சேர்த்து ஸஹோதரர்கள் வெளியூரில் இருந்தால் தபாலில் அனுப்பலாம். உள்ளூரில் இருந்தால் நேரில் சென்று கொடுத்து ஸஹோதரர் வயதில் மூத்தவராக


    இருந்தால் நமஸ்காரம் செய்யலாம். சிறியவராக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம். ஸஹோதரர்களும் தன் சக்திக்கு தக்கப்படி ஏதாவது பொருளை அன்பளிப்பாக தாம்பூலத்துடன் ஸஹோதரிக்கு கொடுக்கலாம்..






    11-08-2021 ஆடிப்பூரம்..


    பொறுமையின் சின்னமான பூமா தேவி பக்தியால் இறைவனை அடையலாம் என்பதை எடுத்துகாட்ட ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்த நன்னாள் ஆடிப்புரம்.. துளசி தோட்டத்தில் அவதரித்தாள். கோதை என்று பெயர்சூட்டப்பட்டது.


    பெருமாளுக்கு சூட்ட பட வேண்டிய மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்ர்த்து கோவிலுக்கு அனுப்பிவிடுவாள்.பெருமாள் கோதை சூடிய மாலையையே நான் சூடுவேன். மலரால் மட்டும் அல்லாமல் மனதாலும் உம் பெண் என்னை ஆண்டாள் என்று குரல் எழுப்பினார்.


    ஆதலால் ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள். இறைவனையே துணைவனாக அடைந்த ஆண்டாளின் பிறந்த நாளை நாமும் கொண்டாடுவோம்.


    15-8-2021. Bhanu sapthami. 29-08-2021.
    பானு ஸப்தமி 15-08-2021 & 29-08-2021. அன்று. இது ஸூர்ய கிரஹணத்திற்கு சமமான நாள். காலை 8-30மணி முதல் 10-30 மணி வரை 1008 காயத்ரி ஜபம் ஸங்கல்பம் செய்து கொண்டு செய்யலாமே.


    மஹா சங்கடஹர சதுர்த்தி. 25-08-2021.


    சிராவண க்ருஷ்ண சதுர்த்தி.


    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்


    ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.


    “”சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்””


    இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு


    அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்


    ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி;
    ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;


    கெளரீ புத்ராய கணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:


    அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;


    விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி


    வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;


    21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;


    தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;


    ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்


    கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.


    1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் மயா தத்தம்
    கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம்,
    இதமர்க்கியம், இதமர்கியம்;


    2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்;
    இதமர்கியம், இதமர்க்கியம்.


    3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம்
    ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.


    4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய
    சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.


    கணபதியி “”ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா””


    என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.


    பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.


    இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
Working...
X