Announcement

Collapse
No announcement yet.

siratham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • siratham

    ஶ்ராத்த சமையலும் பரிமாறும் முறையும்🌺🌸🌸.
    நான் ஸ்மார்த்த வடமன். எங்க ஸம்ப்ரதாயம் ஜெனரலா எல்லாருக்குமே பொருந்தும். எக்செப்ஷன், குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடலாம். இந்த பதிவில் ஶ்ராத்த சமையல் மற்றும் பரிமாறும் முறை பற்றி சொல்லப்போறேன். பரிமாறும் போது எந்த வரிசையில் பரிமாறுவோமோ அந்த வரிசையில்
    சமையலை சொல்லப்போறேன்.


    பாலக்காட்டார் தவிர மத்தவா, ஶ்ராத்த சமையல்ல தேங்காய், மிளகாய், மிளகாய்ப்பொடி சேர்ப்பதில்லை. பிரண்டை-கறிவேப்பிலை துகையலுக்கு தவிர வேறெதற்கும் புளியும் சேர்ப்பதில்லை. காரம் & மணத்துக்கு மிளகு, சீரகம், உ.பருப்பு மூன்றையும் வறுத்த அரைத்த பொடிதான். பயத்தம்
    பருப்பு மட்டுமே தொன்னைபருப்பு, வெல்லபாயசம், பொரிச்சகூட்டு ரசம் இதுக்கெல்லாம். பாகல்,பலா, பிரண்டை மூன்றும் ரொம்ப ஸ்லாக்யம்.
    ப்ராம்ணார்த்தத்துக்கு ரெண்டு பேர் தான் (சில ஆத்துல விஷ்ணு இலைன்னு ஒண்ணு போட்டு பரிமாறுவா. ப்ராமணா சாப்பிடறச்சே விஷ்ணு இலைல யாரும் சாப்டமாட்டா)ஒவ்


    வொருத்தருக்கும் ரெண்டு ரெண்டு நுனி வாழையிலையை ஒண்ணுமேல ஒண்ணா போடணும்.கீழ் இலையின் மேல்பா
    கத்தை விட்டுவிட்டு கீழ்பாகத்தை மறைக்கிற மாதிரி போடணும். பித்ருவா வரிக்கப்பட்ட ப்ராம்ணர் வடக்கே பார்த்தும், விஸ்வேதவர் கிழக்கு பார்த்தும் உட்காரும் வண்ணம் இலை போடணும். உட்காருபவரின் இடப்பக்கம் தீர்த்த பாத்ரம் வைக்கணும். ப்ராம்ணா பரிசேஷனம் பண்ற வரைக்கும் எல்லா பதார்த்தங்களையும் முதல்ல விஸ்வேதேவருக்கும் அடுத்து பித்ருவுக்கும் பரிமாறணுm

    பரிசேஷனம் பண்ணீட்டு சாப்பிட ஆரம்பிச்சதும் பொரிச்ச கூட்லேர்நது தயிர் வரைக்கும் எப்டிவேண்ணாலும் போடலாம். சாப்பிடும் ப்ராம்ணர் இலையின் வலது கோடி அடிப்பாகத்தில் பாயசம் துவங்கி அப்ரதக்ஷணமாக(anti clockwise ) பரிமாறணும். ஆரம்பத்துல இலைக்கு நடுவுல அபிஹாரம்(கொஞ்சூண்டு நெய் விடுதல்) பண்ணீட்டு பரிமாற ஆரம்பிக்கணும். அடி இலையின் மேல்பாகம் வெளில தெரியறதோன்னோ அதுல தான் கறிகாய் பதார்த்தங்களை அப்ரதக்ஷணமா பரிமாறணும்.

    தயிர் பச்சடி:- தயிர்ல வெள்ளரிப்பிஞ்சு/ காக்டிக்காய் நறுக்கிப் போட்டு, உப்பும் அரச்சு வச்சிருக்கிற மிளகுஜீரக பொடி போடணும்.
    வெல்ல பச்சடி:- சாதாரணமா மாங்கா/ மாம்பழத்தால பச்சடி பண்ணுவா. பச்சை நார்த்தங்காய்/பாகற்காய் போட்டும் பண்ணலாம். விளாம்பழ சீஸனாயிருந்தா விளாம்பழ பச்சடி பண்ணா ரொம்ப ஸ்லாக்யம்.

    கறிகள்:- ப்ரதானமா வாழைக்காய் உள்ளிட்ட மூன்றோ அதற்கு மேற்பட்டோ கறிகள் பண்ணணும். கறிக்கு உகந்த காய்கள் பாகற்காய்/ கொத்தவரங்காய்/ அவரைக்காய்/ பலாப்பிஞ்சு/ ஆகும். சேப்பங்கிழங்கு கறியும் பிடிகருணைக்
    கிழங்கு மசியல் பண்ணலாம்.
    அடுத்து வருவல், பிரண்டை-கறிவேப்பிலை துகையல், மாங்கா+ இஞ்சி ஊறுகாய் பரிமாறணும். வறுவல்னா சேனைக்கிழங்கோ பாகற்காயோ இருக்கலாம்.
    பக்ஷணங்கள்:-எள்ளுருண்டை, பயத்த உருண்டை, அதிரஸம்
    (ஸொஜ்ஜியப்பம்) உளுத்தம் வடை, கோதுமைமா பூரி. இவற்றை இரண்டிரண்டாக போடணும் இந்த பக்ஷணங்கள் இலையின் இடதுபக்க மேல் கோடியில் அமையும்.

    பழங்கள்:- வாழை,மா, பலா முப்பழங்கள்னு சொல்லுவா. வாழைப்பழம் எல்லா சீஸன்லயும் கெடைக்கும். சிறுமலைப்
    பழம் விசேஷம். மா, பலா வுக்கு திராட்சை/ ஆரஞ்சு, சாத்துக்குடி சுளை போடலாம்.
    வாழையிலை தொன்னைகளில் ஒன்றில் பருப்பும் இன்னொன்றில் நெய்யும் வைக்கணும்.

    பதார்த்தங்கள் எல்லா பரிமாறினதும் அன்னம்(சாதம்) போடறச்சே கொஞ்சம் மந்த்ர ரிச்யுவல்ஸ் உண்டு. ஸ்ராத்தம் பண்ற கர்த்தா இலைக்கு எதிர்ல குத்துக்காலிட்டுண்டு உட்கார்ந்துண்டு இடது கை விரல் நுனிகளால் இலையை பிடிச்சுக்கணும். கர்த்தாவுக்கு வலப்பக்கமா இருந்துண்டு அன்னம் போடணும். சிப்பல் தட்டுல கொண்டுவந்த சாதம் பூராவையும் போட்டூடணும். சாதத்து மேல கொஞ்சம் அபிஹாரம் பண்ணணும். வாத்யார் சொல்ற மந்தரத்தை சொல்லிண்டு கர்த்தா பரிசேஷனம் பண்ணி, ப்ராம்ணருடைய வலது கை கட்டை விரலை பிடிச்சுண்டு பதார்த்தங்களை தொடர மாதிரி சுத்தணும். ப்ராம்ணருடைய தீர்த்த பாத்ரத்துல ஒரு ருத்ரணி தீர்த்தம் போடணும் இந்த ரிச்யுவல விஸ்வேதேவ ப்ராம்ணருக்கு செஞ்சாச்சு. அடுத்து இதேமாதிரி பித்ரு ப்ராமணருக்கும் பூணூலை வடமாக போட்டுண்டு ரிச்யுவலை பண்ணணும். பண்ணியாச்சா. வாத்யார் சொல்லர பரிசேஷண மந்தரத்தை கர்த்தா சொல்லிண்டிருக்கறச்சே ப்ராம்ணா பரிசேஷணம் பண்ணுவா. ஆபோசனம் போடணும். ப்ராம்ணா சாப்ட ஆரம்பிப்பா.

    கர்த்தா ப்ராம்ணாளுக்கு உபசாரம் சொல்லணம். ‘ ரொம்ப நாழியாயிடுத்து/ நாழியாகலை. பொறுமையா சாப்டுங்கோ. அவசரமில்ல. எதெது வேணுமோ
    அததை கேட்டு போட்டுண்டு சாப்டுங்கோ’ ன்னு சொல்றது தான் உபசாரம். பொரிச்ச கூட்டூ , மோர்ககுழம்பு லெமன் ரசம், தயிர்னு வரிசலா பரிமாறணும். பொரிச்ச கூட்டுக்கு அருகமான காய்கள் அவரைக்காய், கொத்தவரங்காய், வெள்ளரிக்காய், புடலங்காய் ஆகும். பயத்தம்பருப்பும் மிளகுஜீரக பொடியும் போட்ட பொரிச்ச கூட்டு. மோர்கொழம்புக்கு சேப்பங்கிழங்கு போடலாம்.ஈஸியா வடையுருண்டைகளையும் போடலாம். பயத்தம்பருப்பு கரைசல்ல மிளகுஜீரக பொடி போட்டு லெமனை பிழிஞ்சா ரசமாச்சு.

    அப்பப்போ ஏதாவது வேணுமான்னு கேட்டுண்டு பதார்த்தங்களை பரிமாறணும். மோர்க்கொழம்பு,ரசம், தயிர் போடறதுக்கு முன்னாடி சாதம் வேணுமான்னு கேட்டு போடணும். ரெண்டு பேரும் சாப்ட்டு முடிஞ்சதும் ஒரு ரிச்சுவல் உண்டு. ஒரு பெரிய சாதஉருண்டை(பிண்டம்)யும் கொஞ்சம் விகிரான்னமும் கொண்டுவந்து பித்ரு ப்ராம்ணர் இலைக்கு முன்னாடி வைக்கணும். வாத்யார் சொல்லும் மந்த்ரத்தை சொல்லிண்டு பிண்டப்ரதானம் பண்ணணும். ப்ராம்ணாளுக்கு உத்ராபோசனம் போடணும். பூணூலை வடமா போட்டுண்டிருக்கிற கர்த்தா அந்த பிண்டத்தை எடுத்துண்டு போய் கீழ வச்சு பூணூலை இடம் பண்ணிண்டு காக்காயை கூப்டணும். காக்கா போடற சத்தத்தை கேட்டூட்டு தான் ப்ராம்ணா எழுந்து கையலம்பணுங்கறது ஐதீகம்.
    தெவச சமையல் பதார்த்தங்கள் பித்ரு சேஷம் எனப்படும். கோத்ர தாயாதிகள் தவிர வேற யாருக்கும் போடக்கூடாது.
    மத்தவா சாப்டவுங்கூடாது. மீந்து போகாத அளவுக்கு சிக்கனமா பண்ணணும். தவறி மீந்துபோனா பசுமாட்டுக்கு போட்டூடணும். தெவச சமையல் பாத்ரங்களை ஆத்துல இருக்கறவாளே தான் தேய்ச்சுக்கணும்.
Working...
X